வேலுாரில் அதிவேக கண்காணிப்பு, ரேடார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வேலுாரில் அதிவேக கண்காணிப்பு, 'ரேடார்'

Added : ஜூன் 11, 2019

வேலுார் : வேலுார் மாவட்டத்தில், மூன்று சுங்கச்சாவடிகளில், அதிவேக வாகனக் கண்காணிப்பு, 'ரேடார்' கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்த பின், எஸ்.பி., பிரவேஷ்குமார் அளித்த பேட்டி:தலா, 24 லட்சம் ரூபாய் மதிப்பில், மூன்று கண்காணிப்பு ரேடார் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இவை வாலாஜாபேட்டை, வாணியம்பாடி, பள்ளிகொண்டா ஆகிய டோல்கேட்டுகளில் பொருத்தப்பட்டுள்ளன. 500 மீட்டர் முதல், 1 கி.மீ., துாரத்தில் இருந்து வரும் வாகனங்களின் வேகத்தை, இந்தக் கருவி மூலம் கண்காணிக்க முடியும்.

மேலும், அந்த வாகனத்தின் நம்பர் பிளேட், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, அதன் உரிமையாளர் விபரம் அனைத்தும், ஐபேடில் தெரிந்துக் கொள்ளலாம். வாகனத்தை ஓட்டி வருபவர்கள், மெதுவாக வந்ததாக வாக்குவாதம் செய்தால், 'பிரின்டர்' மூலம், வேகமாக வந்ததைக் காட்டும் படத்தை, துல்லியமாக, 'பிரின்ட்' செய்து காண்பிக்கப்படும்.இதற்கு, 'ஸ்பாட் பைன்' கிடையாது. ஆனால், போக்குவரத்து போலீசார் மூலம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். இதனால், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.இந்தக் கருவிகள், டோல்கேட்களில், நேற்று பொருத்தப்பட்டு, செயல்பாட்டுக்கு வந்தன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X