பதிவு செய்த நாள் :
பாகிஸ்தானை தாக்க வேண்டாம்
மோடிக்கு சீனா வேண்டுகோள்

பீஜிங் : 'மத்திய ஆசிய நாடான கிரிகிஸ்தானில் நடக்கும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில், சர்வதேச பிரச்னைகள் குறித்து பேச வேண்டும். குறிப்பிட்ட நாட்டை தாக்கும் வகையில் பேச வேண்டாம்' என, சீனா கேட்டுக் கொண்டுள்ளது.

Modi,Narendra modi,நரேந்திர மோடி,சீனா, வேண்டுகோள், பாக்.,ஷாங்க் ஹான்ஹுய்


ஆதரவு:


சீனா தலைமையிலான, எட்டு நாடுகள் அடங்கிய, எஸ்.சி.ஓ., எனப்படும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு, மத்திய ஆசிய நாடான, கிர்கிஸ்தானில், வரும், 13 - 14ல் நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார்.

மாநாட்டின் இடையே, சீன அதிபர், ஜி ஜின்பிங்கை அவர் சந்தித்து பேச உள்ளார்.

சமீபத்தில், மாலத் தீவுகள் மற்றும் இலங்கைக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அண்டை நாடான பாகிஸ்தான் குறித்து அங்கு பேசினார். பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது குறித்து, அவர் விமர்சித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டிலும், இந்தப் பிரச்னை குறித்து மோடி பேசுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சீனாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர், ஷாங்க் ஹான்ஹுய் கூறியதாவது: பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி என்ற, இரண்டு முக்கிய பிரச்னைகள் குறித்து, இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த மாநாட்டில், எந்த ஒரு குறிப்பிட்ட நாட்டையும் விமர்சித்து பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

சர்வதேச மற்றும் பிராந்திய அளவிலான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிப்போம்.

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பின்போது, அமெரிக்கா உடனான வர்த்தக உறவு குறித்து பேசுவர் என, எதிர்பார்க்கிறோம். சீனாவுடன், வர்த்தகப் போரில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.

விரிசல்:


அதுபோல, இந்தியாவுடனான அமெரிக்க வர்த்தக உறவிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வர்த்தக உறவில் நமது நாடுகளை பாதுகாத்து கொள்வது குறித்து, இரு தலைவர்களும் விவாதிப்பர் என, எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
11-ஜூன்-201919:31:44 IST Report Abuse

ஆப்புசீனாக்காரன் குடுமி சும்மா ஆடாது. பக்கிஸ்தானில் கோடிக்கணக்கில் முதலீடு செஞ்சிருக்காங்கோ. பக்கிப் பெண்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு சீனா கூட்டிட்டு போறாங்கோ..நாம அட்டாக் பண்ணுனா சீனா எப்பிடி பொழைக்கும்?

Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
11-ஜூன்-201916:51:32 IST Report Abuse

Loganathaiyyanசீனாவே உனக்கு என்ன ஆனது????ரொம்ப பச்சைகள் பக்கம் பேசுறியே உன் நாட்டில் என்ன செய்கின்றாய்??? பச்சைகள் இருக்கும் வீடுகளுக்கு தனி Code கொடுத்து அவர்களை 24 மணிநேரமும் கண்காணிக்கின்றாயே???மொஹம்மது, அகமது ....என்று பெயர் வைக்கக்கூடாது???? பெண்கள் முக்காடு / புர்கா அணியக்கூடாது என்கின்ற உன் சட்டம் உன் நாட்டில் இருக்கின்றது ???அப்போ நீ செய்றது சர்க்கியானதே உன் நாட்டில் என்றால் எங்கள் நாட்டில் மோடி செய்றது 100% சரியே. ஒவ்வொரு வெளிநாட்டிலும் இந்த பிரச்சினை குறித்து மோடி பேசியே ஆகவேண்டும் .

Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
11-ஜூன்-201918:58:18 IST Report Abuse

Pannadai Pandianசீனாவின் நடவடிக்கை 100 % சரி….அதனால் தான் இங்கு மக்கள் பாதுகாப்புடன் வாழ்கிறார்கள். முதியவர் பென்ஷன் 20 ,000 ரூபாய் மாதத்திற்கு. காங்கிரஸ் ஆட்சியில் அவர்கள் சம்பாதித்தார்கள், மக்கள் வறுமையில் வாடினார்கள்….. சோசியல் benefits எதுவும் கிடையாது….இனி மோடி தலைமையில் நாடு உருப்படும். மக்களுக்கு முதியவர் பென்ஷன் கிடைக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. தமிழ்நாடு மாதிரி தற்குறிகள் இருந்தால் நாடும் வளராது, ரோட்ல படுத்து தான் தூங்கணும், கன்னம் வைத்துதான் பிழைப்பை ஓட்டணும்…. ...

Rate this:
JSS - Nassau,பெர்முடா
11-ஜூன்-201920:40:22 IST Report Abuse

JSSexcellent பதிவு. தமிழர்களுக்கு புத்தி வருமா? கேள்வி குறிதான் ...

Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
15-ஜூன்-201911:55:32 IST Report Abuse

THENNAVANதமிழனுக்கு அழிவு வர பலவழிகள் இப்போ இருக்கு ,ஆனால் புத்தி வரணும்னா எல்லோரும் வெளிநாடுகளுக்குத்தான் போகணும்.இந்தியாவில் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு மிக முக்கியமானது .ஆனால் மக்கள் நல்லவர்களே,அரசியல் தலைவர்கள் மட்டமான தற்குறிகளே, நவோதய பள்ளி இங்கு வந்தால் பல ஆயிரம் வாத்தியர்களுக்கும் வேலை வரும், இன்றுள்ள தமிழகத்தில் அயல் மொழிகள் பேசும் தொழிலாளிகளை கணக்கெடுத்தால் நம் மக்களைவிட அயலார் அதிக எண்ணிக்கைல தமிழகத்தில் ,வேலையும் தொழிலும் செய்கிறார்கள் அவர்களை நாம குறை சொல்வதை விட நம்மவர்களுக்கு அந்த வேலைகளை கொடுக்க முடியாத இருக்கும் சூழ்நிலை என்ன அப்படினு நாம யோசிக்கணும்.அப்படி உண்மையான நம் மக்களுக்கு வேலை கிடைக்க என்ன செய்யணுமோ அதை ஏன் நாம ஒன்றாக சேர்ந்து செய்யக்கூடாது யோசிங்க .மதத்தை எதிர்த்தால் பணம் வரும் ஆனால் வேலை வருமா ,மொழிகளை எதிர்த்தால் பணம் வரும் ஆனால் வேலை கிடைக்குமா தமிழ் தெரியாதவனுக்கு தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி டெபார்ட்மெண்ட்ல என்ஜினீயர் வேலை கொடுக்கும் அளவிற்கு நமது மாநில அரசு இறங்கிவிட்டதற்கு என்ன காரணம் இந்த மாநிலத்தில் நாம் சரி இல்லையா அல்லது இந்த மாநிலத்தின் ஆட்சியாளர்கள் சரி இல்லையா யோசிங்க மக்களே. ...

Rate this:
Anand - chennai,இந்தியா
11-ஜூன்-201915:20:33 IST Report Abuse

Anandமுதலில் சீனா அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதை விட்டுவிட்டு நல்ல சிந்தனையோடு உலக நாடுகளிடம் சுமூகமாக ஒன்றிப்போக கற்றுக்கொள்ளட்டும். அவனவனுக்கு வந்தால் தான் தெரியும் வயித்துவலினா என்னன்னு....

Rate this:
மேலும் 13 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X