பொது செய்தி

இந்தியா

வரித்துறையில் புல்லுருவிகள் களையெடுப்பு தொடரும்

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (59)
Advertisement

புதுடில்லி: மோடி அரசு பதவியேற்ற சில நாட்களில் அதிரடி நடவடிக்கையாக ஊழல் மற்றும் செக்ஸ் புகார் இருக்கும் அதிகாரிகள் உடனடியாக பணியில் இருந்து விலகி கொள்ளுமாறு மத்திய அரசு கட்டாய ஓய்வு கொடுத்துள்ளது. இது போன்ற அதிரடி நடவடிக்கையால் வருமான வரித்துறை அலுவலர்கள் மத்தியில் 'கிலி' யை உருவாகி உள்ளது.






பா.ஜ.,அரசு நாட்டில் ஊழல், லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு ஏதும் சொல்ல முடியாததால் எதிர்கட்சிகள் வாய் மூடி மவுனித்தன. தற்போது மோடி அரசு 2 வது முறை பொறுப்பேற்றதும் ஊழல் அதிகாரிகள் மீது பார்வையை திருப்பி உள்ளது.
இதன் முதல் கட்டமாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் 12 பேர் பெயர் பட்டியலிடப்பபட்டுள்ளது. இதில் ஊழல் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் என ரகம் பிரிக்கப்பட்டு களை எடுக்கப்படுகிறது.





ஹிட் லிஸ்ட் அதிகாரிகள் விவரம் வருமாறு:
01. முன்னாள் அமலாக்க துறை இணை இயக்குனரும், தற்போதைய வருமான வரித்துறை இணை கமிஷனருமான அசோக்அகர்வால், இவர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்தல் மற்றும் சில தரகர்களுக்கு உடந்தையாக இருத்தல் என்ற புகார் உள்ளது. இவர் மீது சிபிஐ.,யும் வழக்கு பதிவு செய்துள்ளது.
02. எஸ்.கே. ஸ்ரீவத்சவா, இவர் நொய்டாவில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கமிஷனராக உள்ளார். இவர் மீது செக்ஸ் புகார் உள்ளது.
03. ஹோமி ராஜ்வன்ஸ், வருமான வரித்துறை அதிகாரி. இவர் மீது ஊழல் மூலம் அதிக சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் சில ஆண்டுகளுக்கு முன் சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்.
இது போல் மேலும் மொத்தம் 12 பேர் கட்டாய ஓய்வில் செல்லுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மேலும் தொடரும் என கூறப்படுகிறது.


காஷ்மீரில் 2 பேர் அதிரடி நீக்கம்


இது போல் காஷ்மீரில் போதை பொருள் கடத்தும் கும்பலுக்கு துணை போனதாக 2 சிறப்பு போலீஸ் படை அதிகாரிகளை அதிரடியாக பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கை அனைத்து துறைகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
13-ஜூன்-201921:34:47 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN தன் சுய நலத்திற்கு குடும்ப உறவினர்களை உயர்த்தாத அமைச்சர் உறுப்பிநர்களுக்கு மட்டும் தொடர்ந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பை அளிக்கனும் . சொத்து சேத்தோரை வீட்டுக்கு அனுப்பனும். சாகும் வரை அரசு வரிப்பணத்தை வருவாயாகக்கொண்டு வாழ்வோரை அனுமதிக்க கூடாது. கொள்ளை அடித்து வைத்துக்கொண்டு பண்ம் கொடுத்து வாக்கை பெற்று வருவதற்கு முற்றுப்புள்ளி வைக்கனும் அது தான் உண்மையான ஜனநாயகமாக இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
12-ஜூன்-201900:58:36 IST Report Abuse
spr நண்பர் திரு சுந்தரம் சொல்வது சரியே
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
11-ஜூன்-201922:11:10 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN வெரி குட் அதனால்தானே நாட்டு மக்கள் அனைவரும் தங்களை தேர்வு செய்துள்ளனர் .தமிழ்நாட்டில் ஊழல் வாதிகள் ஆதிக்கம் அதாவது ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்திட்டதை பெருமை யோடு பேசிக்கொள்கின்றனர். நிலையானது அல்ல கடன் தள்ளுபடி என்ற பேச்சை நம்பி ஏமாந்து போனமக்கள் உணரணும் இனியாவது. பிறர் சொத்துக்கு ஆசைபடவும் கூடாது ஏமாற்ற நிணைக்கவும் கூடாது. உழைப்பால் உயர நிணைத்தால் ஏற்றம் உண்டு. சட்ட மன்ற தேர்தலில் பார்ப்போம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X