பொது செய்தி

இந்தியா

பாக்., நக்கல் விளம்பரம்; இந்தியர்கள் எதிர்ப்பு

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (23)
Advertisement

புதுடில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக, விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து பாக்., டிவி சேனல் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.







விங் கமாண்டர்:


ஜம்மு - காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டிலிருக்கும், பயங்கரவாத முகாம்களை, நம் விமானப்படை, குண்டு மழை பொழிந்து அழித்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இறந்தனர். இதையடுத்து, பாக்., விமானப் படை நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது, பதிலடி தரும் முயற்சியில், தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். இதன் பிறகு, 60 மணி நேரம், பாக்., ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தார். இந்திய அரசு தந்த அழுத்தத்தை அடுத்து, மார்ச் 1ல், அவர் விடுவிக்கப்பட்டார். பாக்., பிடியில் அபிநந்தன் இருந்த போது, டீ பருகும் அவருடன், ராணுவ அதிகாரி நடத்திய உரையாடலை பாக்., வெளியிட்டது.


முக்கிய போட்டி:


இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கிய போட்டியான இந்தியா - பாக்., மோதும் ஆட்டம் வரும் 16ம் தேதி(ஜூன் 16, ஞாயிறு) ஓல்டு டிராப்போர்டில் நடக்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்போட்டியை விளம்பரப்படுத்த, பாக்.,கை சேர்ந்த ஜாஸ் டிவி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.






கப் எங்களுக்கு...


அதில் விங் கமாண்டர் அபிநந்தனை போல மீசை வைத்து, நீல நிற ஜெர்ஸி அணிந்த ஒருவர், டீ பருகி கொண்டே கேள்விக்கு விடை அளிப்பது போல உள்ளது. ப்ளேயிங் லெவனில் யாரெல்லாம் விளையாட இருக்கிறார்கள் என்ற கேள்விற்கு, 'நான் இதற்கு பதிலளிக்க கூடாது' என அந்த நபர் கூறுகிறார். டீ எவ்வாறு உள்ளது என்ற கேள்வியை எதிர்கொள்ளும் அவர், 'அருமையாக உள்ளது' என பதிலளிக்கிறார். பின் அவரை அங்கிருந்த போக சொல்ல, அவர் டீ கப்புடன் அங்கிருந்து செல்கிறார். அவரை தடுத்து நிறுத்தி 'கப்' எங்களுக்கு என கப்பை வாங்குகிறார்கள்.


இந்தியர்கள் எதிர்ப்பு:


உலக கோப்பை எங்களுக்கு தான் என பாக்., டிவி சேனல் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே சமயம் இந்த வீடியோ அபிநந்தனை கிண்டல் செய்து எடுக்கப்பட்டதால், இந்தியர்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kalyanaraman - Chennai,இந்தியா
12-ஜூன்-201910:31:41 IST Report Abuse
R.Kalyanaraman பாக்கித்தான் காரன் விஷமம் செய்து கொண்டே இருக்கிறான். ஒரு நாள் செமத்தியாக நம்மிடம் அடி வாங்காமல் வாயை மற்றும் இது போல் செய்யமாட்டான். விஷமம் செய்வது அவன் உடம்பில் ஊறிப்போய் உள்ளது. ஒரு நாள் பாகிஸ்தான் அழிந்து விடும். அது நிச்சயம் நடக்கும்.
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
12-ஜூன்-201910:12:06 IST Report Abuse
DSM .S/o PLM இந்தியன் குடித்து விட்டு கொடுத்த எச்சை கப் ஐ தானே வேண்டும் என்று சொல்கிறான்.. சொல்லிவிட்டு போகட்டும். பாகிஸ்தான் என்கிற நாடே இந்தியன் அனுபவித்து விட்டு தூக்கி எறிந்த எச்சில் பகுதிதான்..
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
12-ஜூன்-201910:08:09 IST Report Abuse
DSM .S/o PLM இந்த நாட்களுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. 1983 லேயே நாங்க கப் வாங்கிட்டோம். அன்று பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் கூறிய கமெண்ட்- அரை இறுதியில் நாங்கள் மேற்கிந்திய அணியிடம் தோற்றோம், அதனால் மேற்கிந்திய அணி இறுதிப்போட்டிக்கு சென்றது. அந்த அணி இந்தியாவிடம் இறுதி போட்டியில் தோற்று விட்டது. ஒருவேளை நாங்கள் இறுதி போட்டியில் இந்தியாவை சந்தித்து இருந்தால் உலக கோப்பையை பாகிஸ்தான் கைப்பற்றியிருக்கும்.. அவர் சொல்லி முப்பத்து ஐந்து ஆண்டுகள் நிறைவேறி விட்டன.. ஆனால் இன்று வரை மருந்துக்கு கூட ஒரு உலக கோப்பை போட்டியிலும் பாகிஸ்தானால் இந்தியாவை ஜெயிக்க முடியவில்லை .. போர்க்களத்தில் மட்டுமல்ல , விளையாட்டு மைதானத்திலும், ஏன் பொருளாதார போட்டியிலும் பாகிஸ்தான் மூக்கறுபடுவது சரித்திரம் சொல்லும் உண்மை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X