கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
டி.ஜி.பி.க்கு எதிராக அவமதிப்பு வழக்கு
பொன் மாணிக்கவேல் தொடர்ந்தார்

சென்னை : தலைமை செயலர் டி.ஜி.பி.க்கு எதிராக அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ளார்.

 டி.ஜி.பி, பொன் மாணிக்கவேல், சிலை கடத்தல், அவமதிப்பு ,வழக்கு,  டிவிஷன் பெஞ்ச், மனு


சிலை கடத்தல் வழக்குகளை விசாரிப்பதற்கு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேலை உயர் நீதிமன்றம் நியமித்தது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி தரவும் அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சிலைகள் தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்து வந்தது.தற்போது தலைமை செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி., சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு எதிராக அவமதிப்பு

மனுவை சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்துள்ளார்.

மனுவில் கூறியிருப்பதாவது:உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பெறாமல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு எஸ்.பி.யாக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். புலன் விசாரணையில் தலையிடும் நோக்கில் அவரை நியமித்துள்ளனர். ஆய்வு கூட்டங்களை கூடுதல் டி.ஜி.பி. நடத்தி என் தலைமையின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளிடம் விபரங்களை கோருகிறார்.

தமிழக அரசும், டி.ஜி.பி.யும் கூடுதல் டி.ஜி.பி. வழியாக புலன் விசாரணையில் குறுக்கிடுகின்றனர். சிறப்பு பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகளை கூடுதல் டி.ஜி.பி. தக்கவைத்து கொள்கிறார். எனக்கு கீழ் பணியாற்ற அவர்களை அனுமதிக்கவில்லை.மூத்த அமைச்சர், டி.ஜி.பி. மற்றும் சிலர் புலன் விசாரணையில் குறுக்கிட முயற்சிக்கின்றனர்.

புலன் விசாரணை விபரங்களை தெரிவிக்கும்படி கூறுவது நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. ௪௩ வழக்குகளின் ஆவணங்கள் காணாமல் போய் உள்ளன. ஆவணங்கள் திருட்டு போனாலோ,

Advertisement

காணாமல் போனாலோ அதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.மாவட்ட போலீஸ் அதிகாரிகளை கேட்டும் காணாமல் போன ஆவணங்கள் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய மறுக்கின்றனர்.

எட்டு இன்ஸ்பெக்டர்கள், 47 சப் - இன்ஸ்பெக்டர்களுக்கு வாகன வசதி வழங்கப்படவில்லை. கும்பகோணத்தில் அலுவலக வசதியும் தங்கும் வசதியும் அளிக்கும்படி அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.சிலை கடத்தல் தடுப்பு தனிப்பிரிவுக்கு அடிப்படை வசதிகள் அளிக்கப்படவில்லை. இதுகுறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மீறப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவை மதிக்காததால் சட்டப்படி அதிகாரிகளை தண்டிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
11-ஜூன்-201916:13:59 IST Report Abuse

K.n. Dhasarathanஅரசு என்ன போட்டியாக விசாரணை நடத்துகிறதா ? சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவு கொடுத்தும் அரசு அதை மீறி அவமதிப்பு செய்கிறதா ? இணையான விசாரணை யார் கேட்டார்கள் ? மக்கள் வரி பணம் வீணாக்கலாமா ? நீதிமன்றம் உடனடியாக தலையிட்டு குட்டு வைத்து, முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

Rate this:
Raj - coimbatore,இந்தியா
11-ஜூன்-201909:11:35 IST Report Abuse

Rajமத சார்பற்ற அரசியல்வாதிகள் ...நம்ம நாட்டு கலாச்சார அடையாளங்களை விற்று தின்று விட்டனர் ...இப்போது இவர் கண்ட இடங்களில் குத்தி எடுக்கிறார் .. இப்போது அரசியல் வியாதிகள் இவரை கண்டால் ஓடுகிறார்கள். கோவிலுக்கு போனால் கூட விமோசனமில்லை . சிவன் சொத்து குல நாசம் என்பது வாக்கு ...இவர்கள் சிவன் சிலையை விற்று தின்றவர்கள்.

Rate this:
svs - yaadum oore,இந்தியா
11-ஜூன்-201907:01:44 IST Report Abuse

svs//.....கடத்தல் தடுப்பு தனிப்பிரிவுக்கு அடிப்படை வசதிகள் ....//........... இதெற்கெல்லாம் தமிழர் தன்மானம் தலை தூக்காதா ??......எவ்வளவோ கற் சிலைகள் பாதுகாப்பில்லாமல் ரோட்டிலும் , சாக்கடை அருகிலும் கொட்டி வைத்துள்ளார்கள் ...... இவர் வந்த பிறகுதான் கொஞ்சம் நம்பிக்கை மீண்டது ...அடிப்படை வசதிகள் இல்லாமல் எப்படி வேலை பார்ப்பார் ??.....இது பற்றி ப ஜெ க கேள்வி கேட்க வேண்டும் ......இந்து மத ஆதரவு என்றால் சிலை கடத்தல் பற்றி ப ஜெ க ஏன் கேள்வி எழுப்ப கூடாது ??.........

Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X