கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வாகனம், ஓட்டுவோர் ,லைசென்ஸ், ரத்தாகுமா,மருத்துவமனை,சிறைத்தண்டனை, அறிக்கை

சென்னை : 'அஜாக்கிரதையாக, கவனக்குறைவாக, வாகனங்களை ஓட்டி, விபத்துகளை ஏற்படுத்துவோரின் உரிமங்களை ஏன் ரத்து செய்யக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம், கேள்வி எழுப்பி உள்ளது.
மேலும், அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கி, மரணத்தை விளைவிக்கும் குற்றத்துக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்தியது தொடர்பாக, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படியும், அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, சேலையூர் கேம்ப் ரோட்டில், அதிவேகமாக வந்த கார் ஒன்று, சாலையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பை தாண்டி, முன்னால் சென்ற, இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது.

வழக்கு


இதில், இரு சக்கர வாகனங்களில்

பயணித்தவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம், நேற்று முன்தினம் நடந்தது. சம்பவம் குறித்த செய்தி, 'டிவி'க்களிலும், பத்திரிகைகளிலும் வெளியாகின. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நேற்று காலையில், வழக்குகளை விசாரிக்க துவங்கினார். அப்போது, தாம்பரத்தில் நடந்த விபத்து பற்றி குறிப்பிட்டு, கவலை தெரிவித்தார்.

கவனக்குறைவு


நீதிபதி கூறும்போது, 'விபத்துகளின் எண்ணிக்கை, தற்போது அதிகரித்து வருகிறது. பெரும்பாலும், கவனக்குறைவாக, அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்குவதால், இது போன்ற விபத்துகள் நேர்கின்றன. இது மாதிரியான விபத்துகளை தடுக்க, போலீஸ் தரப்பில் எடுக்கப்படும் நடவடிக்கை என்ன' என்று கேட்டார். அரசு தரப்பில் ஆஜரான, கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்,

முகமது ரியாஸ், இது குறித்து போலீஸ் தரப்பில் கேட்டு, பதில் அளிப்பதாக தெரிவித்தார்.

உரிமம் ரத்து


அதைத்தொடர்ந்து, 'கவனக்குறைவாக, அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கி, விபத்துகளை ஏற்படுத்துவோரின் உரிமங்களை, ஏன் ரத்து செய்யக்கூடாது' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், அஜாக்கிரதையாக வாகனங்களை இயக்கி, மரணத்தை விளைவிக்கும் குற்றத்துக்கான சிறைத்தண்டனை, இரண்டு ஆண்டில் இருந்து, 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த சட்டப்பிரிவை அமல்படுத்த, போலீஸ் தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படியும், நீதிபதி உத்தரவிட்டார்.
போலீஸ் தரப்பில் அளிக்கப்படும் அறிக்கையை பரிசீலித்த பின், அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி, வரும், 17ம் தேதி முடிவு செய்வதாக, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rmr - chennai,இந்தியா
11-ஜூன்-201921:29:31 IST Report Abuse

rmrசாலைகளை ஒழுங்காக பராமரிக்காத அதிகாரிகளின் வேலை ரத்தாகுமா? இவர்களின் பணிகுறைவினால் பல விபத்துகள் நடக்கின்றன அதுக்கு என்ன செய்யலாம் ? யாரும் வேண்டும் என்று விபத்து நடத்துவதில்லை அதை புரிந்து கொள்ள வேண்டும் அனால் இவர்கள் வேண்டும் என்றே ஒரு மட்டமான சாலையை போடுகின்றனர் ஆக்கிரமிப்பு செய்ய விடுகின்றனர் அது எல்லாருக்கும் தெரியும் அதை முதல செய்ய சொல்லுங்க

Rate this:
baalaa - Singapore,சிங்கப்பூர்
11-ஜூன்-201918:33:33 IST Report Abuse

baalaaசென்னையில் ஆட்டோக்களை ஒழித்தால் தீர்வு கிடைக்கும் ... இன்னும் மூன்று ஆண்டுகளில் படி படியாக சென்னையில் ஓடும் ஆட்டோக்களை குறைக்கலாம் ... அடுத்த வருடம் முதல் புதிதாக எந்த ஆட்டோவும் ரெஜிஸ்டரேஷன் செய்ய கூடாது ... அதே போல 10 வருடத்துக்கு மேலாக பயன்படுத்திய ஆட்டோ ரெனீவல் அடுத்த ஆண்டு முதல் கட் செய்யலாம் ... ஒன்வே ரோட்டில் எதிர்திசையில் வண்டி ஓட்டுபவனையும் ஒழித்து கட்ட வேண்டும் ... கால் டாக்சி மற்றும் கம்பெனி டிரைவர்களுக்கு வருடம்தோறும் அல்லது ரெண்டு வருடத்துக்கு ஒருமுறை டிராபிக் டெஸ்ட் வைத்து வண்டி ஓட்டலாம் என்று பெர்மிட் கொடுக்க வேண்டும் ... இந்த பெர்மிட் இல்லாத டிரைவர்களுக்கு வண்டி ஓட்ட கொடுக்கும் கம்பெனி மீது நடவடிக்கை எடுக்கலாம் ... லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டுவோரின் வண்டி பறிமுதல் செய்யவேண்டும் ... பத்தாயிரம் ரூபாய் டூவீலருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நான்கு சக்கர வாகனத்துக்கு லட்சம் ரூபாய் கனரக வாகனத்துக்கு அபராதம் விதிக்க வேண்டும் ... டிராபிக் போலீசும் சாராய கடை தெரு ஓரத்தில் நின்று குடித்துவிட்டு வருவோரை மிரட்டி பணம் பண்ணுவதையும் ஹெல்மெட் இல்லாமல் வருவோரை வழிபறிபோல தள்ளிவிட்டு அபராதம் போடுவதையும் மட்டுமே செய்யாமல் அடுத்தவருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வண்டி ஓட்டுவோரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ... எல்லாவற்றிற்கும் மேலாக டிராபிக் ரூல்ஸ் முழுதும் டிராபிக் போலீசுக்கு தெரிந்து இருக்க வேண்டும் .... நடக்குமா ??

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
11-ஜூன்-201916:39:20 IST Report Abuse

Endrum Indianஇதே முறை சரிதானே???

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X