பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஹிந்திக்கு பெருகும் ஆதரவு: புள்ளி விவரம்

Updated : ஜூன் 09, 2019 | Added : ஜூன் 09, 2019 | கருத்துகள் (100)
Advertisement
ஹிந்தி, தமிழகம், மாணவர்கள்

சென்னை: தமிழகத்தில் ஹிந்தி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலானவர்கள், சிபிஎஸ்இயுடன் இணைந்த பள்ளிகளில் படிக்கின்றனர்.

'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் முன்னாள் தலைவர், கஸ்துாரி ரங்கன் தலைமையிலான, 11 பேர் அடங்கிய குழு, தேசிய அளவிலான புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், 'நாடு முழுவதும் மும்மொழி கொள்கை அமல்படுத்தப்படலாம்' என, பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. ஹிந்தி பேசாத மாநிலங்களில், தாய்மொழி மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றோடு, ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்றும், ஹிந்தி பேசும் மாநிலங்களில், ஏதாவது ஒரு மொழியை மூன்றாவது மொழிப் பாடமாக கற்பிக்க வேண்டும் என்றும், அதில் கூறப்பட்டிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகிளம்பியது. இதனை தொடர்ந்து ஹிந்தி கட்டாய மொழிப்பாடம் அல்ல என மத்திய அரசு அறிவித்தது.


இந்நிலையில், தென் மாநிலங்களில் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்த அமைக்கப்பட்ட தக்சின பாரத் ஹிந்தி பிரசார சபா மூலம், தமிழகத்தில், ஹிந்தி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த 2009 - 2010 காலகட்டம் முதல் அதிகரித்து வருகிறது. அப்போது தான், சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. இதனால், சிபிஎஸ்இ கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகரிக்க துவங்கியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 98 சிபிஎஸ்இ பள்ளிகள் தற்போது, 950 பள்ளிகள் உள்ளன. இதனை தொடர்ந்து, ஹிந்தி பிரசார சபா மூலம் நடக்கும் ஹிந்தி தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திலிருந்து 5.7 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்தை போன்று, வேறு எந்த தென் மாநிலங்களிலும் ஹிந்தி படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

ஹிந்தி பிரசார சபாவில், முதல்நிலை தேர்வை ஆண்டுதோறும் இரண்டு முறை நடத்துகிறது. இதில், பள்ளிகளில் ஹிந்தி மொழி படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வை அதிகம் பேர் எழுதுகின்றனர். பிப்ரவரி மாதம் நடக்கும் தேர்வை 30 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர். ஜூலை மாதத்தில் நடக்கும் தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதுகின்றனர். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் படிப்பதால் மட்டும் போதாது. ஹிந்தியையும் தங்களது குழந்தைகள் படிக்க வேண்டும் என பெற்றோர் விரும்புவதை காட்டுகிறது என தக்சின பாரத் ஹிந்தி பிரசார சபா நிர்வாகி ஒருவர் கூறினார்.
இந்த சபா நடத்தும் தேர்வை, கடந்த
2009 - 2,18,805
2010 - 2,30,573
2011 - 2,94,457
2012 -3,77,292
2013 - 4,39,860
2014 -4,92,829
2015 -5,23,293
2016 -5,53,493
2017 -7,74,192
2018 - 5,70,798 பேர் தேர்வை எழுதியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (100)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srini - MUMBAI,இந்தியா
17-ஜூன்-201910:07:40 IST Report Abuse
Srini நம் சுதந்திரம் அடைந்த பிறகு நமக்கு என்று ஒரு தேசிய மொழி தேவை, பிராந்திய மொழி தேவையின் அவசியம் கட்டாயமாக்க வேண்டும் ஆனால் தேசிய மொழியான ஹிந்தியையும் படிக்க நம்முடைய குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும், நம்முடைய குழந்தைகள் தேசிய அளவில் போட்டி போட்டு வெற்றி பெறவேண்டுமெனில் ஹிந்தி அவசியம் கற்றுக்கொள்ள கொள்ள வேண்டும். கட்டு மரமும் சுடலையும் அவர்களின் குழந்தைகளை ஆங்கிலமும் ஹிந்தியும் கற்றுக்கொள்ள வைத்துள்ளனர் ஆனால் நம்முடைய குழந்தைகளை படிக்க வைக்க அனுமதிப்பதில்லை, ஏனனில் அவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் அதனால்தான், ஹிந்தியை எதிர்க்கின்ற வரை இவர்களுக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Kumar - Chennai,இந்தியா
16-ஜூன்-201912:21:51 IST Report Abuse
Kumar எஸ் வீ சேகர் சொன்னார் நா உலகம் முழுவதும் சுத்தி வந்து விட்டேன் ஆனால் எனது வீடு வாசலில் வேலை பார்க்கும் குர்க்கா விடம் ஹிந்தியில் பேச தெரிய வில்லை என்று, ஹிந்தி தெரியாத அவர் உலகம் சுத்தி விட்டார், அது தெரிந்த குறுக்கா இன்னும் வாசலில் வேலை பார்க்கிறார், முதலில் ஹிந்தி காரவர்கள் தான் நமது பழைமையான தமிழ் மொழியை கற்க வேண்டும்,
Rate this:
Share this comment
Cancel
PRAVEEN - Chennai,இந்தியா
10-ஜூன்-201916:57:14 IST Report Abuse
PRAVEEN தயவு செய்தி இனி தமிழில் நாளிதழ் நடத்துவதற்கு பதில், இந்தியில் நடத்தலாம்... உங்களுக்கு அதிக சர்க்குலேஷன் கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X