அதிகாரிங்க பலரும் கரப்ஷன்... : ஆர்டர் அடிக்குதாம் கார்ப்பரேஷன்!| Dinamalar

அதிகாரிங்க பலரும் 'கரப்ஷன்'... : ' ஆர்டர் ' அடிக்குதாம் கார்ப்பரேஷன்!

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019
Share
வராண்டாவில் அமர்ந்திருந்த சித்ரா, அன்றைய தினம் வந்திருந்த நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள். காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றிருந்த மித்ரா, ''அக்கா, காய்கறி விலை எக்குத்தப்பா ஏறிப்போயிடுச்சு. அசைவத்துக்கு மாறிடலாம் போலிருக்கு,'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள்.''வர, வர என்ன ஆராய்ச்சி பண்றாங்கன்னே தெரியலை. சொல்ற 'ஸ்டேட்மென்ட்' ஒருவிதமா இருக்கு. சூழல் ஒரு
 அதிகாரிங்க பலரும் 'கரப்ஷன்'...  : ' ஆர்டர் ' அடிக்குதாம் கார்ப்பரேஷன்!

வராண்டாவில் அமர்ந்திருந்த சித்ரா, அன்றைய தினம் வந்திருந்த நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள். காய்கறி மார்க்கெட்டுக்கு சென்றிருந்த மித்ரா, ''அக்கா, காய்கறி விலை எக்குத்தப்பா ஏறிப்போயிடுச்சு. அசைவத்துக்கு மாறிடலாம் போலிருக்கு,'' என்றபடி, வீட்டுக்குள் நுழைந்தாள்.''வர, வர என்ன ஆராய்ச்சி பண்றாங்கன்னே தெரியலை. சொல்ற 'ஸ்டேட்மென்ட்' ஒருவிதமா இருக்கு. சூழல் ஒரு விதமா இருக்கு...'' என, அங்கலாய்த்தாள் சித்ரா.''ஏன்கா... என்னாச்சு...?''''என்னத்த சொல்றது, இன்னும், 2 அல்லது, 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்னு வானிலை ஆராய்ச்சி மையத்துக்காரங்க சொல்லியிருக்காங்க. ஆனா, ஊரே, 'ஜில்'லுன்னு இருக்கு. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், மழை பெய்ய ஆரம்பிச்சிடுச்சு. வானிலை மையத்துல இதுக்கு முன்னால இருந்தவங்க கணிச்சு சொன்னது, ரொம்ப துல்லியமா இருந்துச்சு. இப்ப கணிக்கிறது தலைகீழா இருக்குது. அதை சொன்னேன்,'' என்றாள் சித்ரா.''புது கலெக்டர் ராஜாமணியை பார்த்து, அதிகாரிங்க நடுங்குறாங்களாமே...'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.''ஆமாப்பா, அவரது கவனத்துக்கு போற எந்த விஷயமா இருந்தாலும், துணிச்சலா நடவடிக்கை எடுக்குறாரு. செக்ரட்டரி தலைமையில, 'ரெவியூ மீட்டிங்' நடந்துச்சு. முக்கியமான அதிகாரிங்க வராம இருந்தாங்க. ஒடம்பு சரியில்லை; லீவுல இருக்காங்கன்னு 'சப்பை' காரணம் சொல்லியிருக்காங்க. 'லெப்ட் அண்டு ரைட்' வாங்குனாரு.''இதனால, இந்த வார மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்துல, அனைத்து துறையினரும் தவறாம கலந்துக்கிட்டாங்க. ஒவ்வொரு வாரமும் கலெக்டரே, நேரடியா மனு வாங்குறாரு. படிச்சுப் பார்த்து, விசாரிக்கிறதுனால, ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் மாவட்ட நிர்வாகம் மீது மக்களிடம் நம்பிக்கை ஏற்பட்டு இருக்கு,'' என, நற்சான்று கொடுத்தாள் சித்ரா.''மாவட்ட அதிகாரி பதவியை கைப்பத்துறதுக்கு ஒரு அதிகாரி, 'பிளான்' போட்டு வேலை செஞ்சாரே...'' என, பழையதை கிளறினாள் மித்ரா.''அவரா, ஒரு நாளாவது, அந்த 'சீட்'டுல ஒக்காரணும்னு ஆசைப்படுறாரு. இப்ப இருக்கற சூழ்நிலை வாய்ப்பில்லாம இருக்கு. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்த மாசம் 'ரிடையர்' ஆகுறாரு. புதுசா வர்ற அதிகாரி வாய்ப்பு கொடுத்தா உண்டு; இல்லேன்னா, கனவாவே கரைஞ்சிடும்னு, அதிகாரிங்க வட்டாரத்துல பேசிக்கிட்டாங்க,'' என்ற சித்ராவின் மொபைல் போனுக்கு, வெளிநாட்டுல இருக்குற 'முருக கடவுள்' கொண்டவரிடம் இருந்து, 'வாட்ஸ் ஆப் மெசேஜ்' வந்திருந்தது.அதைப்படித்த சித்ரா, ''கார்ப்பரேசன்ல களையெடுக்கப் போறாங்களாமே...'' என, இழுத்தாள்.''ஆமாக்கா, நானும் கேள்விப்பட்டேன். லஞ்சம் வாங்கி, ரெண்டு அதிகாரிங்க சிறைக்கு போயிருக்காங்கள்ல. அதனால, உதவி கமிஷனர்கள், உதவி நகரமைப்பு அலுவலர்கள் டீம்-ஐ மாத்தப்போறாங்களாம். அதுக்கப்புறம், இளம்/ உதவி பொறியாளர்கள், வரி வசூலர்கள், சுகாதார ஆய்வாளர்களை ஏரியா விட்டு ஏரியா, 'டிரான்ஸ்பர்' செய்றதுக்கு, 'பிளான்' போட்டுருக்காங்க,'' என்றாள் மித்ரா.''மித்து, பழமை வாய்ந்த கமிஷனர் குவார்ட்டர்சை இடிச்சுட்டு, புதுசா கட்டுறதா சொல்றாங்களே, உண்மையா,'' என, கேட்டாள் சித்ரா.''அக்கா, அதுல பாதி உண்மை; பாதி, கற்பனை. கமிஷனர் குடியிருப்புல இருந்த ஓட்டு கட்டடத்தை இடிச்சுட்டு, தார்சு கட்டடமா மாத்திக்கிட்டு இருக்காங்க; அவ்ளோ தான். அரசாங்க பணத்தை, அவ்ளோ, 'ஈஸி'யா எடுத்து செலவு செய்ய முடியாதுக்கா; பல கோடி ரூபா செலவு செய்யணும்னா, செக்ரட்டரி 'ஓகே' சொல்லணும். இப்ப இருக்கற செக்ரட்டரி, நிதி விஷயத்துல கறாரா இருப்பாருன்னு கேள்விப்பட்டு இருக்கேன்,'' என்ற மித்ரா, ''உள்ளாட்சி தேர்தல் நடத்துவாங்களா...'' என, அப்பாவித்தனமாய் கேட்டாள்.அதற்கு மித்ரா, ''அரசாங்க தரப்புல, 'ஜெட்' வேகத்துல தயாராகிட்டு இருக்காங்க. வார்டு வாரியா வாக்காளர் பட்டியல் ரெடி பண்ணிட்டு இருக்காங்க. தி.மு.க.,காரங்களும், உள்ளூர் பிரச்னைகளை கிளற ஆரம்பிச்சிட்டாங்க. அ.தி.மு.க.,காரங்க என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காங்க. ஏற்கனவே கவுன்சிலரா, மண்டல தலைவரா, நிலைக்குழு தலைவரா இருந்தவங்க, கார்ப்பரேசன் ஆபீஸ் பக்கம் எட்டிப்பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க,'' என்றபடி, 'டிவி' சுவிட்சை அழுத்தினாள்.பிரபல நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் இறந்த செய்தி, ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதை பார்த்ததும், 'உச்' கொட்டிய சித்ரா, ''சூலுார்ல இடைத்தேர்தல்ல போட்டியிட்ட, தி.மு.க., 'மாஜி' அமைச்சர் பொங்கலுார் பழனிச்சாமி, கடந்த வாரம், கட்சி தலைவரை, அறிவாலயத்துல சந்திச்சிருக்காரு. தோல்விக்கான காரணங்களை பட்டியலிட்டு சொல்லியிருக்காரு.யாரெல்லாம் ஒத்துழைப்பு கொடுக்கலை. ஆளுங்கட்சிக்காரங்கேளாடு யாருக்கெல்லாம் ரகசிய தொடர்பு இருக்குன்னு, புட்டு புட்டு வச்சிருக்காரு. உள்ளடி வேலை செஞ்சவங்க 'லிஸ்ட்' கொடுத்திருக்காரு...''''ஓ... அப்படியா, சங்கதி? அப்ப, கட்சி நிர்வாகிகளை எப்படியும் மாத்துவாங்கன்னு நெனைக்கிறேன்...''''கண்டிப்பா, உள்ளூர் நிர்வாகிகள் மேல, ஏற்கனவே ஏகப்பட்ட புகார் போயிருக்கு. லோக்சபா தேர்தலுக்கு ஸ்டாலின் கோயமுத்துாருக்கு வந்தப்ப, அவரே, கண்கூடா பார்த்தாரே. அப்பவே, செம டோஸ் கொடுத்துட்டு, தொண்டாமுத்துாரிலும், குனியமுத்துாரிலும் திறந்தவெளியில நின்னு, பேசிட்டுதானே போனாரு. அதனால, கண்டிப்பா மாத்துறதுக்கு வாய்ப்பு இருக்கு...'' என்றாள் மித்ரா.குறுக்கிட்ட சித்ரா, ''போலீஸ் தொல்லை தாங்க முடியாம, பட்டறை ஊழியர் ஊரை விட்டே ஓடிட்டாராமே...'' என, இழுத்தாள்.அதற்கு மித்ரா, ''அதுவா, எட்டு மாசத்துக்கு முன்னாடி, கருமத்தம்பட்டி பகுதியில் நடந்த திருட்டு சம்பந்தமா, திருடர்களை பிடிச்சு விசாரிச்சாங்க. தங்க நகைகளை தொண்டாமுத்துார் பகுதியை சேர்ந்த பட்டறை ஊழியர் ஒருத்தரிடம் கொடுத்து, உருக்கியதா சொல்லிருக்காங்க.''அந்த ஊழியரை பிடிச்சு, கேஸ் போட்டுருவோம்னு மிரட்டியிருக்காங்க. பயந்து போன அவர், போலீஸ்காரங்க, கேட்ட 'தொகை'யை கொடுத்திருக்காரு. அடிக்கடி போயி, கரன்சி கறந்திருக்காங்க. பணம் கொடுத்தே ஒருவழியான அந்த நபர், கோவையை விட்டு சென்னைக்கு ஓடிப்போயி, கோழிக்கடையில் வேலை செஞ்சிட்டு இருக்காராம். இது சம்பந்தமா விசாரிச்சா, கருமத்தம்பட்டி போலீஸ்காரங்க, பல பேரோட தலை உருளும்னு பேசிக்கிறாங்க,'' என்றாள்.நாளிதழ் ஒன்றை புரட்டிய சித்ரா, ''இந்த வருஷம் பாடத்திட்டம் சூப்பரா இருக்குன்னு எல்லாரும் சொல்றாங்க. கல்வித்துறை சிறப்பா செயல்படுது,'' என, சர்ட்டிபிகேட் கொடுத்தாள்.அதற்கு மித்ரா, ''கல்வித்துறை சிறப்பா செயல்படுது. நம்மூர்ல இருக்கற அதிகாரிங்க அப்படியில்லையே,'' என, நிறுத்தினாள்.''ஏன், என்னாச்சு...''''அக்கா, வழக்கமா, தமிழ்நாடு பாடநுால் கழகத்துல இருந்து, அனுப்பி வைக்கற புத்தகங்களை, ஒவ்வொரு பள்ளிக்கும் அனுப்புறதுக்கு, பள்ளி கல்வித்துறை நிதி ஒதுக்கியிருக்கு. ஆனா, கோவை மாவட்டத்து, தலைமையாசிரியர்கள் நேரடியா வந்து புத்தகங்களை எடுத்துட்டுப் போகணும்னு, வட்டார கல்வி அலுவலர்கள் உத்தரவு போட்டுருக்காங்க.பெற்றோர் ஆசிரியர் கழகத்திலும் நிதி இல்லாததால, பல அரசு பள்ளிகள்ல, டீச்சர்ஸ் சொந்த பணத்தை போட்டு, புத்தகங்களை எடுத்துட்டுப்போயி, குழந்தைகளுக்கு கொடுத்திருக்காங்க. ஒதுக்குன நிதியை 'ஒதுக்குனது' யாருன்னு, கல்வித்துறை வட்டாரத்துல, பரபரப்பா பேசிக்கிட்டு இருக்காங்க,'' என்றவாறு, சமையறைக்குள் நுழைந்தாள் மித்ரா.''அப்படியா... யாரு அமவுண்ட அடிச்சிருப் பாங்க '' என்றவாறு வாய்பிளந்து அமர்ந்திருந்தாள் சித்ரா.ஒரு நாளாவது, அந்த 'சீட்'டுல ஒக்காரணும்னு ஆசைப்படுறாரு. இப்ப இருக்கற சூழ்நிலை வாய்ப்பில்லாம இருக்கு. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இந்த மாசம் 'ரிடையர்' ஆகுறாரு. புதுசா வர்ற அதிகாரி வாய்ப்பு கொடுத்தா உண்டு; இல்லேன்னா, கனவாவே கரைஞ்சிடும்னு, அதிகாரிங்க வட்டாரத்துல பேசிக்கிட்டாங்க,'' என்ற சித்ராவின் மொபைல் போனுக்கு, வெளிநாட்டுல இருக்குற 'முருக கடவுள்' கொண்டவரிடம் இருந்து, 'வாட்ஸ் ஆப் மெசேஜ்' வந்திருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X