மாயமான விமானப்படை விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (30)
Advertisement
இந்திய விமானப்படை, விமானம்,

புதுடில்லி: அசாமிலிருந்து, 13 பேருடன் மாயமான இந்திய விமானப் படை விமானத்தின் பாகங்கள் அருணாச்சல பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விமானம் கண்டுபிடிக்கப்பட்டதை இந்திய விமானப்படை உறுதி செய்துள்ளது.

அசாம் மாநிலம், ஜோர்காட்டிலிருந்து, அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள, மேற்கு சியாங் மாவட்டத்துக்கு, இந்திய விமானப் படையின், ஏ.என் - 32 ரக விமானம், ஜூன் 3ம் தேதி மதியம் புறப்பட்டது. இந்த விமானம், இந்திய விமானப் படையில், போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. விமானத்தில், 13 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்ட அரை மணி நேரம் வரை, கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருந்தது. அதற்கு பின், விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இது குறித்த தகவல், விமானப் படை உயரதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. சுகோய் - 30 ரக போர் விமானம் உள்ளிட்ட, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. ராணுவம், மலைவாழ் மக்கள் உள்ளிட்டோர் உதவியுடனும் தேடுதல் பணி நடந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை தேடும் பணி பாதிக்கப்பட்டது.

அசாம் மாநிலம்,ஜோர்காட்டிலிருந்து கடந்த 3ம் தேதி இந்திய விமான படையின் ஏ.என்.32 (An32 )ரக விமானம் அருணாச்சல பிரதேசம் மேற்கு சியாங் பகுதிக்கு புறப்பட்டது. 13 பேர் பயணம் செய்த நிலையில் விமானம் புறப்பட்ட அரை மணி நேரத்திற்குள் மாயமானது. இதையடுத்து சுகோய் -30 ரக போர் விமானம் உள்ளிட்ட, இந்திய விமானப் படை விமானங்கள் மூலம், தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. மோசமான வானிலை காரணமாக விமானத்தை தேடும் பணி பாதிக்கப்பட்டது.






இந்நிலையில், 8 நாட்களுக்கு பின்னர், மாயமான விமானத்தின் உதிரி பாகங்கள், அருணாச்சல பிரதேச மாநிலம் லிபோ என்ற பகுதியில்இருந்து 16 கி.மீ., தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது 12 ஆயிரம் அடி உயரம் உள்ளது. மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை, இந்திய விமானப்படையும் உறுதி செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
11-ஜூன்-201920:56:01 IST Report Abuse
Darmavan நான் பலதடவை சொன்னது போல் இவை விபத்து அல்ல உள்ளேயுள்ள கருப்பு ஆடுகளின் சதி வேலை.
Rate this:
Share this comment
Cancel
Vijay, Tirupur - Tirupur,இந்தியா
11-ஜூன்-201918:00:06 IST Report Abuse
Vijay, Tirupur துல்லிய தாக்குதல் நடத்த முடிந்த நமக்கு நம் நாட்டு ராணுவ வீரர்களை பாதுகாப்பாக அனுப்ப முடியவில்லை செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் அனுப்ப முடிந்த நமக்கு நம் நாட்டு எல்லைக்குள் காணாமல் போன ராணுவ விமானத்தை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை 8 நாட்கள் தேவையா
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
11-ஜூன்-201919:47:30 IST Report Abuse
வல்வில் ஓரி எங்க ஊட்டு ஊறுகாய் ரெண்டு நாளுல கெட்டு போகுது.......இந்த லட்சணத்துல சந்திராயன் தேவையா..? ..சரிங்களா விஜய் சார்..? ...எவ்ளோ நியாயமா கேக்குறீங்க...வேற யாராச்சும் இப்படி யோசிக்குறாய்ங்களா..?...
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
11-ஜூன்-201920:42:53 IST Report Abuse
Darmavanவீட்டுக்குளேயே உட்கார்ந்துகொண்டு வாயில்வந்ததை பேசலாம்.நம் நாட்டில் ஒரு கட்டப்படில்லாமல் அதை செய்பவனுக்குத்தான் தெரியும் நம் நாடு பேச்சுரிமைக்கு அருகதை இல்லை....
Rate this:
Share this comment
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
11-ஜூன்-201917:47:39 IST Report Abuse
S.kausalya ஏம்பா, விமானம் கிழே விழுந்த வுடன் part partaa udainchiraadhaa? அப்படியே இருக்குமா? பயணம் செய்த.13 பேர் கதி என்ன என்று கேட்டு இருக்கலாம்
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
11-ஜூன்-201920:58:09 IST Report Abuse
தமிழ்வேல் இல்லை சக்கரங்கள் வெளியே வந்துள்ளன. அதனால், விழவில்லை என்று சொல்லலாம்.. முடியாத இடமானாலும் இறங்க முயற்சித்திருக்க வேண்டும்.. இறங்கி உருண்டிருக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X