சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'ஹெல்மெட் உரிமம் ரத்து செய்ய போலீஸ் பரிந்துரை

Added : ஜூன் 10, 2019
Advertisement

'ஹெல்மெட் அணியாமல், இரு சக்கர வாகனங்கள் ஓட்டுவோரின் உரிமத்தை ரத்து செய்ய, போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும். 'மேலும், விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீதும், வழக்கு பதிய வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், பலர், ஹெல்மெட் அணியாமல், இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர்.மேலும், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னல்களை மீறுவது, மொபைல் போனில் பேசியவாறு வாகனங்களை ஓட்டுவது என, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.சமீபத்தில், 'ஹெல்மெட்' தொடர்பான வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத், 'ஹெல்மெட்' அணியாமல், இரு சக்கர வாகனங்கள் ஓட்டும், போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கேள்வி எழுப்பி உள்ளனர்.இதனால், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க, உயர் போலீஸ் அதிகாரிகள், முடிவு செய்துள்ளனர்.சென்னை போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன், ஏற்கனவே, 'போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீது, வழக்குப் பதிந்து, அபராதம் விதிக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார்.மேலும், 'இந்த உத்தரவை, வாகன சோதனையில் ஈடுபடும், சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார், கடுமையாக பின்பற்ற வேண்டும். 'விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீது, கரிசனம் காட்டும் போலீசார் மீதும், நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்திருந்தார்.
இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், சிக்னல்களை மீறுதல் என, ஆறு விதமான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது, வழக்கு பதிந்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஓட்டுனர் உரிமமும், தற்காலிகமாக, ஆறு மாதத்திற்கு ரத்து செய்யப்படுகிறது.இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் போலீசார் மீதும், இனி வழக்கு பாயும்; அபராதம் வசூலிக்கப்படும்; ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும்.'ஹெல்மெட், சீட் பெல்ட்' அணியாமல், வாகனங்கள் ஓட்டுவோர் மீது, இதுவரை அபராதம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது, அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும், போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X