பொது செய்தி

தமிழ்நாடு

அன்று போலே இன்றும் செயல்பாடு மாற்றம் இல்லா அரசு மருத்துவமனை

Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (1)
Advertisement

விருதுநகர்:நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்றார்கள் நம் முன்னோர்கள். ஆனால் இன்றைக்கு நம் வாழ்க்கை அப்படி இருக்கிறதா என்றால், கேள்விக்குறியே. அந்தளவிற்கு புதுபுது நோய்கள் புற்றீசல்கள் போல் உருவாகி கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ துறைக்கு அரசும் பல கோடி ரூபாய் செலவழிக்கிறது.
அரசின் நோக்கம் நிறைவேறுகிறதா என்றால் இல்லை. பல இடங்களில் டாக்டர், நர்ஸ் பற்றாக்குறை. அப்படியே இருந்தாலும் அவர்களின் அலட்சிய சிகிச்சை, மருத்துவமனை சுகாதாரமின்மையால் பலரும் தனியார் மருத்துவமனைகளை நாடும் நிலையே உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு டாக்டர்கள் பற்றாக்குறை, சுகாதாரமின்மை போன்ற பிரச்னைகளால் நோயாளிகள் பாதிக்கின்றனர்.விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சுற்று பகுதியினர் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் 450 க்கு அதிகமான உள்நோயாளிகளும், நாள்தோறும் 1,500 க்கு அதிகமான வெளிநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.
விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையை, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த கடந்த 5 ஆண்டுகளாக பணி நடப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. ஆனால் தரம் மட்டும் இன்றுவரை உயர்ந்தபாடில்லை.விருதுநகரில் அரசு மருத்துவ கல்லுாரியை கொண்டு வர இதுவரை எந்த கலெக்டரும் முயற்சி செய்யதாததால் அடிக்கடி மதுரை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கே இருதய, நரம்பு நோய் உட்பட பல்வேறு நோய்களுக்கு மக்கள் செல்லும் நிலை உள்ளது.மருத்துவ கல்லுாரி இல்லாத மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லுாரிக்கு இணையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என அரசு அறிவித்தும இன்று வரை விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ கல்லுாரி வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.அரசு மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. ஆனால் இங்கு வரும் நோயாளிகளுக்கு ஏற்ப டாக்டர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. இதனால் வெளிநோயாளிகள் பிரிவில் மக்கள் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலையில் உள்ளனர். இரவு நேரங்களிலும் டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், துணைசுகாதார நிலையம் புறநகர் பகுதிகளில் உள்ளன. தாலுகா மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் அரசு மருத்துவமனைகள் உள்ளன. விபத்துக்களால், இங்கு வரும் நோயாளிகளை மாவட்ட தலைமை மருத்துவமனையான விருதுநகருக்கு பரிந்துரைக்கின்றனர். இங்கு ஸ்கேன் வசதி இருந்தும், இப்போது ஸ்கேன் எடுக்க முடியாது, அவசரம் என்றால் மதுரை செல்லுங்கள்' என கூறும் , அலட்சியப் போக்கு தொடர்கிறது. அதுபோல் விருதுநகர் அரசு மருத்துவமனையின் வெளி கட்டமைப்புகள் மிகவும் மோசமாக உள்ளது. விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை கர்ப்பிணிகள் ரத்தப் பரிசோதனைக்காக தனியார் பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் அவலநிலையும் தொடர்கிறது என பொதுமக்கள் புலம்புகின்றனர்.



நேரத்தில் செயல்படாத சிகிச்சை பிரிவு
அரசு மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவு காலை 7:30 மணி முதல் பகல் 12 :00மணி வரையும், மாலை 3:00 முதல் 5:00 மணி வரையும் செயல்பட வேண்டும். இந்த நேரங்களில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இருக்க வேண்டும். ஆனால் விருதுநகரில் காலை 7:30 மணிக்கு செயல்பட வேண்டிய வெளிநோயாளிகள் பிரிவு குறிப்பிட்ட நேரத்தில் செயல்படுவதில்லை. இரவு நேரங்களில் செய்வதறியாமல் அரசு மருத்துவமனையை தேடி வரும் நோயாளிகளை நர்ஸ்கள், கம்பவுண்டர்கள் படுத்தும்பாடு பெரும்பாடாக உள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப டாக்டர்கள் நியமிக்கப்பட வேண்டும்.- -ஜெயலட்சுமி, குடும்பதலைவி, விருதுநகர்

மருந்து, மாத்திரை வாங்க இடையூறுவிருதுநகர் அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் சேதமடைந்துள்ளது. மருத்துவமனை வளாகத்திலே கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இங்கிருந்து உற்பத்தியாகும் கொசுக்கள் நோயாளிகளை பாடாய்ப்படுத்துகிறது. மருத்துவகழிவுகள் வளாகத்திற்குள்ளே கொட்டப்பட்டு வருகிறது. அவற்றை முறையாக அப்புறப்படுத்தவில்லை. இங்கு சில கட்டடங்கள் எதற்கும் பயனில்லாமல் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மருந்து, மாத்திரைகள் வழங்கும் பிரிவு குறுகலான இடத்தில் இருப்பதால் நோயாளிகள் மருந்து மாத்திரை வாங்க இடையூறாக உள்ளது.-- செந்தில், தனியார் ஊழியர், விருதுநகர்


தீர்வு
வெறும் அறிவிப்பு மற்றும் பரிந்துரையோடு நிற்கும் மருத்துவ கல்லுாரியை விரைவில் கொண்டு வர, எம்.பி., எம்.எல்.ஏ., கலெக்டர் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மருத்துவ கல்லுாரி வந்து விட்டால் மருத்துவமனையின் கட்டமைப்பு மற்றும் சிகிச்சை வசதிகளும் உயர்ந்து தரமான மருத்துவம் மக்களுக்கு கிடைக்கும். காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் வெளிநோயாளிகள் பிரிவில் சிகிச்சை அளிக்க கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும். காலை 7:30 மணிக்கே வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவினை செயல்பட செய்ய வேண்டும். வெளிப்பகுதியில் கவுன்டர்கள் அமைத்து மருந்து மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயனற்றுக் கிடக்கும் கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும். மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்தாலே அரசு மருத்துவமனை தனியார் மருத்துவமனைக்கு ஈடாக தரமான மருத்துவமனையாக மாறி விடும்




Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
11-ஜூன்-201916:03:20 IST Report Abuse
K.n. Dhasarathan ஐயா அருமையான கட்டுரை செய்தி . தயவு செய்து இந்த செய்தியை அமைச்சர் மருத்துவர் விஜய பாஸ்கர் அவர்களுக்கும் செயலாளர் மருத்துவர் பீலா அவர்களுக்கும் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா அவர்களுக்கும் அனுப்பி வைத்து ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X