கருத்து சொல்ல சுதந்திரம் உண்டு: உபி., அரசுக்கு சுப்ரீம் கோர்ட் குட்டு

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (81)
Advertisement

புதுடில்லி: உபி.,யில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


உபி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியதாக பத்திரிகையாளர் பிரசாந்த் கன்னோஜியா என்பவர் கைது செய்யப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவரது மனைவி ஜகீசா அரோரா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை கோர்ட் அவசரமாக விசாரிக்க ஏற்று கொண்டது.


கொலையா செய்து விட்டார் ?


இந்திரா பானர்ஜி, அஜய் ரஸ்டோகி தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.மனுவை விசாரித்த நீதிபதிகள்; நாட்டில் கருத்து சொல்லும் சுதந்திரம் உள்ளது. ஒரு கருத்தை வெளியிட்டதற்காக நிருபர்களை கைது செய்வீர்களா ? அவர் என்ன கொலையா செய்து விட்டார் ? மாஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்தது தவறானது. பத்திரிகையாளர் கன்னோஜை உடனடடியாக விடுவிக்கவும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


என்ன அவதூறு பரப்பினார் ?


உபி., முதல்வர் அலுவலகம் அருகே ஒரு பெண், முதல்வர் யோகியை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக பேட்டி அளித்தார். இது தொடர்பாக முதல்வருக்கும் தெரிவித்திருப்பதாக கூறினார். இந்த வீடியோவை தான் நிருபர், பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rm -  ( Posted via: Dinamalar Android App )
11-ஜூன்-201921:19:48 IST Report Abuse
rm Press freedom is a basic right .It should not be misused by the user also it should not be suppressed by the rulers
Rate this:
Share this comment
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
11-ஜூன்-201920:17:14 IST Report Abuse
madhavan rajan கருத்து சொல்ல நிச்சயமாக சுதந்திரம் இருக்கிறது. ஆனால் அந்த கருத்து சொல்வதற்கு ஆதாரம் சமர்ப்பித்தல் அவசியம். ஒரு குடிமகன் திடீரென்று ஜனாதிபதி தினமும் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குகிறார் என்று சொன்னால் அவருக்கு சுதந்திரம் இருக்கிறது என்று விட்டுவிடுவார்களா? அவர் கூறும் கருத்துக்கு ஆதாரம் காண்பிக்கவில்லை என்றால் நிச்சயமாக அது அவதூறு தான். அதற்கான தண்டனையை வழங்க வேண்டும். இது எல்லா மனிதருக்கும் பொருந்தும். ஏனென்றால் பெரிய மனிதர்கள்மீது அதுபோன்ற ஆதாரமற்ற கருத்துக்களை கூறும்போது அது ஊடகங்கள் மூலமாக வேகமாக பரவி மேலும் பலர் அந்த ஆதாரமற்ற கருத்தை பரப்ப ஆரம்பித்துவிடுகிறார்கள். லட்சக்கணக்கானோர் அது போன்று கூறும்போது பலர் அதை உண்மை என்று நம்புவதற்கு சாத்தியமுண்டு. ருசு இல்லையென்றால் அந்த கருத்தை வாபஸ் பெற்று தண்டனை அனுபவிப்பது மிக மிக அவசியம்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
11-ஜூன்-201919:59:52 IST Report Abuse
Ramesh Sargam சரியான குட்டு. இனி நேர்மையான, உண்மையான கருத்துசொல்பவர்களை யாராவது தடுக்கட்டும். அவர்களுக்கு குட்டுமேல் குட்டுதான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X