சேலம் : ''மத்திய அரசு, புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை அமல்படுத்தினால், தமிழகத்தில், 1.75 லட்சம் லாரிகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படும்,'' என, அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாகக் குழு உறுப்பினர், சென்னகேசவன் கூறினார்.அவரது பேட்டி:வரும் பார்லிமென்ட் கூட்டத் தொடரில், புதிய மோட்டார் வாகனச் சட்டம், அமல்படுத்தப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இதன்படி, '20 ஆண்டுகளுக்கு மேலாக, இயக்கத்தில் உள்ள சரக்கு வாகனங்களுக்கான, தகுதிச் சான்றிதழ் வழங்கல் நிறுத்தப்படும்' எனவும் கூறப்படுகிறது.இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்தால், அகில இந்திய அளவில், 17 லட்சம்; தமிழகத்தில், 1.75 லட்சம் லாரிகள் இயக்க முடியாத சூழல் ஏற்படும்.
இதனால், 5 லட்சம் டிரைவர், கிளீனர்களுடன், மேலும் மறைமுக வேலை வாய்ப்பு பெறும், 5 லட்சம் பேர் வேலை வாய்ப்பை இழக்க நேரிடும்.எனவே, இச்சட்டத்தை அமல்படுத்துவதில், கால அவகாசம் வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE