கேள்வி கேட்கும் இடத்தை விரும்புகிறேன் : ஜி.வி.பிரகாஷ் பளிச்| Dinamalar

கேள்வி கேட்கும் இடத்தை விரும்புகிறேன் : ஜி.வி.பிரகாஷ் பளிச்

Added : ஜூன் 09, 2019 | கருத்துகள் (3)
கேள்வி கேட்கும் இடத்தை விரும்புகிறேன் : ஜி.வி.பிரகாஷ் பளிச்

இசையமைப்பாளராக திரை பயணத்தை துவங்கி ஹீரோவாக களமிறங்கி ஸ்டைலிஷ் அவதாரம் எடுத்து வரும் ஜி.வி.பிரகாஷ் தன் இசை, நடிப்பு அனுபவங்கள் குறித்து மனம் திறக்கிறார்.
* இசை, நடிப்பு எப்படி சமாளிக்கிறீங்க?சூட்டிங் இல்லாத நாட்களில் இசையமைப்பேன். நான் வேகமாக இசையமைத்து விடுவேன். இரண்டிலும் தனி கவனம் செலுத்துறேன்.
* முதல் முறை சூர்யா படத்துக்கு இசை?ஒரு நல்ல கதை சூழலில் படத்துக்கு சூர்யாவுக்காக இசையமைக்கிறேன். ஏர் டெக்கான் கோபிநாத் சுயசரிதை கதை தான் இந்த படம். இசையமைக்க நல்ல வாய்ப்பு உள்ள வித்தியாசமான கதை.
* மீண்டும் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி?இதுவரை தனுஷ்க்கு 'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'மயக்கம் என்ன' படங்களுக்கு இசை அமைத்தேன். மூன்றும் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள். இந்த படத்தின் கதைக்களம் திருநெல்வேலியை சுற்றி நகர்கிறது. தனுஷ் நடிப்பு வித்தியாசமாக இருக்கும்.
* நிறைய படங்களில் நடிக்கிறீர்களே ?இந்த ஆண்டு 'சர்வம் தாளமயம்', 'குப்பத்துராஜா', 'வாட்ச்மேன்' வெளியானது. நிறைய படங்கள் நடிப்பது நல்ல விஷயம் தானே.
* சில கதைகள் உங்களுக்கு ஒத்து வரலியே?நான் இப்படி தான் படம் நடிப்பேன் என ஒரு வட்டத்துக்குள் வர விரும்பவில்லை. எல்லா வித கதைகளிலும் நடிக்க விரும்புகிறேன். 'சிவப்பு பச்சை மஞ்சள்' படம் பைக் ரேசர் கதை. எப்படி பைக் ஓட்டுவார்கள், மேனரிசம், எப்படி பேசுவார்கள் என்பதை கவனித்து நடித்துள்ளேன். பைக் ரேசர் பசங்களோடு தான் சுற்றிக் கொண்டு இருந்தேன். கை, கால் எல்லாம் அடிபட்ட அனுபவம் இருக்கு.
* சித்தார்த் உடன் நடித்த அனுபவம்?அவரது 'பாய்ஸ்' படம் வெளியாகும் போது நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன். பழகுவதில் சின்ன புள்ள மாதிரி. இரண்டு பேருக்குமே சமூக நலனில் ஆர்வம் உண்டு. நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
* இப்போது நடிக்கும் படங்கள்?'ஜெயில்' படம் முடிந்தது. அடுத்து இயக்குனர் எழில் படம், 'பிக் பாஸ்' ரைசாவுடன் ஒரு படம் பண்றேன்.
* அரசியல் ஆர்வம் உண்டா ?ஜல்லிக்கட்டு தொடங்கி கஜா புயல், நெடுவாசல் வரை என்னை ஈடுபடுத்தி உள்ளேன். எந்த அரசியல் நோக்கமும் எனக்கு இல்லை. நான் கேள்வி கேட்கும் இடத்தில் இருக்க விரும்புறேன். கட்சியில் சேர்ந்தால் கேள்வி கேட்க முடியாது.
* சேவை செய்யும் மனிதர்கள் குறித்து ?சமூகத்தில் நிறைய நல்ல விஷயங்கள் செய்கிறார்கள்; அவர்கள் வெளியே தெரிவதில்லை. இது போன்ற சேவை மனிதர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து வணிக நோக்கம் இல்லாமல் என் யூ டியூப் சேனலில் மாதம் ஒருமுறை வெளியிட உள்ளேன். சமீபத்தில் ஜவ்வாது மலையில் அரசு பள்ளி ஆசிரியை மகாலட்சுமியை பேட்டி எடுத்தேன்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X