பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'எய்ம்ஸ்' அமைக்க 202 ஏக்கர் நிலம்
ஓரிரு நாட்களில் ஒப்படைக்க முடிவு

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைக்க தேர்வு செய்யப்பட்ட 202 ஏக்கர் நிலத்தை ஓரிரு நாட்களில் மத்திய அரசிடம் ஒப்படைப்பதில் மாவட்ட அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.

AIIMS,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை


தமிழகத்தில் 1,264 கோடி ரூபாயில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மதுரை தோப்பூரை மத்திய அரசு தேர்வு செய்தது. இதற்காக 202 ஏக்கர் நிலங்கள் அடையாளம் காணப்பட்டன.

அங்கு 750 படுக்கை வசதியுடன் மருத்துவமனை, மருத்துவ மற்றும் நர்சிங் கல்லுாரிகள் அமைக்க திட்டமிடப்பட்டு, கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 48 மாதங்களில் பணிகள் முடியும் என மத்திய அரசு உத்தரவாதம் அளித்தது.

அடிக்கல் நாட்டி ஐந்து மாதங்களான நிலையில் இதுவரை நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படவில்லை. பிரதமர் அடிக்கல் நாட்டிய திட்டம் என்று கூட பாராமல் அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து நிலத்தை ஒப்படைக்க நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன.

வருவாய்த்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: எய்ம்ஸ் மருத்துவமனை

Advertisement

அமைய உள்ள 202 ஏக்கர் நிலம் சுகாதாரத்துறையின் 'மனநல மருத்துவமனை' என்ற பெயரில் உள்ளது. அத்துறையினரே இந்நிலத்தை நேரடியாக மத்திய அரசிடம் ஒப்படைக்க முடியும். இருப்பினும் கூட இதுகுறித்து அத்துறையினர் வருவாய்த்துறையினரிடம் அனுமதி கோரி உள்ளனர். அந்த அனுமதியை வருவாய் அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். ஓரிரு நாட்களில் நிலம் ஒப்படைக்கப்படும், என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vela - Kanchipuram,இந்தியா
11-ஜூன்-201920:56:33 IST Report Abuse

Velaமருத்துவ கழிவுகளை முறையாக டிஸ்போஸ்/recycle செய்தால் மதுரை உருபடும் GOD BLESS MADURAI .

Rate this:
Diya -  ( Posted via: Dinamalar Android App )
10-ஜூன்-201922:00:52 IST Report Abuse

DiyaDelaying the tasks gives the people a pleasure of controlling others and to show who is the boss. Only certain people feel that work should not be delayed because of them and feel guilty if such things happen.

Rate this:
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
10-ஜூன்-201903:44:09 IST Report Abuse

Subburamu KrishnaswamyA typical red tapism. Application of mind among the Tamil Nadu government officials is very poor. They always run behind the political bosses. Positive approach is important for efficient government functioning.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X