பதிவு செய்த நாள் :
சிக்கல்!
தொடரும் கலவரங்களால் மேற்கு வங்க அரசுக்கு...
மோடி, அமித் ஷாவை சந்தித்து கவர்னர் விளக்கம்

புதுடில்லி : லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த பல்வேறு வன்முறை சம்பவங்களில், 12 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள நிலவரம் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவை நேரில் சந்தித்து விளக்கினார், மாநில கவர்னர், கேசரிநாத் திரிபாதி.

மேற்கு வங்கம், கலவரம், சிக்கல்,கவர்னர், விளக்கம்,மம்தா பானர்ஜி,லோக்சபா


மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., அரசு அமைந்துள்ளது. லோக்சபா தேர்தலின்போது, திரிணமுல் காங்., மற்றும் பா.ஜ., தொண்டர்கள் இடையே, பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. லோக்சபா தேர்தலில், மொத்தமுள்ள, 42 தொகுதிகளில், திரிணமுல் காங்., 22 இடங்களில் வென்றது. கடந்த தேர்தலில், இரண்டு தொகுதிகளில் மட்டும் வென்ற, பா.ஜ., 18 இடங்களை பிடித்தது.

கடையடைப்பு


அதையடுத்து, இரு கட்சிகளுக்கும் இடையே, அங்கு மோதல் அதிகரித்தது. வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில், சமீபத்தில் நடந்த வன்முறையில், நான்கு பேர் உயிரிழந்தனர். லோக்சபா தேர்தலுக்குப் பின், மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் மோதல்களில், 12 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் நடந்துள்ள அரசியல் கொலைகளை கண்டித்து, பா.ஜ., சார்பில், நேற்று அங்கு, கறுப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.

மேலும், வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில், கடையடைப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், அம்மாநில கவர்னர், கேசரி நாத் திரிபாதி, டில்லியில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷாவை நேற்று சந்தித்து, அங்குள்ள நிலவரம் குறித்து விவரித்தார்.

பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மாநிலத்தில் உள்ள நிலவரம் குறித்து விவரித்தேன். அந்த தகவல்களை தெரிவிக்க முடியாது.

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக எதுவும் பேசவில்லை. இவ்வாறு, அவர் கூறினார். மேற்கு வங்க வன்முறை குறித்து விளக்கம் கேட்டு, மத்திய உள்துறை அமைச்சகம், சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தது. அதற்கு, மேற்கு வங்க தலைமைச் செயலர், மாலே குமார் தே, பதில் கடிதம் அனுப்பிஉள்ளார்.

நடவடிக்கை


'வன்முறை சம்பவங்கள் தொடர்பாக, உடனடியாக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் உள்ளது' என, கடிதத்தில் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே, 'மேற்கு வங்கத்தில், ஓரிரு அசம்பாவித சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளன. நிலைமை கட்டுக்குள் உள்ளது' என, மாநில அரசும் கூறியுள்ளது.

'ஆட்சியை கவிழ்க்க முயற்சி'


மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, கோல்கட்டாவில், நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: மத்திய அரசும், பா.ஜ.,வும் இணைந்து, மேற்கு வங்கத்தில் வன்முறையை துாண்டி விட்டுள்ளன. கோடிக்கணக்கில் செலவழித்து, மாநிலத்துக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில், இணையதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். பா.ஜ.,வுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்னுடைய குரலை ஒடுக்க, முயற்சிக்கின்றனர். மத்திய அரசும், பா.ஜ.,வும் வன்முறையை தூண்டிவிடுகின்றனர். என்னுடைய ஆட்சியை கவிழ்ப்பதே, அவர்களுடைய நோக்கம். இவ்வாறு, அவர் கூறினார்.

5 மாநில கவர்னர்கள் சந்திப்பு


மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷாவை, ஐந்து மாநில கவர்னர்கள்,

Advertisement

நேற்று தனித்தனியாக சந்தித்து பேசினர். மேற்கு வங்கத்தில் நடந்த அரசியல் வன்முறை தொடர்பாக, அம்மாநில கவர்னர், கேசரிநாத் திரிபாதி விளக்கம் அளித்தார். அவரைத் தவிர, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித்; ஆந்திரா மற்றும் தெலுங்கானா கவர்னர், இ.எஸ்.எல்.நரசிம்மன்; ஜார்க்கண்ட் கவர்னர், துரவுபதி முர்மு; அருணாச்சலப் பிரதேச கவர்னர், பி.டி.மிஸ்ரா ஆகியோர், அமித் ஷாவை சந்தித்தனர். தங்களுடைய மாநிலம் தொடர்பான விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்ததாக, உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

'அதிகாரத்தை பறிக்க முயற்சி'

மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறைகளுக்கு வருத்தம் தெரிவித்து, மத்திய உள்துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. அதில், 'லோக்சபா தேர்தல் முடிந்த பிறகும், மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நடப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சட்டம் ஒழுங்கை மாநில அரசு நிர்வாகம் பாதுகாக்க வேண்டும்' என, கூறப்பட்டிருந்தது. இது குறித்து, திரிணமுல் காங்., பொதுச் செயலரும், மாநில அமைச்சருமான, பார்த்தா சாட்டர்ஜி கூறியதாவது: மத்திய உள்துறை அமைச்சகம், உள்நோக்கத்தோடு, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. உண்மை நிலவரம் குறித்து, மாநில அரசிடம் விசாரிக்காமல், அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளனர். மாநிலத்தின் அதிகாரத்தை பறிக்கும் வகையில், பா.ஜ., அரசியல் நாடகம் நடத்துகிறது. மாநில அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தி, ஜனநாயக விரோதமாக ஆட்சியைப் பறிக்க முயற்சிக்கின்றனர். திட்டமிட்டு வன்முறையை துாண்டி விட்டுள்ளனர். பா.ஜ.,வின் தலைவராக உள்ளவரே, மத்திய உள்துறை அமைச்சராக உள்ளார். அதனால், கட்சி என்ன நினைக்கிறதோ, அதை, உள்துறை அமைச்சகம் மூலம், பா.ஜ., நிறைவேற்றுகிறது. ஜனநாயகத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். ஆனால், மாநிலத்தை அழிக்கும் வகையில், மத்திய அரசு செயல்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
11-ஜூன்-201921:58:18 IST Report Abuse

Subramanian Sundararamanஇதனை வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டாலும் ஆட்சியை கலைக்க நீதி மன்றங்கள் அனுமதிக்காது . உச்ச நீதி மன்றத்தின் வழிகாட்டுதல் மூலம் போன சிபிஐ யையே போலீஸ் ஆணையரை விஜாரிக்க மம்தா அனுமதிக்கவில்லை . அப்போதே உச்ச நீதி மன்றம் பாடம் கற்பித்திருந்தால் வன் முறையால் அப்பாவிகள் உயிர் இழந்திருக்க மாட்டார்கள் . கோர்டுகளும் ஜனநாயகத்தை அழிக்க நினைக்கும் அடாவடி நபர்கள் மீது அரசியல் சட்ட மீறல் என்று குற்றம் சாட்டி நீக்கினால் தான் அவர்களும் தன நிலை உணர்ந்து செயல் படுவார்கள் .கர்நாடகாவில் பொம்மை அரசை கலைத்தது செல்லாது என்ற தீர்ப்பை எல்லா கேஸ்களுக்கும் apply செய்யக்கூடாது .

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜூன்-201916:44:32 IST Report Abuse

Endrum Indianசும்மா ஜவ்வு மிட்டாய் கணக்கில் இழுக்காதீங்க , ஆகவேண்டியதை சட்டு புட்டுன்னு செய்யுங்க இந்த முஸ்லீம் பேகம் மும்தாஜ் இப்போ அவள் உளறலை மீண்டும் ஆரம்பித்து விட்டாள் இது மேற்கு வங்க அரசை கவிழ்க்க பி.ஜெ.பி சூழ்ச்சி என்று???தாங்க முடியவில்லை இவள் இம்சையை???

Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
11-ஜூன்-201916:15:30 IST Report Abuse

Ambika. Kஇந்த அம்மையார் சொர்ணாக்கா மாதிரின்னு நெனைக்கேன்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X