பொது செய்தி

தமிழ்நாடு

பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (113)
Share
Advertisement
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும், பிரபல வசனகர்த்தவுமான கிரேஸி மோகன் நேற்று (10 ம் தேதி) வயது 66 மாரடைப்பால் காலமானார். இன்று (11 ம் தேதி) அவரது பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்கள். அந்த சிரிப்பை நகைச்சுவையால் திரையுலகிற்கு கொடுத்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன். மேடை

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும், பிரபல வசனகர்த்தவுமான கிரேஸி மோகன் நேற்று (10 ம் தேதி) வயது 66 மாரடைப்பால் காலமானார். இன்று (11 ம் தேதி) அவரது பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

உயிரினங்களில் மனிதர்கள் மட்டுமே சிரிக்க கூடியவர்கள். அந்த சிரிப்பை நகைச்சுவையால் திரையுலகிற்கு கொடுத்தவர்கள் ஏராளமான பேர். அவர்களில் முக்கியமானவர் கிரேஸி மோகன். மேடை நாடகங்களிலும், சினிமாவிலும் ஏராளமான நகைச்சுவைகளை அள்ளித் தெளித்தவர்.latest tamil newsசென்னையை சேர்ந்த கிரேஸி 1952ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் மோகன் ரெங்காச்சாரி. மெக்கானிக்கல் பொறியல் பட்டதாரியான இவர், இயல்பிலேயே நகைச்சுவையாக பேசக்கூடியவர். அதுவே அவரை நாடகங்கள் மற்றும் சினிமாவில் எழுத வைத்தது.
கே.பாலசந்தரின் 'பொய்க்கால் குதிரை' படம் மூலம் சினிமாவில் முதன்முதலாக வசனகர்த்தவாக அறிமுகமானார். அதன்பிறகு கமல்ஹாசனின் நெருங்கிய நட்பு கிடைக்க அவரின் பல படங்களுக்கு வசனங்கள் எழுத ஆரம்பித்தார்.

கமலின் பெரும்பாலான நகைச்சுவை படங்களுக்கு இவர் தான் வசனகர்த்தாவாக பணியாற்றினார். “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், இந்திரன் சந்திரன், சின்ன மாப்ளே, மகளிர் மட்டும், சதி லீலாவதி, அவ்வை சண்முகி, ஆஹா, அருணாச்சலம், காதலா காதலா, தெனாலி, பஞ்ச தந்திரம், பம்மல் கே சம்பந்தம், வசூல் ராஜா” ஆகிய படங்களின் இவரின் நகைச்சுவையை மறக்க முடியாதது.


latest tamil news
தமிழ் திரைப்படங்கள்


நடிகராகவும், “அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், சின்ன வாத்தியார், இந்தியன், அவ்வை சண்முகி, அருணாச்சலம், காதலா காதலா, பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ்” ஆகிய படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இந்தியன் படத்தில் பார்த்தசாரதி கதாபாத்திரமும், வசூல்ராஜா படத்தில் டாக்டர் மார்கபந்து கதாபாத்திரமும் ரசிகர்களிடம் தனி வரவேற்பைப் பெற்றவை.


latest tamil newsதன் சகோதரர் மாது பாலாஜி உடன் இணைந்து பல மேடை நாடகங்களை இயற்றி உள்ளார். குறிப்பாக இவர்களது கூட்டணியில் வெளிவந்த, "மாது பிளஸ் 2, மேரேஜ் மேட் இன் சலூன், அலாவுதீனும் 100 வாட்ஸ் பல்பும், மாது மிரண்டால், காதலிக்க மட்டும் மாது உண்டு, மதில் மேல் மாது, சாக்லேட் கிருஷ்ணா" போன்றவை மக்களால் பெரிதும் ரசிக்க வைத்தவை. இவரின் சாக்லேட் கிருஷ்ணா நாடகம் 500 முறை மேடையேறி இருக்கிறது. தமிழகம், இந்தியா தவிர்த்து வெளிநாடுகளிலும் 6,500 நாடகங்களை மேடையேற்றி இருக்கிறார். 100க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 40 ஆயிரம் வெண்பாக்களை எழுதி உள்ளார்.


latest tamil newsசினிமா, இணையதளம், வெப்சீரிஸ் என சினிமாவின் பரிணாம வளர்ச்சி அடுத்தக்கட்டத்திற்கு சென்றாலும் சினிமாவிற்கு முதல் அடித்தளமான நாடகம் இன்றளவும் ஓரளவிற்கு பேசப்படுகிறது என்றால் அதற்கு இவர் போன்ற கலைஞர்கள் தான் முக்கிய காரணம் என்றால் மிகையல்ல.

Advertisement
வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nisha Rathi - madurai தமிழக ஒன்றிய முதல்வரை ஒழிப்போம் இந்தியப்பேரரசுவை காப்போம் ,இந்தியா
11-ஜூன்-201910:15:43 IST Report Abuse
Nisha Rathi RIP to Mohan
Rate this:
Cancel
K.ANBARASAN - muscat,ஓமன்
11-ஜூன்-201908:17:41 IST Report Abuse
K.ANBARASAN அவருடைய வசனங்களில் வசூல் ராஜா MBBS ,தெனாலி பஞ்சதந்திரம் அவ்வை ஷண்முகி பஞ்சதந்திரம் மைகேல் மதன காமராஜன் படங்கள் திரும்ப திரும்ப பார்க்க தூண்டும் படங்கள். TIMING COMEDY செய்வதில் மன்னன். அவருடைய படங்களில் வசனங்களில் சாதாரண டயலாக் கூட யோசித்து பார்க்கும் போது ஜோக் ஆக இருக்கும். கண்மூடி திறக்கும் முன் ஒரு ஜோக் பேசி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால் அது திரும்ப திரும்ப வீடியோ போட்டு பார்க்கும் போது தான் புரிபடும். எதுக்கெடுத்தாலும் TENSION நிறைந்த இவ்வுலகில் அவருடைய படங்களின் VIDEO COLLECTION ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம் அவர் இந்த உலகிற்கு ஆற்றிய நகைச்சுவை தொண்டிற்கு அவருடைய ஆத்மா நிச்சயம் சாந்தி அடையும்.
Rate this:
Cancel
KSK - Coimbatore,இந்தியா
11-ஜூன்-201906:34:04 IST Report Abuse
KSK மனிதனை அழ வைப்பது, உணர்ச்சி வசப்பட செய்வது சுலபம் ஆனால் சிரிக்கவும் சிந்திக்கவும் செய்ய நிறைய புத்தி சாதுர்யமும், இயல்பாக அமையும் நகைச்சுவை உணர்வை வளர்த்து கொள்ள கூர்ந்து நோக்கும் திறனும், நுண்ணிய அறிவும் அதிகம் தேவை. உயர்திரு 'சோ' அவர்களுக்கு பிறகு நம்மை விட்டு பிரிந்துள்ள மிக திறமையான, பல்துறை வித்தகர் 'கிரேஸி' மோகன் அவர்கள். தமிழகம் அடுத்தடுத்து இவர்களை போன்ற நாடு போற்றும் நல்ல கலைஞர்களை இழந்து வருவது மிகவும் வருத்தத்துக்கு உரியது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X