எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கோரிக்கை
24 மணி நேரமும் கடைகள் திறப்பு
இரவில் கூடுதல் மின் ஊழியர்கள் ?

தமிழக அரசு 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளதால் இரவு மின் வினியோக பணியில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கும்படி மின் வாரியத்திற்கு தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

24 மணி நேரம் ,மின் விநியோகம், மின் தடை,ஊழியர்கள் , புகார்


மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம் பல்வேறு திறனில் உள்ள துணைமின் நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டு அதன் உயரழுத்தத்தை குறைத்த பின் வினியோகம் செய்யப்படுகிறது. மின் சாதனங்களில் எப்போதும் மின்சாரம் செல்வதால் அவற்றில் ஏற்படும் பழுது காரணமாக அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

மின் வாரியம் சார்பில் பிரிவு அலுவலகங்களில் 24 மணி நேரமும் செயல்படும் மின் தடை நீக்க பிரிவுகள் செயல்படுகின்றன. இவற்றில் இரவில் மின் தடை தொடர்பாக புகார் அளித்தால் ஊழியர்கள் சரி செய்வர். இந்நிலையில் தமிழக அரசு 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. அதனால் இரவில் மின் வினியோக பணியில் கூடுதல் ஊழியர்களை நியமிக்கும்படி தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து மின் வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்க பொது செயலர் சுப்ரமணியன் கூறியதாவது: ஒரு பிரிவு அலுவலகத்தில் உதவி பொறியாளர் உட்பட 20 பேர் இருக்க வேண்டும்.தற்போது அதில் பாதி பேர் கூட இல்லை. பல கடைகள் வணிக வளாகங்கள் இரவு 11:00 மணிக்கு மேல் செயல்படுவதில்லை. இதனால் இரவில் மின் தேவைகுறையும். இதற்காக துணைமின் நிலையங்கள் கண்காணிப்பு பணியிலும் மின் தடை நீக்க பிரிவிலும் இரவு பணியில் வழக்கத்தை விட குறைந்த ஊழியர்களையே நியமிக்கின்றனர்.

Advertisement

இரவில் மின் தடை ஏற்பட்டதால் அதை சரிசெய்ய அதிக நேரமாவதற்கு குறைந்த ஊழியர்கள் இருப்பதும் முக்கிய காரணம். இந்த சூழலில் அரசு 24 மணி நேரமும் கடைகள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இனி விடிய விடிய மின் தேவை குறையாது. இரவு மின் வினியோகத்தில் வழக்கத்தை விட பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை சமாளிக்க இரவு பணிக்கு அதிகாரிகள் கூடுதல் ஊழியர்களை நியமிப்பதுடன் ஏற்கனவே உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

-நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramanathan - Ramanathapuram,இந்தியா
11-ஜூன்-201917:44:15 IST Report Abuse

ramanathanபகலில் மின்சார பழுது ஏற்ப்பட்டால் நூறு ரூபாய் மின் ஊழியர்களுக்கு அழ வேண்டியுள்ளது. இரவு என்றால் ரூபாய் இருநூறு அழவேண்டும் என்று ஒவ்வொன்றுக்கும் அழ வேண்டும். இதில் எவன் ஒழுங்காக சம்பளத்திற்கு வேலை செய்கிறான்.திருட்டு திமுக கத்துக்கொடுத்தது. ஊழலும் அதிகார துஷ்பிரயோகமும்.

Rate this:
Girija - Chennai,இந்தியா
11-ஜூன்-201914:06:51 IST Report Abuse

Girijaஇந்த இருபத்திநாலு மணி நேர வர்த்தகம் கட்டாயம் இல்லை விருப்பம் இருந்தால் நடத்தலாம் இதை முதலில் தெளிவு படுத்திகொள்ளுங்கள். இந்த இரவு நேர வர்த்தகத்தில் பெரிய அளவு வியாபாரம் இருக்காது அதுவும் செயல்படும் இடங்களுக்கேற்ப தான் சொற்ப அளவு கூடுதல் வியாபாரம் இருக்கும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் ஊழியர்கள் சம்பளம் மின்சாரம் தண்ணீர் காபி டி போன்றவற்றிற்கு ஆகும் செலவிற்கு கூட கட்டுப்படி ஆகாது. துணிக்கடைகள் பாத்திரக்கடைகள் போன்ற சில நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகும்.குடியிருப்பு பகுதிகளில் இருக்கும் கடைகள் இதில் போனியாகாது. மேலும் ஆன் லைன் வர்த்தகம் 24/7 Door Deliveryயுடன் மற்ற பரிசுகளும் தருவதால் அதிக மதிப்புள்ள வர்த்தகம் ஆன் லைனில் தான் நடக்கும். பகல் பொழுதில் ஷாப்பிங் போக முடியாதவர்களுக்கு உபயோகமாக இருக்கும். விற்பனை நேரத்தை வேண்டுமானால் இரவு பத்து மணி வரைக்கும் நீடிக்கலாம்.

Rate this:
R chandar - chennai,இந்தியா
11-ஜூன்-201913:31:59 IST Report Abuse

R chandarHigh time to make electricity distribution to a private firm as like in Mumbai given to Tata power tems for distribution and maintenance and make the choice to be ed by consumer as like in communication tem, there should be option given to the consumer either go to private agency or go to government agency . Mobility to change the provider should be the option of consumer.

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X