அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., எப்படி : கேட்டுள்ளார் அமித் ஷா

'தமிழகத்தில், உங்களின் பணிகள் தொடர வேண்டும்; அ.தி.மு.க., அரசு மீது, எதிர்க்கட்சிகள் கூறிய, ஊழல் குற்றச்சாட்டு விபரங்களை, எனக்கு அனுப்பி வையுங்கள்' என, கவர்னர் பன்வாரிலால் புரோஹித்திடம், மத்திய உள்துறை அமைச்சர், அமித் ஷா கூறியுள்ளதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அமித்ஷா,ஊழல், குற்றச்சாட்டு, ஸ்டாலின், பன்வாரிலால் புரோஹித்


தமிழகத்தில், குழப்பமான அரசியல் சூழல் நிலவுகிறது. ஆளும் கட்சியாக உள்ள, அ.தி.மு.க., வில் கோஷ்டி பூசல் அதிகரித்து, உள்ளது. முதல்வர் மற்றும் துணை முதல்வர் இடையே, பிரச்னை உருவாகி உள்ளது. இந்த சூழலை பயன்படுத்தி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை இழுக்க, எதிர்க்கட்சியான, தி.மு.க., முயற்சித்து வருகிறது.

நடவடிக்கை:


இதன் காரணமாக, சட்டசபை கூட்டமும் கூட்டப்படாமல் உள்ளது.

'சட்டசபையை உடனே கூட்ட வேண்டும்' என, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், வலியுறுத்தி உள்ளார். இத்தகைய சூழலில், கவர்னர் பன்வாரிலால் புரோஹித், நேற்று காலை, டில்லி புறப்பட்டு சென்றார். அங்கு, பா.ஜ., தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

அப்போது, கவர்னரிடம், அமித் ஷா கூறியதாவது: பல்கலை துணை வேந்தர்கள் நியமனத்தில், உங்கள் நடவடிக்கை நேர்மையாக உள்ளதாக, மத்திய உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது. இது, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களின் துணிச்சலான நடவடிக்கை தொடர வேண்டும். பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அ.தி.மு.க., அரசு மீது கொடுத்துள்ள, ஊழல் குற்றச்சாட்டுக்களை, எனக்கு அனுப்பி வையுங்கள்.

துரோகம்:


லோக்சபா தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறக்கூடிய தென் சென்னை போன்ற தொகுதி களை ஒதுக்க மறுத்து விட்டனர். ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டி, பா.ஜ., வை எதிர்த்தாலும், துரோக செயலில் ஈடுபடவில்லை.

Advertisement

ஆனால், பா.ஜ., வேட்பாளர்களின் வெற்றிக்கு, அ.தி.மு.க., உழைக்காமல் துரோகம் செய்துள்ளது.

தேசிய அளவில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்த நாம், தமிழக அரசியல் சூழ்நிலை காரணமாக, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், பா.ஜ., வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. தமிழகத்தில், ஆளுங்கட்சிக்கு எதிராக, வாக்காளர்களின் மனநிலை இருந்திருக்கிறதே தவிர, மத்திய அரசுக்கு எதிரான அலை அல்ல. எனவே, நீங்கள் சட்டரீதியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில், உறுதியாக இருக்க வேண்டும். இவ்வாறு, அமித் ஷா கூறியதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவித்தன.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
11-ஜூன்-201922:05:07 IST Report Abuse

J.Isaacஆளுநர் பிஜேபியின் தமிழ் நாட்டு பிரதிநிதி .

Rate this:
Subramanian Sundararaman - Chennai,இந்தியா
11-ஜூன்-201921:34:57 IST Report Abuse

Subramanian Sundararamanபாஜகவின் திட்டங்களை சரியானபடி அந்த கட்சி மக்களிடம் எடுத்து செல்லவில்லை . எந்த திட்டமும் ஹிந்தி மொழியில் பெயரிடப்பட்டது . அதன் ஆங்கில மொழி பெயராக்கம் கூட செய்யவில்லை . ஓரளவு படித்த மக்களுக்கே கூட இது என்னவென்று புரியவில்லை . திட்டத்தின் பெயர்கள் ஹிந்தியின் நுணுக்கமான மொழியில் அமைந்தது . அதை மொழி பெயர்த்து மக்களுக்கு இந்த திட்டங்கள் செய்யும் நன்மைகளை சொல்ல , அதை மக்களுக்கு புரியும்படியாக சொல்ல பிஜேபியில் கட்டமைப்பு கிடையாது மக்களுக்கு ஹிந்தி தெரியாதலால் ஊழல் காட்சிகள் நல்ல திட்டங்களை திரித்துக் கூறி பிஜேபி ஐ வில்லன் ஆக்கி விட்டார்கள் . .இது எதிர் கட்சிகளுக்கு கொண்டாட்டமாக அமைந்தது . ஹிந்தியில் மட்டுமே திட்டங்கள் பெயரிடப்பட்டு மக்களை இருட்டில் வைத்ததற்கு பிஜேபிதான் காரணம் . வாய் மெய்யை வென்றது .

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜூன்-201917:10:53 IST Report Abuse

தமிழ்வேல் அப்போ அத்தனை ரெயிடும் வேஸ்ட்டா ? அல்லது எல்லாமே திரும்பவும் ஆரம்பிக்கனுமா ? // பா.ம.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அ.தி.மு.க., அரசு மீது கொடுத்துள்ள, ஊழல் குற்றச்சாட்டுக்களை, எனக்கு அனுப்பி வையுங்கள். //

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X