மம்தாவுக்கு தன்வினை தன்னை சுடுமா?

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (24)
Advertisement
மம்தா, மே.வங்கம், ஜனாதிபதி, பிரதமர் மோடி

புதுடில்லி: மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர பிரதமர் மோடிக்கு ஆர்வம் இல்லை என்று கூறப்படுகிறது.

ஒரு சூழ்நிலையை தனக்கு சாதகமாக திறம்பட பயன்படுத்துவதில் மோடி வல்லவர். பா.ஜ., - திரிணாமுல் தொண்டர்கள் மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தில் திரிணாமுல் தலைவர் மம்தாவுக்கு எந்த வாய்ப்பையும் மோடி ஏற்படுத்தி தர மாட்டார். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 3 பா.ஜ., தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தங்கள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக மம்தா கூறுகிறார்.


மேற்கு வங்கத்தில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்று அமித்ஷாவை மோடி கேட்டுக்கொண்டுள்ளார். அங்கு ஜனாதிபதி ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்று அம்மாநில பா.ஜ., தொண்டர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் அப்படி செய்தால் அதை மம்தா தனக்கு சாதகமாக பயன்படுத்தி மீண்டும் அவர் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என மோடி நினைக்கிறார். அது மட்டுமல்லாமல், மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு வரப்பட்டால், அதை அரசியலாக்கி எதிர்க்கட்சிகள் ஒன்று சேர வாய்ப்புள்ளதாகவும் கருதப்படுகிறது. விஷயம் அவ்வளவு முக்கியத்துவம்


புது கவர்னர்


தற்போது மேற்கு வங்க கவர்னராக இருக்கும் கேசரிநாத், அடுத்த மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்குப் பதில், புதுச்சேரி கவர்னராக இருக்கும் கிரண்பேடியைப் போன்ற ஒருவரை கவர்னராக நியமிக்க மத்திய அரசு ஆர்வம் காட்டுகிறது.

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி இருந்தபோது இதே ஐடியாவைத் தான் பின்பற்றினார். திரிணாமுல் தொண்டர்கள், மார்க்சிஸட் கட்சியினரால் கொல்லப்பட்டபோது, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துமாறு அப்போதைய பிரதமர் வாஜ்பாயை மம்தா கேட்டார். வாஜ்பாய் ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து தே.ஜ., கூட்டணியில் இருந்து மம்தா விலகினார். அதன் பிறகு தேர்தலில் மார்க்சிஸ்ட் தோற்று, திரிணாமுல் கட்சியிடம் ஆட்சியை மக்கள் ஒப்படைத்தனர்.


அதே மம்தா, இப்போது அதே வன்முறை வழியை பா.ஜ., தொண்டர்கள் மீது பயன்படுத்துகிறார். இதனாலேயே மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 42 தொகுதிகளில் 18 ல் பா.ஜ., வென்றுள்ளது. அன்று நடந்தது போல, இப்போது பா.ஜ., ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்று மம்தா அஞ்சுகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
12-ஜூன்-201906:58:33 IST Report Abuse
krish மோடி vs தீதி ...... காலம் கட்டாயம் இதற்கு தக்க பதில் சொல்லும். தன் வினை, தன்னை சுடாமல் விட்டதாக சரித்திரம் இல்லை. ஹிட்லர், பிந்த்ரன் வாலே, ஒசாமாபின்லாடன், பிரபாகரன் போன்றவர் இதற்கு உதாரணம்.
Rate this:
Share this comment
Cancel
12-ஜூன்-201900:03:05 IST Report Abuse
ஓசிக்கு அலையும் தமிழன் இந்த தீதீ ஒரு கவுரவமான அரசியல்வாதி போல செயல் படாமல் ஒரு பொம்பளை ரவுடி போல செயல் படுகிறார். சபதங்கள் போடுவது, அறைகூவல் விடுப்பது, மிரட்டுவது, பன்ச் டைலாக் பேசி உசுப்பேத்துவது என்று ரவுடிகளுக்கு உண்டான இலக்கணத்தோடு செயல்படுறார். தீதீ முதலில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், பன்ச் டைலாக் படத்துல நல்லா இருக்கும், நிஜத்துல ஒன்னும் வேலைக்காவாது. இரண்டாவது பன்ச் டைலாக் பேசும் ரவுடிகள் அனைவரும் கடைசி சீன்ல நைய புடைக்கப்பட்டுதான் இருக்கிறார்களே தவிர ஜெயித்தது கிடையாது. அதனால் ரவுடியிசத்தை விட்டுவிட்டு ஆரோக்கியமான அரசியலுக்கு திரும்ப வேண்டும் தீதீ.
Rate this:
Share this comment
12-ஜூன்-201906:41:28 IST Report Abuse
Pannadai PandianHave you seen and moved with bengalis......all talk loudly.....speak ferociouly but you will realize some sort of fear runs always in their heart.Mostly they are cowards, suppressed and poverty stickened. Once there were elites in bengal but at present after communists long rule, only empty head is found....
Rate this:
Share this comment
Cancel
sridhar - Chennai,இந்தியா
11-ஜூன்-201922:19:16 IST Report Abuse
sridhar கிரண் பேடி வந்தால் Mumtaz பேகம் காலில் விழுந்து கதறும். அது வீரம் போல் நடிக்கும் கோழை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X