பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சபாஷ்!
75 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லுாரி;
பின்தங்கிய பகுதிகளுக்கு மத்திய அரசின் பரிசு

புதுடில்லி: வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும், தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், நாடு முழுவதும், 75 மாவட்ட மருத்துவமனைகளை, மருத்துவ கல்லுாரிகளாக மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

 சபாஷ்! 75 மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி; பின்தங்கிய பகுதிகளுக்கு மத்திய அரசின் பரிசு


நம் நாட்டில், 725 மாவட்டங்கள் உள்ளன. இவற்றில், நகர்ப்புறங்கள் அதிகம் உள்ள, குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே, அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகள் அதிகம் உள்ளன. இதனால், வளர்ச்சியில் பின் தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கும், தரமான மருத்துவ வசதி கிடைக்கும் வகையில், மருத்துவ கல்லுாரிகளை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி, முதல்கட்டமாக, 58 மாவட்டங்களிலும், இரண்டாம் கட்டமாக, 24 மாவட்டங்களிலும் உள்ள, அந்தந்த மாவட்ட தலைமை மருத்துவமனைகளை, மருத்துவ கல்லுாரிகளாக மாற்ற, அரசு உத்தரவிட்டது. இவற்றில், இதுவரை, 39 கல்லுாரிகளுக்கான கட்டுமான பணிகள் முடிந்து விட்டன.

மற்ற கல்லுாரிகளுக்கான பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், மூன்றாம் கட்டமாக, வளர்ச்சியில் பின்தங்கிய, 75 மாவட்டங்களில், தலைமை மருத்துவமனைகளை, மருத்துவ கல்லுாரிகளாக தரம் உயர்த்த, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 325 கோடி கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகம், இதற்கான திட்டத்தை தயாரித்து, மத்திய நிதி செலவின கமிட்டியின் ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளது. ஒப்புதல் கிடைத்ததும், பணிகள் துவங்கும். அரசு அல்லது தனியார் மருத்துவ கல்லுாரிகள் இல்லாத மாவட்டங்களுக்கே, இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

'நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளும், மருத்துவ கல்லுாரிகளாக தரம் உயர்த்தப்படும்' என, பா.ஜ., வின் தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை நிறைவேற்றும் முயற்சியில், மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கூடுதல் இடம் கிடைக்கும்!


● மத்திய அரசின் இந்த புதிய திட்டம் மூலம், தற்போதுள்ளதை விட, கூடுதலாக, 10 ஆயிரம், எம்.பி.பி.எஸ்., இடங்களும்,

Advertisement

8,000 முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் உருவாகும்.

● உலகிலேயே, அதிக மருத்துவ கல்லுாரிகள் உள்ள நாடுகளின் பட்டியலில், 422 கல்லுாரிகளுடன், நம் நாடும், முக்கிய இடத்தில் உள்ளது. ஆனாலும், 'மக்கள் தொகையில், 1,000 பேருக்கு, ஒரு டாக்டர் தேவை' என்ற, உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையை, நாம் எட்டவில்லை. தற்போது, 1,000 பேருக்கு, 0.5 டாக்டர் என்ற விகிதாச்சாரமே உள்ளது.

● மத்திய அரசின் புதிய திட்டம் மூலம், வரும், 2027க்குள், உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவை, நாம் எட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

● அதிக மருத்துவ கல்லுாரிகள் நம் நாட்டில் இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது, சராசரியாக, மிக குறைந்த எண்ணிக்கையிலான டாக்டர்கள் தான், ஒவ்வொரு ஆண்டும், படிப்பை முடித்து வெளியேறுகின்றனர்.

Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Aruvankadu,இந்தியா
10-ஜூன்-201921:55:14 IST Report Abuse

Sivaபுகை பிடிப்பது ..மது குடிப்பது.. வெயிலுக்கு கூல்டிரிங்ஸ் குடிப்பது..உடல்..உழைப்பு இல்லாதது.. தரமற்ற அசைவ உணவு..... வடநாட்டில் இருந்து வந்த போதை பாக்கு. இவையே மருத்துவ மனை தேவைகளை அதிகரிக்கிறது... நோய் நாடி நோய் முதல் நாடி இந்த குரளை யாராவது முழுமை செய்ய முடியுமா ?..

Rate this:
chennai sivakumar - chennai,இந்தியா
10-ஜூன்-201914:47:50 IST Report Abuse

chennai sivakumarMany doctors will leave the country after studying in government expenses like what is currently happening in IIT's. There should be a check on this aspect while admitting them to colleges. Is it possible?

Rate this:
Rajathiraja - Coimbatore,இந்தியா
10-ஜூன்-201913:38:32 IST Report Abuse

Rajathirajaஅந்த 75 மாவட்டத்தையும் மாநிலவரியாக பட்டியல் வெளியிடுங்களேன்.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X