காங்., மூத்த தலைவர், வீரப்ப மொய்லி: கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை, ராகுல் கைவிட வேண்டும். ராஜினாமா செய்வதாக இருந்தால், கட்சியை வழிநடத்தக் கூடிய, தகுதி வாய்ந்த தலைவர் யார் என்பதை அறிவிக்க வேண்டிய பொறுப்பும், அவருக்கு உள்ளது.
டவுட் தனபாலு: தலைவர் பதவி மேல, உங்களுக்கும் ஒரு கண்ணு இருக்கும் போல... அடுத்த தலைவர் யார் என்பதை, கட்சியின், செயற்குழு, பொதுக்குழு, உயர்மட்ட குழுக்கள் தேர்வு செய்யும் என்பதுதானே, ஜனநாயகம்... ராகுல் கைகாட்ட வேண்டுமென கேட்பது, எந்த வகையில் நியாயம் என்ற, 'டவுட்' வருதே...!
தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை: 'நீட்' தேர்வால், அரசு பள்ளி மாணவர்களுக்கு, வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு
தவறானது. சுய லாபம், சுய அரசியலுக்காக, அனைத்திலும் அரசியல் செய்கின்றனர். மாணவர்களே, மற்ற மொழிகளை கற்க விரும்பினாலும், எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன.
டவுட் தனபாலு: எதிர்க்கட்சிகள் மட்டுமா தடுக்குது... உங்களின் கூட்டணி கட்சியான, அ.தி.மு.க., - பா.ம.க., உள்ளிட்ட கட்சிகளின்
நிலைப்பாடு, செயல்பாடு என்ன... தவறைத் தட்டிக் கேட்பதில் எதற்கு, இவ்வளவு பாரபட்சம் என்பது தான், என்னோட, 'டவுட்!'
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா: ஜெயலலிதாவால் அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர், கட்சி தலைமையை ஏற்க வேண்டும். அ.தி.மு.க.,வுக்கு ஒரே தலைமை தேவை. தற்போது, ஆளுமை திறனுடைய தலைவர் இல்லை.
டவுட் தனபாலு: இவ்வளவு சொல்லிட்டீங்க... ஜெயலலிதாவால், அதிகம் அடையாளம் காட்டப்பட்டவர்னு, யாரைச் சொல்றீங்க... இப்போது, கட்சி
யின் முதன்மை அதிகாரம், யாரிடம் இருக்கு... நீங்க, யாரை மனசுல வைத்து, இப்படி ஒரு கோரிக்கை வைக்குறீங்க என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!