மோடி வழியை பின்பற்றும் இம்ரான் கான்

Added : ஜூன் 10, 2019
Advertisement

இஸ்லாமாபாத் : பிரதமர் மோடி வழியை பின்பற்றி, பாக்., பிரதமர் இம்ரான் கானும் தங்கள் நாட்டினர் அனைவரும் வரிகளை முறையாக செலுத்தும்படியும், பினாமி சொத்துக்களின் விபரத்தை ஒப்படைக்கும் கேட்டுக் கொண்டுள்ளார்.





கறுப்பு பணத்திற்கு எதிரான நடவடிக்கையாகவும், பினாமி சொத்துக்களை ஒடுக்கவும், வரி வருமானம் மூலம் நாட்டின் வருவாயை உயர்த்தவும் 2016 ம் ஆண்டு பிரதமர் மோடி நடவடிக்கை மேற்கொண்டார். இதே வழியை தற்போது பின்பற்றி வருகிறார் இம்ரான் கான். பாக்.,ன் நிதி நிலை மோசமாக உள்ளதால் வரிகளின் மூலம் வருவாயை உயர்த்த திட்டமிட்டுள்ள இம்ரான் கான்,மோடி மேற்கொண்ட நடவடிக்கைகளை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளார்.




டிவி.,யில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய இம்ரான் கான், நாட்டு மக்கள் அனைவரும் வரி செலுத்த வேண்டும். இது நாட்டு மக்களின் கடமை. குடிமக்கள் தங்களின் சொத்து விபரங்களை ஒப்படைத்து அரசு கொண்டு வந்துள்ள திட்டத்தின் மூலம் பயன் அடையும்படி கேட்டுக் கொள்கிறேன். வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பினாமி சொத்து வைத்திருப்போர் ஜூன் 30 க்கு முன் அது தொடர்பான விபரங்களை அளிக்க வேண்டும். பாக்., தொண்டுகளுக்காக அதிக நிதி அளிக்கும் நாடு. அதே சமயம் வரி மூலம் குறைவான வருவாயையே பெறுகிறது.
இதனை மாற்றி பாக்.,ஐ வழமான நாடாக நாம் மாற்ற வேண்டும். கடவுளை போன்ற மக்களும் அதற்கு உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். இம்ரான் கான் தலைமையிலான பாக்., அரசு, நாளை தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. அதிக வரி காரணமாக வரி செலுத்துவோர் ஏற்கனவே அவதி அடைந்து வரும் நிலையில், இம்ரான் கானின் இந்த பேச்சு பாக்., மக்களை கலக்கமடைய வைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X