அணுக்கழிவு மையம்: ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

Added : ஜூன் 09, 2019 | கருத்துகள் (59) | |
Advertisement
சென்னை:'கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை, உடனடியாக கைவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு உலையில் சேகரமாகும் அணுக்கழிவுகளை, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளேயே, சேமித்து வைக்க, மத்திய அரசு திட்டமிடுகிறது.கூடங்குளம்
 அணுக்கழிவு மையம்: ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

சென்னை:'கூடங்குளம் அணு உலை வளாகத்திலேயே, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை, உடனடியாக கைவிட வேண்டும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணு உலையில் சேகரமாகும் அணுக்கழிவுகளை, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளேயே, சேமித்து வைக்க, மத்திய அரசு திட்டமிடுகிறது.கூடங்குளம் அணு உலை தொடர்பான வழக்கில், மே, 6ல் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், 15 கட்டளைகளை பிறப்பித்தது. அணுக்கழிவுகளை, உலைக்கு வெளியே வைப்பதற்கான வசதியை, ஐந்து ஆண்டுகளில் ஏற்படுத்த வேண்டும் என்பது, முக்கியமான நிபந்தனை; அது, இன்னும் நிறைவேற்றப்படவில்லை.இந்நிலையில், 2022க்குள் அணுக்கழிவுகள் சேமிப்பு மையத்தை கட்டி முடிக்க, உச்ச நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.கூடங்குளம் வளாகத்திற்கு உள்ளேயே, அணுக்கழிவுகள் சேமிப்பு மையம் கட்ட, அடுத்த மாதம், 10ம் தேதி, ராதாபுரத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடக்கும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது; இது, பேரதிர்ச்சி அளிக்கிறது.கூடங்குளத்தில், அணுக்கழிவுகள் சேமிப்பு மையம் அமைக்க, தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது.நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்து, தெளிவான திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கும் வரை, கூடங்குளத்தில் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும்.கருத்துகேட்பு கூட்டத்தில், தி.மு.க., - எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்று, தங்கள் எதிர்ப்புகளை, அழுத்தமாகப் பதிவு செய்வர். கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விஷயத்தில், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிக்கையை, மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் வைத்து, அணுக்கழிவுகள் சேமிப்பு மையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JSS - Nassau,பெர்முடா
11-ஜூன்-201921:04:04 IST Report Abuse
JSS தளபதி, கனிமொழி மாறன் , பாலு , ரெட்டச்சகன் வீட்டில், பண்ணைகளில் கொட்டலாமே. அணு உலைகள் இருக்கும் இடத்திலதான் கொட்டக்கூடாது, இவர்கள் வீடுகளில் , பண்ணைகளில் கொட்டலாமே.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-201920:20:17 IST Report Abuse
Matt P நிரந்தர கழிவு மையம் அமைப்பது குறித்து, தெளிவான திட்டத்தை, மத்திய அரசு உருவாக்கும் வரை, கூடங்குளத்தில் மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும்- மு. க. சுடலை ….கூடங்குளம் அணுநிலையமே வேண்டாம் என்றார்கள் .. இப்போது உற்பத்தியை நிறுத்த வேண்டும் ...என்கிறார். ...எந்த ஒரு தொழிற்சாலையை எந்த ஒரு கட்சி சார்ந்த அரசு கொண்டு வந்தாலும் மக்களுக்கு ஏற்படும் சாதக பாதகங்களை ஆராய்ந்து தான் கொண்டு வருவார்கள் . ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அடிக்கல் நாட்ட அடுத்து வரும் அரசு அதை திறக்கிறது. ..காங்கிரஸ் அடிக்கல் நாட்டியது என்று அரசியல் காழ்புணர்ச்சியோடு மூடியிருக்கலாமே . கூடங்குளம் மக்களுக்கு இருட்டை போக்க உதவுகிறது. கழிவுக்கு ஒரு வழி காண்பார்கள் என்று நம்புவோம். ..சாதக பாதகம் இல்லாமல் வாழ்க்கையே இல்லை ...உற்பத்தியை நிறுத்த வேண்டும் என்று நீங்கள் கூவுகிற கூச்சல் எல்லாம் மத்திய அரசின் காதுகளில் எட்டுமா என்றால் ..
Rate this:
Cancel
Anantha Subramanian - Bangalore,இந்தியா
11-ஜூன்-201912:59:32 IST Report Abuse
Anantha Subramanian இறைச்சி கழிவுகள் லாரி மூலம் வந்து தமிழ் நாட்டில் கொட்ட படுகிறது. இது பல வருஷங்களாக நடந்து வரும் உண்மை. இதுக்கு என்ன போராட்டம் நடத்த போகிறீரகள்.
Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
11-ஜூன்-201919:06:48 IST Report Abuse
Matt Pபோராட்டமா? ...கட்சிக்காரங்க யாரும் இது வரை என் கவனத்து கொண்டுவரவில்லை ..நாளைக்கே பொதுக்குழுவை கூட்டி சொல்லாதவநுகளை ஒரு சாடு சாடி பிரியாணி அலுப்பு மருந்துக்கு ஏற்பாடு செய்து க்கொடி பிடித்து கும்மாளமிட்டு போராட ஏற்பாடு செய்துட்டா போச்சு ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X