பாக்., நக்கல் விளம்பரம்; இந்தியர்கள் எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பாக்., நக்கல் விளம்பரம்; இந்தியர்கள் எதிர்ப்பு

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (23)

புதுடில்லி: உலகக் கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டியை விளம்பரப்படுத்துவதற்காக, விங் கமாண்டர் அபிநந்தனை கேலி செய்து பாக்., டிவி சேனல் வெளியிட்டுள்ள வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.







விங் கமாண்டர்:


ஜம்மு - காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தானின் பாலகோட்டிலிருக்கும், பயங்கரவாத முகாம்களை, நம் விமானப்படை, குண்டு மழை பொழிந்து அழித்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் இறந்தனர். இதையடுத்து, பாக்., விமானப் படை நம் எல்லைக்குள் ஊடுருவ முயன்ற போது, பதிலடி தரும் முயற்சியில், தமிழகத்தை சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன், அந்நாட்டு ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார். இதன் பிறகு, 60 மணி நேரம், பாக்., ராணுவ கட்டுப்பாட்டில் இருந்தார். இந்திய அரசு தந்த அழுத்தத்தை அடுத்து, மார்ச் 1ல், அவர் விடுவிக்கப்பட்டார். பாக்., பிடியில் அபிநந்தன் இருந்த போது, டீ பருகும் அவருடன், ராணுவ அதிகாரி நடத்திய உரையாடலை பாக்., வெளியிட்டது.


முக்கிய போட்டி:


இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் முக்கிய போட்டியான இந்தியா - பாக்., மோதும் ஆட்டம் வரும் 16ம் தேதி(ஜூன் 16, ஞாயிறு) ஓல்டு டிராப்போர்டில் நடக்க உள்ளது. உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்போட்டியை விளம்பரப்படுத்த, பாக்.,கை சேர்ந்த ஜாஸ் டிவி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.






கப் எங்களுக்கு...


அதில் விங் கமாண்டர் அபிநந்தனை போல மீசை வைத்து, நீல நிற ஜெர்ஸி அணிந்த ஒருவர், டீ பருகி கொண்டே கேள்விக்கு விடை அளிப்பது போல உள்ளது. ப்ளேயிங் லெவனில் யாரெல்லாம் விளையாட இருக்கிறார்கள் என்ற கேள்விற்கு, 'நான் இதற்கு பதிலளிக்க கூடாது' என அந்த நபர் கூறுகிறார். டீ எவ்வாறு உள்ளது என்ற கேள்வியை எதிர்கொள்ளும் அவர், 'அருமையாக உள்ளது' என பதிலளிக்கிறார். பின் அவரை அங்கிருந்த போக சொல்ல, அவர் டீ கப்புடன் அங்கிருந்து செல்கிறார். அவரை தடுத்து நிறுத்தி 'கப்' எங்களுக்கு என கப்பை வாங்குகிறார்கள்.


இந்தியர்கள் எதிர்ப்பு:


உலக கோப்பை எங்களுக்கு தான் என பாக்., டிவி சேனல் வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதே சமயம் இந்த வீடியோ அபிநந்தனை கிண்டல் செய்து எடுக்கப்பட்டதால், இந்தியர்கள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X