பொது செய்தி

இந்தியா

ஊழல், பாலியல் தொல்லை:12 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (9)
Advertisement
ஊழல், பாலியல் தொல்லை:12 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஒய்வு

புதுடில்லி: ஊழல், மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சொத்து குவிப்பு உளளிட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய 12 உயரதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளித்து மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இது தொடர்பாக மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருமானவரித்துறை இணை இணையக்குனர் அசோக் அகர்வால், அமலாக்கத்துறை உதவி இயக்குனர் ஆகிய இருவர் மீதும் தொழிலதிபர்களிடம் லஞ்சம் கேட்டு மிரட்டியது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளும், வருவாய்ப்பிரிவில் சக்சேனா என்ற உயரதிகாரி மீது ஊழல் மற்றும் பணியிடத்தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து , மற்றொரு வருவாயப்பிரிவு உயரதிகாரி ஹோமி ராஜ்வனேஷ் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 3.17 கோடி சொத்து சேர்த்தது போன்ற குற்றச்சாட்டுகள், என 75-க்கும் மேற்பட்ட புகார் மீதான விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யபட்டு கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.சிலர் ஒய்வு பெற்றனர்.
இவர்களில் 12 மீதான வழக்கு மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் கடந்த சில ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதாக தெரியவந்தது. இவர்கள் அனைவருக்கும் கட்டாய ஒய்வு அளிக்கப்பட்டு பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
11-ஜூன்-201916:34:09 IST Report Abuse
Bhaskaran அவனுக்களையும் வெளியில் தள்ளுங்க
Rate this:
Share this comment
Cancel
venkatan - Puducherry,இந்தியா
11-ஜூன்-201913:34:32 IST Report Abuse
venkatan ஊழலுக்கும் லஞ்சத்துக்கும் சமரசம்.கிடையாது என்று மோடி அவர்கள் சூட்டோடு சூடாக நடவடிக்கை இவங்க 100 நாள் அஜென்டா ல ஏன் போடவில்லை?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
11-ஜூன்-201909:40:48 IST Report Abuse
A.George Alphonse These corrupted persons are to be trailed by special courts and punished severely and their's ill-gotten properties are to be seized and auctioned and the money to be added with our government treaury very fast.These people are already aged and during their lives time only they should be tried and face all the consequences for their deeds which they committed during their services.The VRS should not be as their's punishment and they have to face all the above which are mentioned in my comments.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X