அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வாய்ப்பூட்டு,admk,அ.தி.மு.க.,தடை,கோஷ்டிபூசல்,ஓ.பி.எஸ்.,இ.பி.எஸ்., கண்டிப்பு

சென்னை: ஒற்றை தலைமை விவகாரம் அ.தி.மு.க.வில் அனல் வீசச் செய்துள்ளது. இதையடுத்து இந்த விவகாரம் பற்றி வெளிப்படையாக பேச கட்சியினருக்கு அ.தி.மு.க. தலைமை வாய்ப்பூட்டு போட்டுள்ளது. அத்துடன் கோஷ்டி பூசலை தவிர்க்கவும் தற்போதுள்ள இரட்டை தலைமை நீடிக்க வேண்டுமா அல்லது பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலர் பதவியை உருவாக்கலாமா என்பது குறித்து விவாதிக்கவும் ஜூன் 12ம் தேதி மாவட்ட செயலர்கள் கூட்டத்துக்கு அவசர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் மட்டும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். உடன் பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷாவை டில்லியில் சந்தித்து தன் மகன் ரவீந்திரநாத்திற்கு பன்னீர்செல்வம் மத்திய அமைச்சர் பதவி கேட்டதாக தகவல் வெளியானது. அதேபோல முதல்வர் பழனிசாமி ஆதரவாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைத்தியலிங்கமும் 'சீனியர்' என்ற அடிப்படையில் மத்திய அமைச்சர் பதவி பெற காய் நகர்த்தினார். இதனால் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உள்கட்சி மோதலால் பா.ஜ. மேலிடம் இருவருக்கும் மத்திய அமைச்சர் பதவி வழங்கவில்லை.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா அளித்த பேட்டியில் ''அ.தி.மு.க.வுக்கு ஒரே தலைமை தேவை. ஆளுமை திறனுடைய தலைவர் வேண்டும். ஒற்றை தலைமையில் கட்சியை கட்டுப்பாட்டுடன் கொண்டு செல்ல வேண்டும். இரண்டு தலைமை இருப்பதால் முடிவு எடுக்க முடியவில்லை. சுயநலமற்ற ஒருவரை தலைமைக்கு தேர்ந்து எடுக்க வேண்டும். ஒரே தலைமையை உருவாக்குவது குறித்து பொதுக்குழுவில் வலியுறுத்துவோம்'' என்றார்.

அவரது கருத்தை ஆதரித்து மேலும் ஒரு எம்.எல்.ஏ.வும் நேற்று குரல் கொடுத்துள்ளார். குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வான ராமச்சந்திரன் கூறியுள்ளதாவது: ஒற்றை தலைமை என்பது வலிமையான, சுயநலமற்ற தலைமையாக இருக்க வேண்டும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தங்களின் குடும்பத்தை ஒதுக்கி வைத்து கட்சியே குடும்பம் என வாழ்ந்து மறைந்தனர். அ.தி.மு.க.வை யார் தன் குடும்பத்திற்காக மிரட்டினாலும் பிளவுபடுத்த எண்ணினாலும் அவரை மற்றொரு சசிகலாவாகவே அ.தி.மு.க. தொண்டர்கள் கருதுவர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியும் 'ஒற்றை தலைமை தான் வேண்டும். பொதுக்குழுவை கூட்டி தொண்டர்கள் ஓட்டு அளித்து பொதுச்செயலரை தேர்வு செய்ய வேண்டும்' என கூறியிருக்கிறார். இவர்களின் கருத்துக்கு எதிராகவும் அ.தி.மு.க.வில் சிலர் பேசி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செம்மலை ''ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை'' என்றும், முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா ''இரட்டை தலைமைக்கு எந்த எதிர்ப்பும் இல்லை'' என்றும் கூறியுள்ளனர்.

மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் ''இந்த விவகாரம் பற்றி பொதுக்குழுவில்

பேசி முடிவு எடுக்கப்படும்'' என்றும், ''இந்த விவகாரத்தால் கட்சியில் எந்த குழப்பமும் இல்லை'' என்று வனத்துறை அமைச்சர் சீனிவாசனும் கூறியுள்ளனர். இப்படி ஆளுக்கொரு விதமாக பேசுவதை தடுக்கும் வகையில் 'உட்கட்சி விவகாரங்களை யாரும் வெளியில் பேசக் கூடாது. கட்சியின் தேர்தல் முடிவுகள் பற்றியும் வெளியில் பேச வேண்டாம்' என அ.தி.மு.க. மேலிடம் வாய்ப்பூட்டு போட்டுள்ளது.

இதற்கிடையில் ஒற்றை தலைமை விவகாரம் அக்கட்சியில் நிலவுகிற கோஷ்டி பூசலை மேலும் வலுப்படுத்தி உள்ளது. ஒற்றை தலைமை கருத்துக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தால் பொதுக்குழுவைக் கூட்டி பொதுச்செயலர் என்ற பதவியை மீண்டும் ஏற்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இரட்டை தலைமையே தொடரலாம் என பெரும்பான்மை நிர்வாகிகள் கூறினால் இப்போதுள்ள நிலையே நீடிக்கும். இதில் என்ன முடிவெடுப்பது என்பது குறித்து விவாதிக்க வரும் 12ம் தேதி மாவட்ட செயலர்கள் தலைமை நிலைய நிர்வாகிகள் கூட்டத்திற்கு அ.தி.மு.க. தலைமை ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில்

நடக்கும் இக்கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க உள்ளதால் தலைமை விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'கட்டுப்பாடும், ஒழுங்கும் தேவை'

அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், இ.பி.எஸ்., ஆகியோர் நேற்று வெளியிட்ட அறிக்கை: சில நாட்களாக, கட்சியின் நிர்வாகிகள் சிலர், கட்சியின் செயல்பாடுகள் பற்றியும், இனி என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், ஊடகங்கள் வாயிலாக, வெளியிட்டு வரும் கருத்துகள், வரவேற்கத்தக்கவை அல்ல. நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும், கட்சியின் மீது அளப்பரிய அன்பும், பற்றும் இருக்கிறது; அந்த உணர்வுகளின் காரணமாகவே, இத்தகைய கருத்துகளை கூறி வருகின்றனர். இருந்தாலும், இடம், பொருள், ஏவல் அறிந்து, நாம் செயல்பட வேண்டும். ஊர் இரண்டுபட்டால், யாருக்கு கொண்டாட்டம் என்பதை, எல்லாரும் நன்கு அறிந்து வைத்திருக்கிறோம். நம்மை அழிக்க நினைப்பவர்களுக்கும், ஒரு நாளேனும் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என, பிதற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும், நம்முடைய சொல்லும், செயலும் உதவி செய்து விடக்கூடாது. கட்டுப்பாடும், ஒழுங்கும் கட்டாயம் தேவை. கட்சியின் நலன் கருதி, சில கருத்துகளை யார் கூற விரும்பினாலும், அதற்கென ஒரு நேரமும், சந்தர்ப்பமும், செயற்குழு, பொதுக்குழு என, பல்வேறு வாய்ப்புகளும் உள்ளன. நிர்வாகிகள், கட்சியின் நிர்வாக முறைகளை பற்றியோ, தேர்தல் முடிவுகளை பற்றிய தங்கள் பார்வைகள் பற்றியோ, கட்சியின் முடிவுகளை பற்றியோ, பொது வெளியில், கருத்து கூற வேண்டாம். ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் செயல்பட்டதை போன்றே, தொடர்ந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறி உள்ளனர்.Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
10-ஜூன்-201916:46:30 IST Report Abuse

Endrum Indianஓணானுக்கு ஒரு தலை தான் ஆகவே எங்கள் கட்சிக்கும் ஒரு தலை தான் வேண்டும் என்று கேட்பது போல இது தெரிகின்றது.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-ஜூன்-201920:34:38 IST Report Abuse

தமிழ்வேல் ஓணானுக்கு தலை ஒன்னுதான். ...

Rate this:
Santhosh Gopal - Vellore,இந்தியா
10-ஜூன்-201915:06:36 IST Report Abuse

Santhosh Gopalஅதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை என்பதற்கு இந்த உட்கட்சி பூசலே சாட்சி. இதுவே திமுகவாக இருந்தால் உதயநிதி சுடலை கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், தொண்டர்கள் சிங்கிள் டீயை குடித்துவிட்டு, பிரியாணி பொட்டலம் சாப்பிட்டுவிட்டு, குவாட்டர் அடித்துவிட்டு கை தட்டி விசில் அடித்து கொண்டாடுவான். திமுக இது போல கோஷ்டி பூசல் வராது ஏன் என்றால் அது குடும்ப கட்சியின் கம்பெனி. அதிமுகவில் யார் வேண்டுமானாலும் வரலாம் அதற்காக தான் இந்த குடும்பி பிடி சண்டை, இதையும் எடப்பாடி சமாளிப்பார். இது எல்லா கட்சிகளிலும் நடக்கக்கூடியது. எடப்பாடி இதை எல்லாத்தையும் சமாளித்து தான் இரண்டு வருடம் ஆட்சி நடத்தி வருகிறார். உண்மையில் இத்தனை நெருக்கடிகளையும் சமாளித்து ஆட்சி நடத்தி வருவதற்கு திறமை வேண்டும்.... கட்டுமரத்தில் புதல்வன் என்ற ஒற்றை பெயரை வைத்து கொண்டு முதல்வராக துடிக்கும் சுடலைக்கு இத்தனை திறமை இல்லை. எடப்பாடி இடத்தில சுடலை இருந்திருந்தால், அவ்வளவு தான்.

Rate this:
Vijay D Ratnam - Chennai,இந்தியா
10-ஜூன்-201914:45:56 IST Report Abuse

Vijay D Ratnamஅதிமுக கட்சிக்குள் பிளவு வராது. வலிமையான தலைமை இல்லாததால் அவர்களுக்குள் ஈகோ பிரச்சினை அவ்வப்போது தலைதூக்கும். இந்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவிகளை கலைத்து விட்டு கட்சிக்குள் தேர்தல் நடத்தி பொதுச்செயலாளர் ஒருவரை தேர்வு செய்து அவர் தலைமையின் கீழ் கட்சி செயல்பட்டால் அதிமுக வலிமை பெறும். எம்ஜிஆர் அதிமுக தொடங்கியதிலிருந்து கட்சியில் இருக்கும், 1977 ஆம் ஆன்டு முதல் எம்.எல்.ஏ வாக இருக்கும் செங்கோட்டையன் அதிமுக பொதுச்செயலாளர் ஆவதற்கு தகுதியானவர்.

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X