நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே...| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாளைய நாட்டின் தலைவனும் நீயே நம்பிக்கை கொண்டு வருவாயே...

Added : ஜூன் 11, 2019
குழந்தை, தொழிலாளர்,சுற்றுச்சூழல்,ஐ.நா,21 கோடி

புத்தகம் துாக்கும் வயதில் ஆபத்தான வேலைகள் பார்க்கும் குழந்தைகளை பார்த்தாலே மனம் பதறுகிறது. இந்த பிஞ்சுகள் செய்த பாவம் தான் என்ன என்று எண்ணத் தோன்றுகிறது.

இத்தகைய 'குழந்தை தொழிலாளர்' முறையை ஒழிக்கும் நோக்கத்துடன் ஐ.நா., சார்பில் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'குழந்தைகள் வேலையில் இருக்கக்கூடாது; கனவில் இருக்க வேண்டும்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.


ஆபத்தான சூழல்


குழந்தை தொழிலாளர்களில் சிலர் மோசமான சுற்றுச்சூழல் இடங்களிலும், கொத்தடிமைகளாகவும் ஆண்டுக்கணக்கில் வேலை வாங்கப்படுகின்றனர். போதைப்பொருள் கடத்துதல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இக்குழந்தைகளை ஈடுபடுத்துகின்றனர். எந்த வேலை குழந்தையின் உடல்நிலை, மனம், கல்வி, சுதந்திரம், பாதுகாப்பு உள்ளிட்டவைக்கு பாதிப்பாக அமைகிறதோ, அதுதான் ஒழிக்கப்பட வேண்டிய குழந்தை தொழிலாளர் முறை. கடினமான வேலைகளுக்கு 18 வயதுக்கு மேற்பட்டவர்களையே ஈடுபடுத்த வேண்டும். 15 வயது வரை கல்வி தான் கற்க வேண்டும். விடுமுறை மற்றும் ஓய்வு நேரங்களில் பார்க்கும் சிறிய வேலைகள் ஆகியவை தவறில்லை. இது அவர்களின் முன்னேற்றத்துக்கு தான் வழிவகுக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு வரையறுத்துள்ளது.


21 கோடி


உலகளவில் ஐந்து வயது முதல் 17 வயது வரையிலான 21.8 கோடி பேர் வேலையில் உள்ளனர். இதில் 15.2 கோடி பேர் குழந்தை தொழிலாளர்கள். இதில் 7.3 கோடி பேர் அபாயகரமான பணியில் உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X