பொது செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ., அலுவலகத்தில் சீரமைக்கும் பணி

Added : ஜூன் 11, 2019
Advertisement

அரூர், : 'வாஸ்து' முறைப்படி, அரூர், எம்.எல்.ஏ., அலுவலகக் கட்டடத்தில், சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.கடந்த, 2016 சட்டசபைத் தேர்தலில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, தனித் தொகுதியான, அரூரில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றவர், முருகன். இவர் உட்பட, 18 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர், தனபால், 2017 செப்., 18ல், தகுதி நீக்கம் செய்து, உத்தரவிட்டார்.இதையடுத்து, அரூரில் உள்ள, எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு, வருவாய்த் துறையினர், 'சீல்' வைத்தனர்.

இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட மற்றும் காலியாக இருந்த, 22 சட்டசபைத் தொகுதிகளில், இடைத்தேர்தல் நடத்தப்பட்டு, மே, 13ல், புதிய, எம்.எல்.ஏ.,க்கள் தேர்வு செய்யப்பட்டனர்.அரூர் தொகுதியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த, சம்பத்குமார் வெற்றி பெற்றார். இதையடுத்து, 28ல், அரூர், எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வைக்கப்பட்டிருந்த, 'சீல்' அகற்றப்பட்டது. இந்நிலையில், அரூர் தொகுதி, எம்.எல்.ஏ.,வாக இருந்த, முருகன், 16 மாதத்திலேயே, தன் பதவியை இழந்தார்;

அதனால், வாஸ்து முறைப்படி, எம்.எல்.ஏ., அலுவலகக் கட்டடத்தில் மாற்றம் செய்ய, ஆளுங்கட்சியினர் முடிவு செய்தனர்.தற்போது, எம்.எல்.ஏ., அலுவலகத்தின் கிழக்குப் பகுதியில், வளைவாக உள்ள சுற்றுச்சுவரை மாற்றி, நேராக கட்டும் பணி நடந்து வருகிறது.இப்பணி நிறைவடைந்த பின், எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு, சம்பத்குமார் வருவார் என, அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X