கடுப்பில் மத்திய அமைச்சர்கள்

Updated : ஜூன் 09, 2019 | Added : ஜூன் 08, 2019 | கருத்துகள் (48)
Share
Advertisement
புதிய அரசில், பல மாற்றங்களைச் செய்துள்ளார், பிரதமர் மோடி. முந்தைய அரசில் இருந்த அமைச்சர்கள் பலரது துறைகளையும் மாற்றிவிட்டார். இந்த மாற்றத்தால், இரண்டு அமைச்சர்கள் கடுப்பில் உள்ளனர். ஒருவர் ராஜ்நாத்சிங்; உள்துறையிலிருந்து ராணுவத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அமித்ஷாவிற்கு, உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 'பொறுப்பை ஏற்க, அமித்ஷா வருவார்; அப்போது, அவருடன் கைகுலுக்கி
மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத்சிங், அமித்ஷா

புதிய அரசில், பல மாற்றங்களைச் செய்துள்ளார், பிரதமர் மோடி. முந்தைய அரசில் இருந்த அமைச்சர்கள் பலரது துறைகளையும் மாற்றிவிட்டார். இந்த மாற்றத்தால், இரண்டு அமைச்சர்கள் கடுப்பில் உள்ளனர். ஒருவர் ராஜ்நாத்சிங்; உள்துறையிலிருந்து ராணுவத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். அமித்ஷாவிற்கு, உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. 'பொறுப்பை ஏற்க, அமித்ஷா வருவார்; அப்போது, அவருடன் கைகுலுக்கி விடைபெறலாம்' என நினைத்திருந்தார், ராஜ்நாத்சிங். ஆனால், தான் பொறுப்பை ஏற்கும் போது, ராஜ்நாத்தை கூப்பிடவேயில்லை, அமித்ஷா.


latest tamil newsஅடுத்ததாக, ராணுவ அமைச்சராகபொறுப்பு ஏற்கும் போது, அந்த துறையின் முந்தைய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னைவரவேற்பார் என எதிர்பார்த்தார், ராஜ்நாத்சிங். ஆனால், இவர் பதவி ஏற்கும் போது, நிர்மலா வரவேயில்லை. இதனால், எரிச்சலில் இருக்கிறாராம் ராஜ்நாத்சிங்.

இதற்கிடையே சிலர், 'ராஜ்நாத்சீனியர், எம்.பி., எனவே, அவர், லோக்சபா சபாநாயகராக நியமிக்கப்படலாம்' என சொல்கின்றனர். இதைக் கேட்டு கடுப்பான ராஜ்நாத்சிங், 'ஏற்கனவே வெறுத்துப் போயுள்ளேன். என் காயத்தில் ஏன் உப்பைத்தடவுகிறீர்கள்?' என, தனக்கு நெருக்கமானவர்களிடமும் எரிந்து விழுகிறார், அமைச்சர்.

இவரைப் போல, கோபத்தை வெளிக்காட்டாமல், உள்ளுக்குள்ளாகவே புழுங்கும் மற்றொரு அமைச்சர், நிதின் கட்கரி. முந்தைய அரசில், போக்குவரத்து துறை, கப்பல் துறை, நீர் வளம் ஆகியவை, கட்கரியிடம் இருந்தன. தமிழகத்திற்கு உதவும் வகையில, 'கோதாவரி - -காவிரி இணைப்பு நடந்தேதீரும்' என, அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தார். ஆனால், இவரிடமிருந்து நீர்வளத்துறை மற்றும் கப்பல் துறை பிடுங்கப்பட்டு, சிறு தொழில் துறை கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெறுப்பில் உள்ளார் கட்கரி.

Advertisement
வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balakrishnan Gurumurti - Boston MA,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-201901:35:24 IST Report Abuse
Balakrishnan Gurumurti மோடி சுயநல காரர் என்கிறது உண்மை போல் உள்ளதே . இந்த மாதிரி இவர் கடை பிடித்தல் எல்லாரும் மோடியை புரிந்துகொள்வார்கள் 2024 தெரடலில் மோடி பிறகு பிரதான மந்திரி யாரும் பிரகடனை செய்யமாட்டார்கள் என்பதே திண்ணமானது . உள்ளூர உடைதல் கப்பலை போல் பிஜேபி மூழ்கலாம் என்பேன் .
Rate this:
Cancel
swami - houston,யூ.எஸ்.ஏ
12-ஜூன்-201902:53:14 IST Report Abuse
swami I van orrhu earchi arse hole.varun ghandhi in saghuni.
Rate this:
Cancel
jagadeesan - Hosur,இந்தியா
10-ஜூன்-201917:25:11 IST Report Abuse
jagadeesan கண்டிக்க தக்கது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X