பொது செய்தி

இந்தியா

இனி வங்கியில் ரூ.10 லட்சம் எடுத்தால் வரி

Updated : ஜூன் 10, 2019 | Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (85)
Share
Advertisement
புதுடில்லி : இனி வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பணமாக எடுத்தால் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காகித பண வர்த்தனையை குறைப்பதற்காகவும், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணபரிவர்த்தனையையும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதே போன்று அனைத்து வகையான அதிக அளவிலான

புதுடில்லி : இனி வங்கிகளில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் பணமாக எடுத்தால் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காகித பண வர்த்தனையை குறைப்பதற்காகவும், கறுப்பு பணத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட அனைத்து பணபரிவர்த்தனையையும் டிஜிட்டல் பயன்பாட்டை அதிகரிக்கும் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



latest tamil news



இதே போன்று அனைத்து வகையான அதிக அளவிலான பணம் எடுப்பதற்கும் ஆதாரை கட்டாயம் ஆக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனி நபர்களின் பண பரிவர்த்தனையை எளிதில் கண்காணிக்கவும், அவர்களின் வரித்தாக்கல் கணக்கின் உண்மை தன்மையை கண்டறியவும் இது உதவி கரமாக இருக்கும் என அரசு கருதுகிறது. அதே சமயம், ரூ.50,000 க்கு மேல் பணம் டெபாசிட் செய்யவும் பான் கார்டு கட்டாயம் ஆக்கப்பட உள்ளது.


latest tamil news



ரூ.10 லட்சத்திற்கு மேல் அனைவரும் பணபரிவர்த்தனை செய்யப் போவதில்லை. மிக சில தனிநபர்கள் மற்றும் தொழிலதிபர்கள் மட்டுமே அதிக அளவில் பண பரிவர்த்தனை செய்வர். அதனால் அரசின் இந்த முடிவு நடுத்தர மற்றும் ஏழை மக்களை பாதிக்காது என கூறப்படுகிறது. ஜூலை 5 ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில். அரசின் இந்த பரிசீலனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
13-ஜூன்-201912:06:32 IST Report Abuse
Nallavan Nallavan "பணமாக" எடுக்கக் கூடாது என்பதில்தான் சூக்குமம் ..... அது சரி, தேர்தலுக்கு முன்பாக அமல்படுத்த ஏன் முயற்சிக்கவில்லை ?? யாருடைய வசதிக்காக இதில் தாமதம் ??
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
11-ஜூன்-201920:39:07 IST Report Abuse
karutthu நிர்மலா சீதாராமன் ஏதாவது நல்லது செய்வாரா என பார்க்கலாம்
Rate this:
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
11-ஜூன்-201920:04:51 IST Report Abuse
TamilArasan 15 வருடம் முன்பு வெளிநாட்டில் பணிபுரியும் எனது சகோதரருக்கு சென்னையில் கேட்டட் கம்யூனிட்டிய என்று கூறப்பட்ட அனைத்து வசதி கொண்ட குடியிருப்பில் வீடு பார்க்க சென்றோம் அங்கு அந்த பில்டர் எங்களிடம் கூறியது - வைட்டா 55% (செக் மூலம்) ப்ளாக்கா 45% (பணமாக) தரவேண்டும் என்றார், எனது சகோதரர் அது எல்லாம் முடியாது நான் உங்களுக்கு 100% எனது வங்கி மூலம் பணத்தை தருகிறேன் காரணம் எனது பணம் அனைத்தும் நான் வெளிநாட்டில் இருந்து அனுப்பியது அது அனைத்தும் வாய்ட் பணம்தான் அதை ஏன் நான் உங்களிடம் ப்ளாக்காக மாற்ற வேண்டும் என்று கேட்டதற்கு பில்டருக்கு பயங்கர கோபம் இருவருக்கும் வாக்குவாதமாக மாறி எனது சகோதரர் சென்னையில் வீடு வாங்காமல் எங்கள் கிராமத்திலே மிக பெரிய வீடாக கெட்டிவிட்டார்... ஆதலால் உங்கள் பணம் தான் அதை தாங்கள் கொடுக்க வேண்டியவர்க்கு அவர் வங்கிக்கு நேரடியாக ஆன்லைன் மூலம் அனுப்பலாம் அல்லது அவர்க்கு செக்காக கொடுக்கலாம் அதன் மூலம் நம் உழைப்பில் உருவாகிய பணம் கருப்பு பணமாக மாறுவது தடுக்க படும் ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X