அரசியல் செய்தி

தமிழ்நாடு

வக்பு வாரியத்தை தக்க வைக்க, எம்.பி., பதவி அன்வர் ராஜா, உசேன் போர்க்கொடி

Added : ஜூன் 09, 2019
Advertisement

'தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள, தங்களுக்கு ராஜ்யசபா, எம்.பி., பதவி வழங்க வேண்டும்' என, முன்னாள், எம்.பி., அன்வர் ராஜாவும், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தமிழ்மகன் உசேனும், முதல்வரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக, அ.தி.மு.க., முன்னாள், எம்.பி., அன்வர் ராஜா உள்ளார். வாரிய உறுப்பினர்களாக, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் என, 11 பேர் உள்ளனர். எம்.பி.,க்களுக்கான கோட்டாவில், உறுப்பினரான அன்வர் ராஜா, வாரிய தலைவரானார். லோக்சபா தேர்தலில், அவர் போட்டியிடவில்லை.தற்போது, எம்.பி., பதவி இல்லாததால், அவர் வாரிய தலைவர் பதவியை இழந்துள்ளார்.

வக்பு வாரிய தலைவர் பதவியில் தொடர, தன்னை ராஜ்யசபா, எம்.பி.,யாக்கும்படி, முதல்வர், இ.பி.எஸ்.,சிடம் கடிதம் கொடுத்துள்ளார்.ஏற்கனவே, எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் தமிழ்மகன் உசேன், வக்பு வாரிய தலைவராக முயற்சித்தார். அவருக்கு அப்பதவியை வழங்க, முதல்வர் மற்றும் துணை முதல்வர், சம்மதம் தெரிவித்தனர்.வாய்ப்புகடைசி நேரத்தில், அன்வர் ராஜா, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவை பெற்று, வக்பு வாரிய தலைவரானார்.
தற்போது, வாரிய தலைவர் பதவி கிடைக்காத நிலையில் இருந்த, தமிழ்மகன் உசேனும், ராஜ்யசபா பதவி கேட்டு, முதல்வரிடம், மனு அளித்துள்ளார்.இருவரும், தங்களை ராஜ்யசபா, எம்.பி.,யாக்கா விட்டால், வக்பு வாரிய தலைவர் பதவி, தி.மு.க., கைக்கு சென்று விடும் எனக் கூறியுள்ளனர். ஏனெனில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள, முஸ்லிம் லீக் சார்பில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ் கனி, எம்.பி.,யாக தேர்வாகி உள்ளார்.

அ.தி.மு.க., சார்பில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எம்.பி., யாக தேர்வு செய்யப்படா விட்டால், நவாஸ் கனி உறுப்பினராகி, வக்பு வாரிய தலைவராக வாய்ப்புள்ளது.முயற்சிஅதன் உறுப்பினர்களில், தி.மு.க., ஆதரவாளர்கள், நான்கு பேர் உள்ளனர். அடுத்த மாதம் நடக்கவுள்ள, ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க.,விற்கு மூன்று, எம்.பி.,க்கள் கிடைக்கும். அதில், ஒன்றை அன்புமணிக்கு வழங்குவதாக, உறுதி அளித்துள்ளனர்.

மீதமுள்ள, இரண்டு, 'சீட்'டுக்கு, மைத்ரேயன், தம்பிதுரை, முனுசாமி, கோகுல இந்திரா, விஸ்வநாதன் என, பலரும் முயற்சித்து வருகின்றனர். இதனால், யாருக்கு பதவி வழங்குவது எனத் தெரியாமல், முதல்வர் தவித்து வருகிறார்.எனவே, அன்வர் ராஜா, தமிழ் மகன் உசேன் ஆகியோருக்கு பதவி கிடைக்குமா என்பது, சந்தேகமாகவே உள்ளது. அதேநேரம், வக்பு வாரிய தலைவர் பதவி, தி.மு.க.,விற்கு செல்லா மலிருக்க, தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ளவும், முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X