டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஜூன் 11, 2019 | கருத்துகள் (3)
Share
மா.கம்யூ., பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி: மேற்கு வங்கத்தில், சட்டம்- - ஒழுங்கு மோசமாகத் தான் இருக்கிறது. அதற்காக, ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்தக் கூடாது.டவுட் தனபாலு: சட்டம் - ஒழுங்கு சீர்கேடால், தற்போது பாதிக்கப்படுவது யாரும், உங்க கட்சியினர் இல்லை... அதனால், வேடிக்கை பார்க்கணும்னு சொல்ல வர்றீங்களா... உயிர்களை விட, உங்களின் அரசியல் தான் பெரிதோ என்ற, 'டவுட்'
 'டவுட்' தனபாலு

மா.கம்யூ., பொதுச் செயலர், சீதாராம் யெச்சூரி: மேற்கு வங்கத்தில், சட்டம்- - ஒழுங்கு மோசமாகத் தான் இருக்கிறது. அதற்காக, ஜனாதிபதி ஆட்சியை நடைமுறைப்படுத்தக் கூடாது.

டவுட் தனபாலு: சட்டம் - ஒழுங்கு சீர்கேடால், தற்போது பாதிக்கப்படுவது யாரும், உங்க கட்சியினர் இல்லை... அதனால், வேடிக்கை பார்க்கணும்னு சொல்ல வர்றீங்களா... உயிர்களை விட, உங்களின் அரசியல் தான் பெரிதோ என்ற, 'டவுட்' வருதே...!

***

திரிணமுல் காங்கிரஸ் பொதுச் செயலர், பார்த்தா சட்டர்ஜி: மேற்கு வங்கத்தில் ஆட்சியை கவிழ்க்க, அரசியல் சதித் திட்டம் தீட்டப்படுகிறது. இதை, அனைத்து ஜனநாயக சக்திகளும், ஒன்றுபட்டு எதிர்க்க வேண்டும்.

டவுட் தனபாலு: 'மேற்கு வங்கத்தில், அரசியல் மோதல்கள் அதிகரித்து வருது... மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்துங்க'ன்னு, உள்துறை அறிவுறுத்தியது தப்பா... எதற்கெடுத்தாலும், அனைத்துக் கட்சிகளையும் துணைக்கு அழைக்குறீங்களே... இது, எவ்வளவு துாரம் நீங்க பலவீனமா இருக்கீங்க என்பதை, 'டவுட்'டே இல்லாமல் வெளிக்காட்டுதே...!

***

இந்திய குடியரசுக் கட்சி தலைவர், செ.கு.தமிழரசன்: தலித் இயக்கங்களை ஒருங்கிணைத்து, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோம். தலித் ஒருவரை, துணை முதல்வராக நியமிக்க வேண்டும்.

டவுட் தனபாலு: பொதுவானவராக காட்டிக் கொண்டு, கமல் கட்சியோடு கூட்டணி வைத்தீங்க... எதிர்பார்த்தது கிடைக்காத விரக்தியில், ஜாதியை துாக்கிப் பிடிக்க இறங்கிட்டீங்க... அமைச்சர்களே வியந்து பார்த்து, மயங்கி விழும் அளவுக்கு, சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து தள்ளி வந்தீங்க... அந்த காலகட்டத்தில், இந்தத் துணை முதல்வர் கோரிக்கையை ஏன் வைக்கலை என்ற, 'டவுட்'டைக் கொஞ்சம் விளக்குங்களேன்...!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X