பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மதுரை தோப்பூரில்
எய்ம்ஸ் மருத்துவமனை சாத்தியமா?

மதுரை : மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க போதிய சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை இத்திட்டத்திற்காக ரூ.1,264 கோடி கடன் வழங்கும் ஜப்பான் நிறுவனம் நேற்று ஆய்வு செய்தது.

AIIMS,Madurai,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை,மதுரை


தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டுவர விரும்பிய மத்திய அரசு, பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின் மதுரை தோப்பூரை தேர்வு செய்தது. அங்கு 202 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டது. மருத்துவமனை அமைக்க 1,264 கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளித்த மத்திய அரசு, அந்நிதி ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு இணையத்திடம் (ஜிக்கா) கடனாக பெறப்படும் என தெரிவித்தது.

தோப்பூரில் 750 படுக்கை வசதி கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 100 எம்.பி.பி.எஸ்., சீட், 60 பி.எஸ்சி., நர்சிங் சீட்களுடன் கல்லுாரிகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த ஜன., 27ல் மதுரை வந்த பிரதமர் நரேந்திர மோடி இப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் பணிகள் துவங்குவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டது. இதுவரை ஒரு செங்கல் கூட நடப்படவில்லை. இதற்கு நிதி கிடைக்காததும், மத்திய அரசிடம் நிலம் ஒப்படைக்கப்படாததுமே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஜிக்கா அதிகாரிகள் ஆய்வு


இந்நிலையில் நிதி வழங்க முன்வந்த ஜப்பான் அரசின் ஜிக்கா நிறுவன அதிகாரிகள் நேற்று மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள இடத்தை நேரில் பார்வையிட்டனர். தெற்கு ஆசிய இயக்குனர் தாக்கூரோ தக்யூச்சி, டில்லி ஒருங்கிணைப்பாளர்கள் அதித்திபூரி, இவா ஹோரி ஆகியோர் தலைமையிலான இக்குழுவில் எட்டு பேர் இடம்பெற்று இருந்தனர். இவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட போதிய இடம், தண்ணீர், மின் வசதி உள்ளதா என ஆய்வு செய்தனர். நிலத்தை ஒப்படைப்பதில் ஏதேனும் பிரச்னை உள்ளதா, மண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா, போதுமான ரோடு வசதி உள்ளதா, உடனடி போக்குவரத்துக்கு தடைகள் ஏதேனும் இருக்கிறதா என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

நான்கு இடங்களில் ஆய்வு


இக்கேள்விகளுக்கு பிரதமரின் சுகாதார திட்ட இயக்குனர் சஞ்சய் ராய், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பொறுப்பு அதிகாரியான மருத்துவக் கல்வி துணை இயக்குனர் சபீதா, மதுரை மருத்துவமனை டீன் வனிதா, கண்காணிப்பாளர் சங்குமணி ஆகியோர் பதில் அளித்தனர். எவ்வித பிரச்னைகளும் இல்லை என்பதை ஆவணங்கள், வரைபடங்கள் மூலம் சுட்டிக்காட்டினர். மருத்துவமனை அமைய உள்ள பிரதான இடம், எய்ம்ஸ் மருத்துவமனையை இணைக்கும் சாலைகள் என நான்கு இடங்களை ஜிக்கா அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அனைத்து பகுதிகளையும் புகைப்படம் எடுத்தனர்.

அவற்றை பற்றிய குறிப்புகளையும் எடுத்தனர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆய்வு நீடித்தது. இது குறித்து தமிழக அரசின் பொறுப்பு அதிகாரி சபீதா கூறியதாவது:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஜிக்கா நிறுவனத்திடம் நம் மத்திய அரசு கடனுதவி கோரியது. இதற்காகவே ஜிக்கா அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மருத்துவமனை கட்டுவதில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என்பதை நேரில் பார்வையிட்டனர். அனைத்து வகையான சாத்தியக்கூறுகளையும் அவர்களிடம் சுட்டிக்காட்டினோம். அவர்களும் திருப்தியாக உள்ளனர்.

விரைவில் நிதி கிடைத்து விடும். எனவே எய்ம்ஸ் அமைவதில் எவ்வித சிக்கலும் இல்லை. நிதி கிடைத்ததும் பணி துவங்கிவிடும். பகுதிப்பகுதியாக பணிகள் மேற்கொள்ளப்படும். ஒரு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டதும், அதை பயன்பாட்டுக்கு கொண்டுவந்துவிடுவோம். அனைத்து பணிகளும் முடிய 4 ஆண்டுகள் தேவைப்படும், என்றார். இந்த ஆய்வில் திருப்பரங்குன்றம் தாசில்தார் நாகராஜன், வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வியப்பில் ஆழ்ந்த ஜிக்கா அதிகாரிகள்:


எய்ம்ஸ் மருத்துவமனைக்கு முதலில் 202 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 22.24 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி உள்ளனர். 224.24 ஏக்கர் நிலமும் ஒரே இடத்தில் கிடைத்துள்ளது. இந்த இடத்தை ஜிக்கா அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறையின் காண்பித்தனர். பரந்து விரிந்த நிலத்தை பார்த்த அதிகாரிகள் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், 'ஒரே இடத்தில் 200க்கும் அதிகமான ஏக்கர் நிலம் கிடைப்பது எத்தனை அதிர்ஷ்டம்...! இது மருத்துவமனை பணியை விரைந்து முடிக்க உதவும்' என பேசிக்கொண்டனர்.

எப்போது துவங்கி... எப்போது முடியும்...


எய்ம்ஸ் மருத்துவமனை கட்டத் துவங்கியதில் இருந்து 4 ஆண்டுகளில் பணிகள் முடிக்கப்படும். கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதால், உடனடியாக பணிகள் துவங்கிவிடும் என்றும், 2023 ஜனவரியில் மருத்துவமனை பணிகள் முழுமையாக முடிந்துவிடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை.

இப்போதுதான் கடன் வழங்க உள்ள ஜிக்கா அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இது அவர்களுக்கு திருப்தி அளித்ததாகவே தெரிகிறது. இனி ஆய்வு பற்றி விரிவான அறிக்கையை தயார் செய்வர். ரோடு, தண்ணீர், நிலம், போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் தொடர்பான சாதக, பாதக விஷயங்களை பட்டியலிட்டு ஜப்பான் அரசிடம் தாக்கல் செய்வர்.

இதே போன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் என்னென்ன கட்டடங்கள் கட்டப்படும், அவை எங்கு அமையும் மற்றும் இதர வசதிகள் பற்றிய விரிவான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கும் பணியை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளும். பின் ஜப்பான் அரசிடம் மத்திய அரசு வழங்கும்.

ஜிக்கா அதிகாரிகளின் அறிக்கை, நம் அரசின் 'மாஸ்டர் பிளான்' ஆகியவை திருப்தி அளித்தால், கடனுதவி வழங்க ஜப்பான் அரசு அனுமதி வழங்கும். அதன் பிறகே மத்திய அரசுக்கு ஜிக்கா கடன் தரும். இப்போது 1,264 கோடி ரூபாய் தேவைப்படும் என கணிக்கப்பட்டாலும், ஜிக்கா குழுவினரே எவ்வளவு வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்வர். நிதியின் அளவு குறையவோ அல்லது கூடவோ வாய்ப்புள்ளது.

மேற்கண்ட நடைமுறைகள் முடிவதற்கே பல மாதங்கள் தேவைப்படும் என்பதால், ஏற்கனவே அடிக்கல் நாட்டி இருந்தாலும் கூட பணிகள்

Advertisement

துவங்க தாமதமாகும். ஜிக்கா அதிகாரிகள் திருப்தியடைந்ததால், எய்ம்ஸ் அமைவதில் சிக்கல் ஏற்பட இனி வாய்ப்பில்லை.

3 மணி நேரம் ஆலோசனை


ஆய்வு முடிந்து மதுரை மருத்துவமனைக்கு சென்ற ஜிக்கா அதிகாரிகள் அங்கு ஆலோசனை நடத்தினர். மதுரையின் மக்கள் தொகை, எய்ம்ஸ் அமைந்தால் பயன்பெறும் பகுதியினர் மற்றும் கட்டட விவரங்கள் பற்றி கேட்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் சங்குமணி விரிவாக விளக்கினார். காலை 11:00 மணி முதல் பகல் 2:00 மணிவரை இந்த ஆலோசனை நீடித்தது. மதுரை மருத்துவமனையில் 325 கோடி ரூபாயில் பொது அறுவைசிகிச்சை அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிதியையும் ஜிக்கா வழங்குகிறது. இத்திட்டம் பற்றியும் ஆலோசனை கூட்டத்தில் பேசப்பட்டது.

பெட்ரோல் பைப் லைனால் பீதி


தோப்பூரில் மருத்துவமனை அமைய உள்ள இடத்தின் ஒரு பகுதியில், மதுரை-திருச்சி-சென்னை இடையேயான இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் பதித்த பெட்ரோல் பைப் லைன் கடந்து செல்கிறது. பிற்காலத்தில் இதனால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஆபத்து ஏற்படலாம் என தகவல்கள் பரவின. அந்த இடத்தை ஜிக்கா நிறுவன ஊழியர்கள் பார்வையிட்டனர். ஆனால் பெட்ரோல் பைப் லைனால் எவ்வித பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறையினர் விளக்கம் அளித்தனர்.

அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பெட்ரோல் பைப் லைன் செல்லும் இடத்தில் எவ்வித கட்டடங்களும் கட்டப்படமாட்டாது. இதற்காக 20 அடி நீளம் இடம் விடப்படும். மேலும் இருபுறமும் பூங்கா வைத்து பராமரிக்கப்படும். எய்ம்ஸ் கட்டடத்துக்காக ஏற்கனவே இந்தியன் ஆயில் கார்பரேஷனிடம் தடையில்லா சான்று பெறப்பட்டுள்ளது, என்றனர்.

'நிலத்தை ஒப்படைத்துவிட்டோம்'


மத்திய அரசிடம் நிலத்தை ஒப்படைப்பதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறதே என மருத்துவக்கல்வி துணை இயக்குனர் சபீதாவிடம் கேட்டபோது, 'இதில் எந்த சிக்கலும் இல்லை. மாறாக பல நன்மைகள் தான் உள்ளன. அதாவது எய்ம்ஸ் அமைய உள்ள ஒட்டுமொத்த இடமும் சுகாதாரத்துறை வசமே உள்ளது. இதனால் வேறு துறையிடம் இருந்து நிலத்தை பெற வேண்டிய தேவையில்லை. இந்நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைக்க எவ்வித தடையும் இல்லை என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை முதன்மை செயலர் பீலா ராஜேஷ் அனுமதி வழங்கி உள்ளார்.

அதன்படி நிலம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. தற்போது இதை ஆவணப்படுத்தும் பணி நடக்கிறது. இதுவும் விரைவில் முடிந்துவிடும். நிதி கிடைக்க இன்னும் நாட்கள் உள்ளன என்றாலும், முதற்கட்டமாக சுற்றுச்சுவர் கட்ட 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியை மேற்கொள்ள டெண்டரும் விடப்பட்டுள்ளது. இருவாரங்களில் இப்பணி துவங்கும்' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
14-ஜூன்-201916:32:06 IST Report Abuse

RAMESHthis case not only for Tamil Nadu.. 2014 the BJP govt announced @ Orissa but since no work started there...

Rate this:
chails ahamad - doha,கத்தார்
11-ஜூன்-201923:43:13 IST Report Abuse

chails ahamadஎதற்கும் பயன்படாத பெருமை பீற்றி கொள்ள மட்டுமே பயனாகிய சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையமைக்க மூவாயிரம் கோடி மக்கள் வரி பணத்தை விரயம் செய்த பா ஜ ஆட்சியாளர்கள், மக்களுக்கு பயனாகிய எய்ம்ஸ் அமைத்திட ஆயிரம் கோடியை வெளிநாட்டில் கடனாக பெற முயற்சிப்பதை கவனத்தில் கொண்டால் , உயிரற்ற சிலையமைக்கவே மக்களின் வரி பணத்தை விரயம் செய்வதில் பா ஜ வினர்கள் முதன்மையானவர்கள் என்பதை நம்மால் உணர முடிகின்றது, இன்னும் என்னனென்ன கூத்துகளை அரங்கேற்றுவார்களோ என்பதை எண்ணி மனதும் பதைக்கின்றது .

Rate this:
11-ஜூன்-201920:54:02 IST Report Abuse

ஆப்புமாசம் ஒரு லட்சம் கோடி gst வசூலாவுதுன்னு பீத்திப்பாங்க. எய்ம்ஸ் கட்டுறேன்னு எலிகாப்டர்ல வந்து குதிப்பாங்க..கடசீல ஜப்பானுக்குப் போய் கடன் கேட்டு வாங்கிட்டு வருவாங்க. உலகத்தரம், உலகத்தரம்ங்கறாங்களே அது இதுதானா? தெரியாம போச்சே...இன்னும் இதுமாதிரி எத்தனை திட்டங்களுக்கு எந்தெந்த நாடுகள் கிட்ட கடன் கேட்டிருக்கீங்க?

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X