காங்., தலைவர் ராகுலின் பங்களா பறிப்பு?

Updated : ஜூன் 11, 2019 | Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (25)
Advertisement

புதுடில்லி: டில்லியில் காங்., தலைவர் ராகுல் வசித்து வந்த எம்.பி., பங்களா, காலி என அறிவிக்கப்பட்டுள்ளது.






காங்., தலைவர் ராகுல் கடந்த 2004ம் ஆண்டு முதல் லோக்சபா எம்.பி.,யாக உள்ளார். அப்போது டில்லி, துக்ளக் லேன் பகுதியில் உள்ள 12ம் எண் பங்களாவில் அவருக்கு ஒதுக்கப்பட்டது. எட்டாவது டைப் பங்களாவான இது உச்சபட்ச பாதுகாப்பு வசதி கொண்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதும் தற்போது வரை அந்த பங்களாவே ராகுலுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. 2019 லோக்சபா தேர்தலில், அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோற்றபோதும், வயநாடு தொகுதியில் வென்று லோக்சபாவுக்கு தேர்வாகியிருந்தார்.





இந்நிலையில், லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை ஒன்றில். ராகுல் வசித்து வரும் பங்களா காலி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பங்களா வேறு எம்.பி., அல்லது அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படும். இதுகுறித்து ராகுலுக்கு தகவல் எதுவும் சொல்லப்படவில்லை என தெரிகிறது. இது அக்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முகுந்தன் - குழித்துறை ,இந்தியா
12-ஜூன்-201910:07:48 IST Report Abuse
முகுந்தன் ஏற்ப தகுதியுள்ள அரசு பங்களாக்களுக்கு மாறவேண்டியதுதான் ஜனநாயகம், நியாயமும் கூட. பதவி மாற்றம் வரும் போதும் அதைச் செய்யவேண்டும். அன்றி, பழைய பிரதாபங்களை மனதில் கொண்டு மக்கள் வரிப்பணத்தில் மேலும் மேலும் குளிர் காய நினைக்கக்கூடாது. இப்போது பதவியே இல்லாதவர்கள் கூட அரசு பங்களாக்களை ஆக்ரமித்து வைத்துள்ளதாகத் தெரிகிறது. அவர்கள் எல்லோரும் தானாக முன்வந்து அவற்றை காலி செய்ய வேண்டும். தவறுகின்ற பட்சத்தில் அரசு தேவையான நடவடிக்கையெடுக்க தவறக்கூடாது. தகுதியானவர்களுக்கு தகுதியான வசதிகள் மட்டும் என்ற நிலை இந்தியாவில் என்று தான் நடைமுறைக்கு வருமோ? சாதார மக்களின் எதிர்பார்ப்பு இது..
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
12-ஜூன்-201909:52:04 IST Report Abuse
TamilArasan இவருக்கு மட்டும் என்ன விதிவிலக்கு? சாதாரண MP க்கு என்ன பங்களா கொடுப்பார்களா அதையே கொடுங்க.... அது சரி இவருக்கு திருமணம் ஆகவில்லை ஒண்டிக்கட்டை அப்படி இருக்க தனியாக இருக்கும் அம்மாவுடன் அவருக்கு ஆதரவாய் இருக்கலாமே - காரணம் சோனியாவின் வீடு பிரதமர் மோடி அவர்களின் வீட்டை விட பல மடங்கு பெரிது...
Rate this:
Share this comment
Cancel
southindian - chennai,இந்தியா
12-ஜூன்-201909:09:22 IST Report Abuse
southindian அம்மா ஒரு வீடு மகன் ஒரு வீடு அக்கா ஒரு வீடு குடும்பமே அரசு செலவில் தான் ஓடுகிறது இதில் திருட்டு சம்பாத்தியம் வேறு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X