500 விழிப்புணர்வு வீடியோக்கள் பதிவேற்றம்; அதற்கு பல லட்சம் ரசிகர்கள்; பெண்களின் அழகே முடிதான் என்றிருக்கும்போது, 'கேன்சர்' விழிப்புணர்வுக்காக, 'மொட்டை' அடித்து கவனத்தை ஈர்த்தது; மனித நேயம்; அன்பு, பாசம், உறவுகள், உறவு சிக்கல்கள், சமூக பிரச்னைகள்; உலகியல் நடப்புக்கள் என அனைத்து சமூக ஊடகங்களிலும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து, தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி முத்திரை பதித்து வருகிறார் தொகுப்பாளினியாக இருந்து, நடிகையாக உருவெடுத்துள்ள லயா!
திண்டுக்கல் மாவட்டம் தாமரைப்பாடியை சேர்ந்த தர்மராஜ், ரூபிணி மூத்த மகள் லயா. பள்ளிப்படிப்பை திண்டுக்கல் அண்ணாமலையார் பெண்கள் பள்ளியிலும், பி.காம்., இ-காமர்ஸ் படிப்பை ஜி.டி.என்., கலை அறிவியல் கல்லுாரியிலும் முடித்தவர். தற்போது சமூக வலை தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு கடந்த ஓராண்டாக ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட ரசிகர்களை பெற்று உள்ளார்.
அவர் தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்கு அளித்து பேட்டி...
* வீடியோ ஜாக்கி வாய்ப்பு கிடைத்தது?
திண்டுக்கல்லில் லோக்கல் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தேன். அந்த அனுபவத்தால் வீடியோ ஜாக்கியாக உயர முடிந்தது. பின் தனியார் 'டிவி' யில் தொகுப்பாளினி வாய்ப்பு வந்தது. * இணையத்தில் கவிதை ஆர்வம் எப்படி வந்தது?
கவிதை, நாவல்களை படித்ததில்தான் எனக்கு கருப்பொருள் கிடைத்தது. தொடர்ந்து இணையத்தில் வீடியோ பதிவேற்றம் செய்ய முடிவு செய்தேன். எனது அலைபேசியில் வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்தேன். அது பிரபலமடைந்து ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. 500க்கும் மேல் விழிப்புணர்வு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளேன்.
* 'புற்றுநோய்' பாதித்த பெண்களுக்கு நீங்கள் கூறும் ஆறுதல்...புற்றுநோய் எனக்கு கிடையாது. நாமக்கல் மாவட்டம் தங்கம் கேன்சர் இன்ஸ்டிடியூட்' என்ற மருத்துவமனையில் புற்றுநோய் பாதித்த பெண்கள் மத்தியில் உரையாட சென்றிருந்தேன். அப்போது முடி உதிர்ந்தால் ஏன் நீங்கள் பணிக்கு செல்லலாமே என்றேன். அதில் ஐந்து பெண்கள் உங்களுக்கு முடி இருக்கிறது. பணிக்கு செல்கிறீர்கள். எங்களின் நிலையை பாருங்கள்'', என்றார்கள். எனக்கு வருத்தம் ஏற்பட்டது. உடனே நான் மொட்டை அடித்தால் அந்த நம்பிக்கையில் பணிக்கு செல்வீர்களா என்றேன். சம்மதம் தெரிவித்தனர். சலுானுக்கு சென்று நான் மொட்டை அடித்து மறுநாள் அங்கு சென்றேன். என்னை பார்த்த அந்த 5 பேர் பணிக்கு தைரியமாக சென்றனர். நான் ஏற்படுத்திய விழிப்புணர்வுக்கு கிடைத்த சிறந்த பரிசாக இதை கருதுகிறேன். அதனால் செல்லும் இடங்களில் எல்லாம் புற்றுநோய் பாதித்த பெண்களுக்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.
* உங்கள் தமிழ் உச்சரிப்பு 'இலங்கை தமிழ்' என ரசிகர்கள் கூறுகிறார்களே?துாய தமிழில் பேசுகிறேன். மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பேசும் தமிழ்தான் நான் பேசுவது. துாய தமிழ் பேச வேண்டும் என்ற விழிப்புணர்வுக்காக அவ்வாறு பேசி வருகிறேன். துாயதமிழை பேசி இன்றைய இளைஞர்களுக்கு பழக்கப்படுத்த வேண்டும் என்பது எனது ஆசை. * சினிமா வாய்ப்புக்கள் குறித்து?விஜய்சேதுபதி, ஜீவா, ஆர்யா நடிக்க உள்ள மூன்று படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரை வாழ்த்த 96882 88575
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE