லோக்சபா தேர்தலில் இழந்த, பெண்களின் ஆதரவை, உள்ளாட்சி தேர்தலில் மீட்க, 500 மது கடைகளை மூட, அ.தி.மு.க., அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், அரசு நிறுவனமான, 'டாஸ்மாக்' மட்டுமே, சில்லரை கடைகள் வாயிலாக, மது விற்பனையில் ஈடுபட்டு உள்ளது. முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 சட்டசபை தேர்தலின் போது, 'அ.தி.மு.க., மீண்டும், ஆட்சிக்கு வந்தால், படிப்படியாக, மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' என்றார்.அதன்படி, மீண்டும், முதல்வராக பொறுப்பேற்ற அவர், 500 மது கடைகளை மூடுவதுடன், மது கடைகள் திறக்கும் நேரத்தையும், காலை, 10:00 மணிக்கு பதில், மதியம், 12:00 மணிக்கு மாற்றினார்.
ஜெயலலிதா மறைவால், முதல்வரான, இ.பி.எஸ்., 2017ல், 500 மது கடைகளை மூட உத்தர விட்டார். ரூ.1,000இதைத் தொடர்ந்து, 2018ல், 500 கடைகளை மூட, தமிழக அரசு முடிவு செய்தது. ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளின்படி, அரசு ஊழியர்களுக்கு, சம்பளம் உயர்த்தப்பட்டதால், அரசுக்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால், மது கடைகளை மூடினால், வரி வருவாய் இழப்பு ஏற்படும் எனக் கருதி, தொடர்ந்து மது கடைகள் மூடும் திட்டம் கைவிடப்பட்டது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பெண்களின் ஓட்டுகளை கவர, அ.தி.மு.க., முடிவு செய்தது. இதற்காக, 500 மது கடைகளை மூடுவது அல்லது மது விற்பனை நேரத்தை குறைத்து அறிவிக்க, அரசு திட்டமிட்டது.இந்த சூழலில், ரேஷன் கடைகளில், பொங்கலை முன்னிட்டு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பொருட்களுடன், 1,000 ரொக்கம் வழங்கப்பட்டது. இதனால், ஏற்பட்ட நிதி தேவை காரணமாக, மது கடைகளை மூடும் அறிவிப்பு வெளியாகவில்லை.
லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தாலும், 22 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்தலில், 9ல் வென்று, அ.தி.மு.க., ஆட்சியை தக்க வைத்துள்ளது. அறிவிப்புஇந்த ஆண்டின் இறுதிக்குள், உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது.இதனால், லோக்சபா தேர்தலில், பெண்களின் ஓட்டுகளை இழந்த, அ.தி.மு.க., தலைமை, அதை உள்ளாட்சி தேர்தலில் கைப்பற்ற, 500 மது கடைகளை மூட திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சட்டசபை கூட்டத்தொடரில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.