பொது செய்தி

தமிழ்நாடு

கடைகள் 24 மணி நேரமும் திறக்க அனுமதி வேப்பூர் வணிகர்கள் சங்கம் வரவேற்பு

Added : ஜூன் 11, 2019
Advertisement

வேப்பூர் : வணிக நிறுவனங்கள் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் செயல்பட தமிழக அரசு அனுமதி அளித்ததை வேப்பூர் வணிகர் சங்கத்தினர் வரவேற்றனர்.

சென்னை - திருச்சி, கடலூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இதனால், பல மாவட்டங்களுக்கு போக்குவரத்து சிரமமின்றி எளிதில் செல்ல முடிவதால், தினசரி மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும்.இந்நிலையில், வேப்பூர், பஸ் நிலையம், கூட்டுரோடு, சிறுநெசலூர் பகுதிகளில் பாதுகாப்பு காரணத்திற்காக இரவு 10:30 மணிக்கு கடைகளை மூட வேண்டும் என வேப்பூர் போலீசார் உத்தரவிட்டனர். இதனால், வியாபாரம் செய்ய முடியாமல் வணிகர்கள் விரக்தி அடைந்ததுடன், இரவில் வரும் பயணிகள், வாகன ஓட்டிகள் உணவகங்கள், டீக்கடைகள், மெடிக்கல்களின்றி அவதி அடைந்தனர்.இந்நிலையில், தமிழகத்தில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்க அரசாணை வெளியிடப்பட்டது. வேப்பூர் பகுதி வியாபாரிகளின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு இந்த அறிவிப்விப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் வேப்பூர் வணிகர் சங்கத்தினர் வரவேற்றனர். இது குறித்து வேப்பூர் வணிகர் சங்கத் தலைவர் சொல்லழகன் கூறியதாவது.,24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் உள்ள வேப்பூரில் இரவு 10:30 மணிக்கு மேல் கடைகளை திறக்க கூடாது என போலீசார் கெடுபிடி செய்கின்றனர். இதனால், வியாபாரிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டதுடன், அத்தியாவசிய வசதிகளின்றி பயணிகள் சிரமமடைந்தனர். எங்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளாதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X