பொது செய்தி

இந்தியா

அரசு மீது மக்கள் நம்பிக்கைக்கு அதிகாரிகளே காரணம்: மோடி

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (26)
Advertisement

புதுடில்லி: மத்திய அரசின் அனைத்து துறை செயலர்களையும் சந்தித்த, பிரதமர் நரேந்திர மோடி, 'அரசு மீது மக்கள் நம்பிக்கை வைப்பதற்கு, அதிகாரிகளே முக்கிய காரணம்; மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பணியாற்ற வேண்டும்' என, தெரிவித்தார்.






சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அபார வெற்றி பெற்று, நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார். மத்திய அரசின் அனைத்து துறை செயலர்களையும், நேற்று அவர் சந்தித்தார்.

அவர் கூறியதாவது: சமீபத்தில் நடந்த தேர்தலில், அரசுக்கு ஆதரவான நிலையை மக்கள் எடுத்துள்ளனர். இந்த அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதற்கு, நம் திட்டங்களும், அதை சிறப்பாக செயல்படுத்தும் அதிகாரிகளே முக்கிய காரணம். அதே நேரம், தற்போதுள்ள நிலையிலேயே இருப்பதற்கு மக்கள் விரும்பவில்லை; தங்களுடைய வாழ்க்கை தரம் உயர வேண்டும் என்று, விரும்புகின்றனர்.





மக்களின் வாழ்க்கை தரம் உயரும் வகையிலும், நாடு மேம்படும் வகையிலும், அனைத்து துறை செயலர்களும் செயல்பட வேண்டும். மக்களின் இந்த எதிர்பார்ப்புகளை, சவால்களாக பார்க்காமல், நமக்கு கிடைத்துள்ள நல்ல வாய்ப்பாக பார்க்க வேண்டும். 'மேக் இன் இந்தியா' திட்டத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நாட்டில் தொழில் செய்வதை சுலபமாக்க வேண்டும். சிறிய தொழில்களுக்கும், நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், 100க்கும் மேற்பட்ட அரசு துறை செயலர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் பேசிய, கேபினட் செயலர், பி.கே.சின்ஹா, ''ஒவ்வொரு துறையிலும், மக்களிடையே தாக்கம் ஏற்படுத்தும் வகையில், உடனடியாக ஒரு நல்ல திட்டம் செயல்படுத்த வேண்டும். இதற்கான, அனுமதியை, 100 நாட்களுக்குள் பெற வேண்டும்,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
11-ஜூன்-201922:04:18 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இப்படித்தாங்க பேசனும் சொல்லனும் பெருந்தன்மைக்கு அழகு. எழிதி கொடுத்ததை பார்த்து படிப்பதா பெருமை. சிலர் அப்படித்தான் மார்தட்டிக்கொள்கின்றனர். மாண்பமை பிரதமர் மோடியைப்போல சீமானும் பேசுகிறார் பாராட்டலாம் . பிற ரால் உயர்ந்தேன் என்போரே மேலும் மேலும் உயர்வர்.
Rate this:
Share this comment
Cancel
P.Rengaraj - Madurai,இந்தியா
11-ஜூன்-201916:51:40 IST Report Abuse
P.Rengaraj புழுதி வாரி தூற்றினார்கள். மாதம் ஆறாயிரம் தருகிறார்கள் என்றால் அவர்களுக்கே ஒட்டு என்று மக்களை திசை திருப்பினார்கள். நாட்டின் நிதி நிலைமை பற்றி யாரும் பேசவில்லை. ஏழைகளே இல்லாமல் செய்து விடுவோம் என்று அறைகூவல் விடுத்தனர். அவர்களை நம்பி மக்கள் எப்போதுமே ஏமாறுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜூன்-201916:35:09 IST Report Abuse
Bhaskaran இந்த தேர்தலில் அதிமுகவுக்கு குழிவெட்டியதுக்கு அதிகாரிகளும் ஒருகாரணம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X