அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர் சங்க தேர்தலில் திருப்பம் விஷாலை வீழ்த்த அ.தி.மு.க., வியூகம்

Added : ஜூன் 09, 2019
Advertisement

லோக்சபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றதும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து, நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்தார். இதனால், அதிருப்தி அடைந்துள்ள, அ.தி.மு.க., மேலிடம், நடிகர் சங்க தேர்தலில், விஷாலுக்கு எதிராக, ஐசரி கணேஷ் அணியை ஆதரிக்க திட்டமிட்டுள்ளது.

நடிகர் சங்கத்தின், புதிய நிர்வாகிகள் தேர்தல், 23ம் தேதி, சென்னையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், 'பாண்டவர் அணி' சார்பில், தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.எதிரணியில், பொதுச்செயலர் பதவிக்கு, விஷாலை எதிர்த்து, நடிகரும், தயாரிப்பாளருமான ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார்.

விஷால் அணியை தோற்கடித்து, ஐசரி கணேஷ் அணியை வெற்றி பெற வைக்க, ஆளுங்கட்சி மேலிடம், திரைமறைவில் வியூகம் வகுத்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, கோலிவுட் வட்டாரங்கள் கூறியதாவது:

கடந்த முறை, நடிகர் சங்க தேர்தல் நடந்த போது, ஜெயலலிதா முதல்வராக இருந்தார். அப்போது, நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார், பொதுச்செயலராக ராதாரவி ஆகியோர் இருந்தனர். சங்க கட்டடம், நிலம் விற்பனை போன்ற விவகாரத்தில், அவர்கள் மீது எழுந்த முறைகேடு புகார் காரணமாக, சரத்குமார் அணி தோல்வி அடைந்தது; விஷால் அணி வெற்றி பெற்றது.சரத்குமார் அணிக்கு, ஆளுங்கட்சியின் மறைமுக ஆதரவு கிடைக்கவில்லை.

ஜெயலலிதா நடுநிலையாக இருந்ததால், விஷால் அணி வெற்றி பெற்றது.தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் சரத்குமார் இடம் பெற்றுள்ளார். ராதாரவி, தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். லோக்சபா தேர்தலில், தி.மு.க., அமோக வெற்றி பெற்றதும், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து, விஷால் வாழ்த்து கூறினார். இந்த தகவல், அ.தி.மு.க., மேலிடத்திற்கு தெரிய வந்ததும், நடிகர் சங்க தேர்தலில், விஷாலை தோற்கடிக்க, உத்தரவு பிறப்பித்துள்ளது.

சரத்குமார், ராதாரவி ஆகியோர் மீது உள்ள குற்றச்சாட்டுகளால், அவர்களால் மீண்டும் போட்டி யிட முடியாது. எனவே, அவர்களின் ஆதரவாளர்களை வெற்றி பெற வைக்கும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குறிப்பாக, விஷாலுக்கு எதிராக, நடிகர் உதயா, பொதுச்செயலர் பதவிக்கு போட்டியிடுவார் என்ற, எதிர்பார்ப்பு இருந்தது. தற்போது, அவர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

ஆளுங்கட்சி தரப்பில், அமைச்சர் ஒருவரிடம், விஷாலை தோற்கடிக்கும் பொறுப்பு வழங்கப் பட்டு உள்ளது. அந்த அமைச்சரும், திரைமறைவில் இருந்து இயக்க துவங்கியுள்ளதால், நடிகர் சங்க தேர்தல் சூடுபிடித்துள்ளது.இவ்வாறு, கோலிவுட் வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X