எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
குழப்பம்!
உள்ளாட்சி தேர்தலா; சட்டசபை கூட்டமா?
செம குழப்பத்தில் இருக்கிறார் இ.பி.எஸ்.,

உள்ளாட்சி தேர்தலை, முதலில் நடத்துவதா அல்லது சட்டசபையை கூட்டுவதா என்ற குழப்பத்தில், முதல்வர், இ.பி.எஸ்., உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்,சட்டசபை கூட்டம்,பழனிசாமி,EPS,இபிஎஸ்


தமிழகத்தில், உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிகாலம், 2016 அக்டோபர் மாதம் முடிவுக்கு வந்தது. எனவே, நீதிமன்ற உத்தரவுப்படி, உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய நிலையில், மாநில தேர்தல் கமிஷன் உள்ளது. தேர்தலை சந்திப்பதற்காக, வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளன. இடஒதுக்கீடு அடிப்படையில், வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வார்டுகள் வாரியாக, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடந்து வருகிறது.

தற்போதைய சூழலில், ஜூலை இறுதியில் தேர்தலை அறிவிக்க, மாநில தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. ஆனால், லோக்சபா மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் தோல்வியால், தேர்தலை சந்திக்க, அ.தி.மு.க., மாவட்ட செயலர்கள், நிர்வாகிகள் பலரும் விரும்பவில்லை. எனவே, சட்டசபையை கூட்டி, மானிய கோரிக்கை விவாதங்களை துவங்கலாம் என, அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள், முதல்வரிடம் கூறி வருகின்றனர்.

எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின், 'சட்டசபையை கூட்ட, அரசு தயங்குவது ஏன்' என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற எதிர்கட்சிகளும், இதே கருத்தை எதிரொலிக்க துவங்கியுள்ளன. சட்டசபையை கூட்டினால், காவிரி நீர், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

ஆட்சியை கவிழ்ப்பதற்கு, எம்.எல்.ஏ.,க்களை இழுக்கவும், தி.மு.க., காய் நகர்த்தி வருகிறது.சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கை இல்லாத தீர்மானத்தையும்

Advertisement

கொண்டு வர, தி.மு.க., தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சட்டசபையை இப்போது கூட்டினால், அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படும்.

அதேநேரத்தில், தற்போதைய எதிர்ப்பு அலையில், உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியுமா என்ற சந்தேகமும், முதல்வருக்கு உள்ளது. எனவே, என்ன செய்வது என தெரியாமல், முதல்வர் பெரும் குழப்பத்தில் இருப்பதாக, அ.தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
10-ஜூன்-201908:51:20 IST Report Abuse

தமிழ் மைந்தன்கடைசியில் ரமணா படத்தில் வருவதுபோல அரசாங்கம் ஊழலைகண்டு பயப்படுகிறதே?....

Rate this:
siriyaar - avinashi,இந்தியா
10-ஜூன்-201906:47:08 IST Report Abuse

siriyaarno election for both continue until 2021 is better option.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X