பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஹெல்மெட்' அணியாத
போலீசார் மீதும் வழக்கு

சென்னை: 'ஹெல்மெட்' அணியாமல் விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீதும் வழக்கு பதிய வேண்டும்' என சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

ஹெல்மெட், போலீசார் , வழக்கு , விதிமீறல்,கரிசனம்


சென்னையில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டுகின்றனர். மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் சிக்னல்களை மீறுவது அலைபேசியில் பேசியவாறு வாகனங்களை ஓட்டுவது என போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் 'ஹெல்மெட்' தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்

மணிகுமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் 'ஹெல்மெட்' அணியாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டும் போலீசார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுக்க உயர் போலீஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஏற்கனவே போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார். மேலும் 'இந்த உத்தரவை வாகன சோதனையில் ஈடுபடும் சட்டம் - ஒழுங்கு மற்றும் போக்குவரத்து போலீசார் கடுமையாக பின்பற்ற வேண்டும். விதிமீறலில் ஈடுபடும் போலீசார் மீது கரிசனம் காட்டும் போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்திருந்தார்.

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: தற்போது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் சிக்னல்களை மீறுதல் என ஆறு விதமான போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு

Advertisement

பதிந்து அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஓட்டுனர் உரிமமும் தற்காலிகமாக ஆறு மாதத்திற்கு ரத்து செய்யப்படுகிறது. இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் போலீசார் மீதும் இனி வழக்கு பாயும்; அபராதம் வசூலிக்கப்படும்; ஓட்டுனர் உரிமமும் ரத்து செய்யப்படும்.

'ஹெல்மெட் சீட் பெல்ட்' அணியாமல் வாகனங்கள் ஓட்டுவோர் மீது இதுவரை அபராதம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது அவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என கமிஷனர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - MADURAI,இந்தியா
10-ஜூன்-201919:23:22 IST Report Abuse

Balaஅது சரி இரு சக்ரா வாகனங்களில் கோர்ட்டுக்கு வரும் வக்கீல்கள் ஹெல்மெட் சரிவர அணிந்து வருகிறார்களா என்பதை யார் பார்ப்பது அப்படி அணிந்து வராத வக்கீல் மீது யார் நடவடிக்கை எடுப்பது இதே போல் காரில் வரும் வக்கீல் சீட் பெல்ட்அணிந்து வருகிறாரா என்பதை யார் கவனிப்பது.

Rate this:
bharathi -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூன்-201909:37:37 IST Report Abuse

bharathi let the TN police speak good and respected language.

Rate this:
Siva Kumar - chennai,இந்தியா
10-ஜூன்-201904:45:35 IST Report Abuse

Siva Kumarஇது அரசு வாகனம் ஓட்டுவோர்க்கும் பொருந்துமா?

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X