பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கலைக் கல்லூரியில் 18ல் மூன்றாவது கலந்தாய்வு

Added : ஜூன் 11, 2019
Advertisement

குளித்தலை: குளித்தலை அரசு கலைக்கல்லூரியில், மூன்றாவது கலந்தாய்வு, வரும், 18ல் நடைபெறுவதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். குளித்தலை அடுத்த, அய்யர்மலையில் செயல்பட்டு வரும் அரசு கலைக்கல்லூரியில், நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்ட படிப்புக்கு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இரண்டு கட்டமாக நடந்தது. இந்நிலையில், 20 சதவீத இடங்களை கூடுதலாக சேர்க்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் கவுசல்யா தேவி வெளியிட்டுள்ள அறிக்கை: வரும், 18 காலை, 11:00 மணியவில் மூன்றாம் கட்ட மாணவர்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது. இரண்டு கலந்தாய்வில், 12 இளநிலை பாடப்பிரிவுகளில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வணிகவியல், கணிணி பயன்பாட்டியல், வணிக மேலாண்மை, கணிதவியல், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துவியல், கணிணி அறிவியல் உட்பட பல பாடப் பிரிவுகளில், 545 இடங்களில், 503 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மீதிமுள்ள, 42 இடங்கள், மூன்றாம் கட்ட கலந்தாய்வில், தரவரிசை, இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடைபெற உள்ளது. கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் பெற்றவர்கள், தாமதமாக சமர்ப்பித்த மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X