சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கரூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்

Added : ஜூன் 11, 2019
Advertisement

கரூர்: கரூர் அருகே, குடிநீர் வரவில்லை எனக்கூறி, பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், நெரூர் வடபாகம் பஞ்சாயத்து கிருஷ்ணன் கோவில் தெரு பகுதியில் கடந்த, சில நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பஞ்சாயத்து நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் நேற்று காலை, 8:15 மணிக்கு திருமுக்கூடலூர் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வாங்கல் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X