அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பன்னீர் செல்வத்தை
வெளியேற்ற சதியா?

சென்னை: கட்சிக்கு தலைமை பன்னீர்செல்வம் என்றாலும் ஜெயலலிதாவை போல அவரால் அதிகாரத்துடன் செயல்பட முடியவில்லை.

Admk,OPS,ஓபிஎஸ்.,பன்னீர் செல்வம், வெளியேற்ற,சதியா?


முதல்வர் என்ற சர்வ அதிகாரம் பழனிசாமியிடம் இருப்பதால் அவரை கலந்தாலோசித்து தான் எந்த ஒரு முடிவையும் கட்சி ரீதியாக எடுக்க முடிகிறது. அதேபோல பழனிசாமியும் கட்சியில் சுயமாக செயல்பட முடியாது.

பன்னீர்செல்வத்துடன் ஆலோசித்து தான் வேட்பாளர் தேர்வு, நிர்வாகிகள் நியமனம் போன்ற விஷயங்களில் அவரால் முடிவெடுக்க முடியும்.

இதன் காரணமாக மாநில நிர்வாகிகள் பதவிகளில் இருவரின் ஆதரவாளர்களும் உள்ளனர். மாவட்ட செயலர்களிலும், பொதுக்குழு உறுப்பினர்களிலும் இருவருக்கும் சமமான ஆதரவு இருக்கிறது. எனவே தான் துணை முதல்வர் பதவியிலிருந்து விலகி கட்சியின் பொதுச்செயலர் பதவியை பன்னீர்செல்வம் ஏற்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் முதல்வர் பதவியை வைத்திருப்பவர் தான் கட்சித் தலைமை பதவியையும் வைத்திருக்க வேண்டும் என்பதால் இரு பதவிகளையும் பழனிசாமியிடம் தர வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

இதற்கிடையில் மத்திய அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து கட்சியின் ஆட்சிமன்ற குழுவில் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக பா.ஜ. மேலிடத்தில் பன்னீர்செல்வம் பேசியதாக பழனிசாமி தரப்பில் புகார் வாசிக்கப்படுகிறது. எனவே ஒற்றை தலைமை என்ற விவகாரத்தை கிளப்பி பன்னீர்செல்வத்தை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து வெளியேற்றும் சதி நடப்பதாக ஆளும்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.


Advertisement

வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-201908:05:48 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்அதான் திட்டமே..மணல் கொள்ளை சாமியை வெச்சி பாதி கட்சியை கரைச்சி காவியுடன் கலக்க வைக்க போடும் திட்டம். நடுவில் சதி, சிதி ன்னு கொஞ்சம் நாடகம்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
11-ஜூன்-201915:38:15 IST Report Abuse

இந்தியன் kumarஇறைவன் அருள் எந்த அரசும் ஆட்சியும் நீடிக்க முடியாது , எது நடக்க இருக்கிறதோ அது நன்றாக நடக்கும்.

Rate this:
narayanan iyer - chennai,இந்தியா
11-ஜூன்-201910:46:00 IST Report Abuse

narayanan iyerஇதுதான் உண்மையாக தோன்றுகிறது .பழனிச்சாமியின் ஆதரவாளர்தான்எடப்பாடியின் தூண்டுதலால் குரல் கொடுக்க தொடங்கியிருக்கிறார் என்று நினைக்கிறேன். கட்சித்தலைமை என்பது அவ்வளவு எளிதான பதவியில்லை . அதற்கு ஒரு கவர்ச்சியான முகம் , ஆளுமை கொண்டவர் வேண்டும் .எடப்பாடிக்கு கட்சியையும் ,முதல்வர் பதவியையும் தானே வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவேச பதவி வெறி வளர்ந்துவிட்டது . இது ஒரு சிக்கலான நிலைதான் . எனினும் தேன் கூட்டில் கல் எறிந்து வேடிக்கை பார்க்கிறார்கள் .எது எப்படி இருந்தாலும் அதிமுக அடுத்த தேர்தல்வரை அமைதிகாத்து ஒற்றுமையாக இருக்கவும்.

Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
16-ஜூன்-201908:06:30 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்பிரிக்கிறது, உடைக்கிறது இதல்லாம் தெரியாமல் இருக்குமா? ...

Rate this:
மேலும் 19 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X