பதிவு செய்த நாள் :
கதுவா சிறுமி கொலை வழக்கு
மூவருக்கு ஆயுள்

பதான்கோட்: ஜம்மு - காஷ்மீரின், கதுவா மாவட்டத்தில், 8 வயது பழங்குடியின சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரில், ஆறு பேர் குற்றவாளி என, பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில், மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி, நீதிபதி உத்தரவிட்டார்.

 கதுவா, சிறுமி கொலை, வழக்கு, பதான்கோட், குற்றவாளி


போலீசில் புகார்


ஜம்மு - காஷ்மீரின், கதுவா மாவட்டத்தில் உள்ள, ரசானா கிராமத்தில், பகர்வால் பழங்குடி இனத்தை சேர்ந்த, 8 வயது சிறுமி, கடந்த ஜனவரி 10ல் கடத்தப்பட்டார்.வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை காணவில்லை என, அவரது தந்தை, போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஜனவரி17ல், சிறுமியின் உடல், காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனையில், அந்த சிறுமியை, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி, பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இந்த வழக்கில், ஊர் தலைவர், சஞ்சி ராம், அவரது மகன், விஷால், உறவுக்கார சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணை


இவ்வழக்கில், 4 லட்சம்ரூபாய் லஞ்சம் பெற்று, வழக்கின் முக்கிய ஆவணங்களை அழிக்க முயன்ற, மூன்று சிறப்பு கான்ஸ்டபிள்கள், ஒரு தலைமை கான்ஸ்டபிள், ஒரு சப் - இன்ஸ்பெக்டர் உட்பட, ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்கள் எட்டு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை, ஜம்முவின், கதுவா நீதிமன்றத்தில் நியாயமாக நடக்காது எனக் கருதி, பஞ்சாப் மாநிலம், பதான்கோட் விரைவு நீதிமன்றத்துக்கு மாற்றி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐந்தாண்டு சிறை:


மேலும், இந்த வழக்கு விசாரணையை, கேமராவில் பதிவு செய்யவும், உத்தரவிடப்பட்டது. பதான்கோட்

Advertisement

நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை, இம்மாதம், 3ல் முடிவடைந்தது.

இதையடுத்து, இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, ஊர் தலைவர், சஞ்சி ராமின் மகன், விஷாலை, வழக்கில் இருந்து விடுவித்து, நீதிபதி உத்தரவிட்டார். மற்றொரு சிறுவன், 'மைனர்' என்பதால், அவன் மீதான தீர்ப்பு, ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான, ஊர் தலைவர், சஞ்சி ராம், சிறப்பு போலீஸ் கான்ஸ்டபிள்கள், தீபக் கஜூரியா, பர்வேஷ் குமார் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையும், தலா, 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.

லஞ்சம் பெற்று, ஆதாரத்தை அழிக்க முயன்ற குற்றத்திற்காக, சிறப்பு கான்ஸ்டபிள் சுரேந்தர் வர்மா, தலைமை கான்ஸ்டபிள் திலக் ராஜ் மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் ஆனந்த் தத்தா ஆகியோருக்கு, ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
11-ஜூன்-201914:49:09 IST Report Abuse

ganapati sbஇந்த தண்டனை போதுமானது அல்ல மற்றவர் கொடூரம் செய்ய துணியாத அளவிற்கு கடும் தண்டனை வேண்டும்

Rate this:
hussain - cuddlore,இந்தியா
11-ஜூன்-201911:21:32 IST Report Abuse

hussainஇது எல்லாம் ஒரு தண்டனை குற்றவாளிகள் மேல் முறையீடு செய்து வெளியில் வந்து விடுவார்கள் போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும் ...

Rate this:
11-ஜூன்-201910:54:42 IST Report Abuse

மதுவந்திஇந்த தண்டனை போதாது. இவன் களை கை கால்களை கட்டி பொதுமக்கள் முன் நிறுத்தினால் அவர்களே தீர்ப்பு வழங்குவர் அணுஅணுவாக. சிறுவனா தெளிவாக தப்பு பண்ணி இருக்கான். தூக்கு தண்டனை தந்தால் மட்டுமே மற்ற சிறுவர்களுக்கும் பெற்றோருக்கும் எச்சரிக்கை யாக இருக்கும்.

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X