பொது செய்தி

தமிழ்நாடு

புதிய பாட திட்ட புத்தகத்தில் மாணவன் படம்

Added : ஜூன் 10, 2019 | கருத்துகள் (9)
Advertisement
புதிய பாட திட்ட புத்தகத்தில் மாணவன் படம்

சென்னை: தமிழக அரசின் புதிய பாடத்திட்ட புத்தகத்தில், அரசு பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

ஈரோடு மாவட்டம், கனி ராவுத்தர் குளம், சி.எஸ்.நகர் பகுதியில் வசிப்பவர், பாட்ஷா; இவரது மனைவி அப்ரோஸ் பேகம். இவர்களின் மகன், முகம்மது யாசின். எட்டு வயதான இந்த சிறுவன்.சின்ன சேமூர் அரசு தொடக்கப் பள்ளியில், தற்போது மூன்றாம் வகுப்பு படிக்கிறான்.

இந்த மாணவன், 2018ல் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, பள்ளி இடைவேளை நேரத்தில், வெளியே சென்றான். அப்போது, பள்ளி அருகே சாலையில், ஒரு பை கிடந்தது. அதில், பணக் கட்டுகள் இருந்தன. உடனே, அந்த பையை எடுத்த யாசின், அதை, தன் வகுப்பு ஆசிரியையிடம் ஒப்படைத்தான்.

ஈரோடு, கனிராவுத்தர்குளம் சி.எஸ்.நகரை சேர்ந்த சிறுவன் முகமது யாசின், ஈரோடு சின்ன சேமூர் அரசு தொடக்கப்பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்தாண்டு ஜூலையில், பள்ளியில் விளையாடி கொண்டிருந்த யாசின், சாலையில் கிடந்த பணப்பையை கண்டெடுத்து, ஆசிரியரிடம் கொடுத்துள்ளார். அதில், 50 ஆயிரம் பணம் இருந்துள்ளது. சிறுவனின் நேர்மையை பாராட்டிய ஆசிரியர்கள், அந்த பணத்தை, சிறுவனின் கையாலயே, மாவட்ட காவல்துறை எஸ்.பி.,யிடம் நேரடியாக ஒப்படைக்க செய்தனர். போலீசாரும், பரிசு கொடுத்து சிறுவனை பாராட்டினர். நடிகர் ரஜினிகாந்தும் சிறுவனை வரவழைத்து பாராட்டினார். இந்தச் செய்தி பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வைரலானது. இந்த நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் 2ம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் சிறுவன் யாசின் பற்றிய செய்தி இடம் பிடித்திருக்கிறது. நேர்மையை வலியுறுத்தும் வகையில், 'ஆத்திசூடி நேர்பட ஒழுகு' என்ற தலைப்பில் சாலையில் கிடந்த பணத்தை போலீசாரிடம் ஒப்படைத்த யாசினை, ஈரோடு எஸ்.பி சக்திகணேசன் பாராட்டியபோது எடுத்த புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இதையறிந்து யாசினின் பெற்றோர் பாட்சா- அப்ரோஸ் பேகம், பள்ளி ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அந்த பையுடன் சிறுவனை, போலீஸ் நிலையம் அழைத்து சென்ற ஆசிரியை, அதை போலீசாரிடம் ஒப்படைத்தார்.அவர்களின் நேர்மையை பாராட்டி, சிறுவன், ஆசிரியை மற்றும் பெற்றோரை நேரில் அழைத்து, ஈரோடு மாவட்ட, எஸ்.பி., சக்தி கணேசன் பாராட்டினார்.

இந்த சம்பவம், 'வாட்ஸ் ஆப்' மற்றும் ஊடகங்கள் வழியே பரவியது. அந்த சிறுவனுக்கு, பல தரப்பிலும் பாராட்டுகள் குவிந்தன.இந்நிலையில், அந்த மாணவனின் செயலை, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக்க நினைத்த, தமிழக பள்ளி கல்வித் துறை அதிகாரிகள், அவன் படித்த இரண்டாம் வகுப்பு, தமிழ் பாடப் புத்தகத்திலேயே, அவனது புகைப்படத்தை வெளியிட்டு, பெருமைப்படுத்தி உள்ளனர்.

ஆத்தி சூடியின், 'நேர்பட ஒழுகு' என்ற தலைப்பில், படக் கதையுடன் கூடிய பாடத்தில், 53ம் பக்கத்தில், முகம்மது யாசினின் பெயர் மற்றும் படங்கள் இடம் பெற்றுள்ளன.

புதிய பாட திட்ட பயிற்சிவரும், 17ம் தேதி துவக்கம்தமிழகத்தில், நடப்பு கல்வி ஆண்டில், இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஏழு, எட்டு, 10, பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அமலாகியுள்ளது. இந்த பாடப் புத்தகங்களை புரிந்து, மாணவர்களுக்கு வகுப்பு நடத்த, பள்ளி கல்வி சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதன்படி, பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்துக்கான முதுநிலை ஆசிரியர்களுக்கு, வரும், 17ம் தேதி முதல், பயிற்சி நடத்தப்படுகிறது. ஜூலை, 4 வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amanullah - Riyadh,சவுதி அரேபியா
11-ஜூன்-201921:47:01 IST Report Abuse
Amanullah பாராட்டுக்குரிய செயல்… குழந்தைகள் மனதில் நேர்மையை விதைக்கும் கல்வித்துறைக்கும் பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
K.RANGARAJAN - villupuram,இந்தியா
11-ஜூன்-201917:44:07 IST Report Abuse
K.RANGARAJAN அருமை நாளைய உலகின் தலைவன் நீ
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
11-ஜூன்-201916:41:46 IST Report Abuse
chails ahamad மனதார வாழ்த்துகின்றேன் பிள்ளை யாசீனை மட்டுமல்ல , பள்ளியின் ஆசிரியை அவர்களையும் , பாராட்டுகள் தெரிவித்த மாவட்ட காவல்துறை அதிகாரி அவர்களையும் , நேர்மையின் எடுத்துக்காட்டாக அந்த மாணவனின் நற்செயலை பிற மாணவர்களுக்கும் பாடமாக வெளியிட செய்த கல்வி அதிகாரிகளையும் மனதார பாராட்டியே வாழ்த்துகின்றேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X