அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் : அமைச்சர் சண்முகம் அதிரடி

Updated : ஜூன் 09, 2019 | Added : ஜூன் 09, 2019 | கருத்துகள் (23)
Advertisement
பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் தோற்றோம் : அமைச்சர் சண்முகம் அதிரடி

வானுார்,''பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் தான், லோக்சபா தேர்தலில் தோற்றோம்,'' என, சட்டத் துறை அமைச்சர், சண்முகம் பேசியதால், கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் சட்டசபை தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக் கூட்டம், திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் நடந்தது. இதில், அமைச்சர் சண்முகம் பேசியதாவது:
மாநிலத்தில், யார் ஆள வேண்டும்; மத்தியில், யார் ஆள வேண்டும் என, தமிழக மக்கள், தெளிவாக தீர்மானித்து, தேர்தலில், ஓட்டு போட்டுள்ளனர்.நாங்கள், லோக்சபா தேர்தல் தோல்வியை, மக்கள் அளித்த எச்சரிக்கையாக, தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறோம்.
அதே நேரத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்ததால் தான், அ.தி.மு.க.,விற்கு வர வேண்டிய, சிறுபான்மையினர் ஓட்டுகள், கிடைக்காமல் போனது; அதனால் தான், தேர்தலில் தோல்வியடைந்தோம். தமிழகத்தில், 'நீட், ஜி.எஸ்.டி., - ஹைட்ரோ கார்பன்' உள்ளிட்ட அனைத்தும், மத்தியில் காங்., - தி.மு.க., கூட்டணியில் இருந்தபோது, ஒப்புதல் பெறப்பட்டது. இவற்றை, தற்போது, பா.ஜ., தொடர்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
agni - chennai,இந்தியா
09-ஜூன்-201913:08:18 IST Report Abuse
agni எம் ஜி ஆர்,ஜெயலலிதா இவர்களுக்கு பின்னால் உங்க கட்சியில அவங்க மாறி மக்கள் செல்வாக்கும் ,எதிர்கட்சிகளையும் பிரச்சனைகளையும் அடக்கி ஆளும் அரசியல் திறமையும் வாய்ந்த தலைவர் ஒருவர் கூட உங்களில் இன்று இல்லை. இது வரை மக்கள் அதிமுக அப்படிங்குற கட்சிக்காக யாரும் ஒட்டு போடல, எம் ஜி ஆர் ,ஜெயலலிதா எனும் இரு பெரிய சக்திகளுக்காக மட்டுமே வாக்களித்தனர்.ஜெ திடீரென மரணித்து விட்டார்,அவர் தனக்கு பிறகு அவரை போன்ற செல்வாக்கும் அரசியலும் புரிந்த ஒருவரை உருவாக்காமல் விட்டு விட்டார்,அதற்கேட்டார் போல் உங்கள் கட்சில் பலரும் தங்கள் எதிர்கால நலன் ,லாபம் கருதி தினகரன்,ஸ்டாலின் இந்த திருடர்கள் பின்னால் போயி விட்டனர். இதனால் ஜெ இருக்கும்பொது அடங்கி கிடந்த எதிர்க்கட்சிகள்,சீமான்,கமல்,பிற சமூக விரோத கும்பல்கள் பலர்,அவர் மறைந்த பின் ஆளும் கட்சியை எளிதில் கலைத்து தங்கள் அரசியல் பதவி,இலாபம் அடையும் நோக்கில் அரசுக்கு எதிராக மறைமுகமாக பிரச்னைகளை எழுப்பி தூண்டி விட்டு ஊடகங்கள்,மக்கள் பார்வையில் ஆளும் அரசை மக்கள் விரோதிகள் எனவும் அவர்களை மக்கள் தலைவர் போல் காட்டிக்கொள்கின்றனர். நீங்கள் ஜெ மறைவுக்கு பின் வந்த பிரச்சனைகளையும்,அவற்றை வன்முறையாகிய சமூகவிரோத கும்பல்களையும் சரியாக அடக்கி கையாளவில்லை,அது மட்டுமல்லாமல் நீங்கள் ஜெ மறைவிற்கு பின் மக்களுக்கு எந்த புதிய நலத்திட்டங்களையும் செய்யவில்லை ஆனால் கடந்த வருடம் ஒரே நாளில் பஸ் கட்டணத்தை மட்டும் எவ்வளவு உயர்த்தினீர்கள்,தற்போது பேருந்து கட்டணமே இரயில்கட்டணம் போல் உள்ளது .பேருந்தில் பயணம் செய்பர்கள் எப்படி புலம்பி உங்களை தூற்றுகிறார்கள் தெரியுமா இத்தனை கட்டணம் கொடுத்தும் உழைக்கும் சாமானிய மக்கள் பேருந்துகளில் நெரிசலில் நிற்க கூட முடியாமல் சிக்கி திணறி இதற்கு தான் இவ்வளவு கட்டணமா என புலம்புகின்றனர். இது போன்ற மக்களின் அடிப்படை பிரச்சனைகள்,கட்டண உயர்வுகள் இவற்றிற்காக இன்று எந்த ஒரு எதிர் கட்சிகளும் பெரிதாக போராடுவதில்லை.இந்த மக்களுக்கும் இந்த எதிர்க்கட்சிகள் பற்றியோ ,இந்த மக்கள் தொகை பெருக்கத்தால் வருங்காலங்களில் ஏற்படக்கூடிய அடிப்படை பிரச்சனைகள் குறித்தோ எந்த விழிப்புணர்வும் இல்லாமல் இன்று உள்ளனர். நீங்கள் ஜெ மறைந்தபின் எதிர்கொண்ட முதல் பெரிய தேர்தல் இது , அப்படி இருக்க மக்களுக்கு உங்கள் மேல் நம்பிக்கையோ,செல்வாக்கோ வரும் வகையில் மக்களுக்கு எந்த ஒரு வளர்ச்சி,நல திட்டங்களும் தராமல்,மக்கள் அடிப்படை பிரச்சனைகளை தீர்க்காமல் நாங்கள் தோற்க வேறொரு கட்சி தான் காரணம் என உங்கள் ஆள்காட்டி விரலை நீட்டுகிறீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
09-ஜூன்-201912:24:12 IST Report Abuse
Girija ப ம க ?
Rate this:
Share this comment
Cancel
svs - yaadum oore,இந்தியா
09-ஜூன்-201911:45:37 IST Report Abuse
svs இரெண்டு கட்சிகளும் இப்படி பேசுவது முதல் முறை அல்ல .....இதற்கு மேல் பாஜக , திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கக்கூடாது ....உள்ளாட்சி தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாமல் போட்டியிடலாம் ......இதற்கு மேல் கூட்டணி அமைந்தால் குடைச்சல் தான் மிஞ்சும் ....உள்ளாட்சி தேர்தலில் திராவிட கட்சிகளுக்குள் அறிவிக்கப்படாத கூட்டணி அமைந்தாலும் அமையும் .....கூட்டுறவு தேர்தலில் அப்படித்தானே நடந்தது ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X