திண்டிவனம் : புதுச்சேரி முன்னாள் முதல்வர், ஜானகிராமன் உடல், சொந்த ஊரில், நேற்று, 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன், நல்லடக்கம் செய்யப்பட்டது.
அரசியல் தலைவர்கள்புதுச்சேரி முன்னாள் முதல்வரும், மாநில, தி.மு.க., முன்னாள் அமைப்பாளருமான, ஜானகிராமன், உடல் நலக்குறைவால், நேற்று முன்தினம் அதிகாலை இறந்தார்.அவரது உடல், புதுச்சேரி, ஆம்பூர் சாலையில் உள்ள, அவரது இல்லத்தில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.புதுச்சேரி முதல்வர், நாராயணசாமி, சபாநாயகர், சிவக்கொழுந்து, முன்னாள் முதல்வர், ரங்கசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின், அவரது உடலை அடக்கம் செய்ய, நேற்று காலை, 8:15 மணிக்கு, சொந்த ஊரான, விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த, ஆலத்துாருக்கு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.
வாகனம் பழுதுவழியில், கூனிமேடு அருகே, இறுதி ஊர்வல வாகனம் பழுதானது. அப்போது, முன்னாள் முதல்வர், ஜானகிராமனுக்கு சொந்தமான பஸ், புதுச்சேரியில் இருந்து, மரக்காணம் சென்றது.உடனடியாக, பஸ்சில் இருந்த பயணியர் இறக்கி விடப்பட்டு, அதில், ஜானகிராமன் உடல் ஏற்றிச் செல்லப்பட்டது.ஆலத்துாரில், பூர்வீக நிலத்தில், அவரது தாய், தந்தை சமாதி அருகே, காலை, 10:18 மணிக்கு, புதுச்சேரி போலீசார், வானத்தை நோக்கி, 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன், உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இறுதிச் சடங்குகளை, அவரது இளைய மகன், ஆறுமுகம் செய்தார். இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில முதல்வர், நாராயணசாமி, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE