சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிலைகளிடம் சில்மிஷம்; 'காமுக' வாலிபர் கைது

Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (126)
Advertisement
சிலைகள், சில்மிஷம்,ஆபாசமாக, வாலிபர், கைது,போஸ்,வாட்ஸ் ஆப்

திருச்சி: தஞ்சை பெரிய கோவிலில், சுவாமி சிலைகளை கட்டிப் பிடித்து, ஆபாசமாக, 'போஸ்' கொடுத்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள பழமையான சுவாமி சிலைகளை, ஆபாசமாக கட்டிப் பிடித்தபடி, 'போஸ்' கொடுத்த வாலிபர் படம், சில நாட்களாக, சமூக வலைதளங்களில் பரவியது.அதை பார்த்தவர்கள், முகம் சுளித்ததுடன், வாலிபர் மீது ஆத்திரம் அடைந்தனர். திருச்சி, கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரத்தினவேலு என்பவர், 'வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, திருச்சி போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் கொடுத்தார்.

அமல்ராஜ் தலைமையிலான போலீசார், 'வாட்ஸ் ஆப்'பில் படங்கள் வெளியான மொபைல் எண்ணை வைத்து விசாரணை நடத்தியதில், மதுரை, ஒத்தகடையைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், 22, என்பதும், தஞ்சை பெரிய கோவிலுக்கு சுற்றுலா வந்தபோது, எடுத்த படங்கள் என்பதும் தெரிந்தது.

மேலும், அவர், திருச்சியில், செங்குளம் காலனியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருப்பதும் தெரிந்தது. இதையடுத்து, அவர் மீது, பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டது, அதை சமூக வலைதளங்களில் பரப்பியது ஆகிய பிரிவுகளில், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, முஜிபுர் ரகுமானை நேற்று கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (126)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Thanjai,இந்தியா
17-ஜூன்-201920:47:10 IST Report Abuse
Raja அப்பப்ப தமிழ்நாட்டுல இவ்ளோ மதம் பிடித்தவர்கள் இருக்கிறோமா .... வாழ்க தமிழகம்
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
15-ஜூன்-201908:02:30 IST Report Abuse
Jayvee தலைவன் எப்படியோ பக்தனும் அப்படியே ...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஜூன்-201913:03:12 IST Report Abuse
Ramesh Sargam ஒரு கற்சிலையுடன் இப்படி நடந்துகொள்ளும் இந்த ....எப்படி முறைகேடாக நடந்துகொள்வார்கள் என்று சிந்திக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X